இலங்கை மிக விரைவாக ஆளும் கட்சியுமில்லாத எதிா்க்கட்சியுமில்லாத அராஜக தேசமொன்றாக மாறும்

537

– விக்டர் ஐவன்

கோதாபய ராஜபக்ஸ அவர்களது இந்த அரசாங்கமானது இதற்கு முன்னர் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிபலனாகும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வீழ்ச்சி யடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப் புவதற்கு கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் தேவைப்பட்டிருந்தும் அதனை நிறைவேற்று வதற்கு ராஜபக்ஷ அரசாங்கத்தினால் முடிய வில்லை. இது 2015ம் ஆண்டு அவர்களது தோல்விக்கான முக்கியமான காரணமாகும்.

இதன் பிரதிபலனாக ஆட்சிக்கு வந்த நல் லாட்சி அரசாங்கம் வரலாற்று ரீதியாக அவர் களிடம் வேண்டப்பட்ட சீர்திருத்தங்களை உரிய முறையில் நிறைவேற்றாமல்  அவர்கள் பொய்யையும் ஏமாற்றினையுமே மேற்கொண் டனர். உண்மையான சீர்திருத்தங்களை மேற் கொள்ளாமல் மிகவும் சுயநலமாகவும் சந் தர்ப்பத்திற்கேற்றவாறான சீர்திருத்தங்களை யுமே அவர்கள் மேற்கொண்டனர்.

குறுகிய நிகழ்ச்சி நிரல்

நாட்டின் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க வேண்டியது குறித்த சந்தர்ப்பத்தில் கட்டாய மாக இருந்தும் குறித்த தீர்வை வழங்கும் செயற்திட்டத்தை வழங்காது தாமதப்படுத்தி னர்.

அரசியல் முறைமையில் மேற்கொள்ளப் பட வேண்டியிருந்த முக்கியமான சீர்திருத்த மான ஆளும் கட்சியினர் பொதுச் சொத்துக் களை துஷ்பிரயோகம் செய்வதற்கு வழங்கப் பட்டிருந்த சந்தர்ப்பத்தை இல்லாதொழிப் பது என்ற விடயத்தை மேற்கொள்ளாமல் அந்நிலமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டு அதே சந்தர்ப்பத்தில் ஜனநாயக பெறுமானம் கூடியதாக வெளியில் காணக் கூடிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கே முக்கியத்துவம் வழங்கினர்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த தற் துணிபு மற்றும் விடுபாட்டு அதிகாரத்தை பயன்படுத்தியே பொதுச்சொத்துக்களை விற் பனை செய்வது மற்றும் வாடகைக்கு விடு வது போன்ற விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இதன் காரணமாக அரசாங் கத்தின் பொதுச் சொத்துக்கள் களவாடப் பட்டுக்கொண்டிருந்தன. பாராளுமன்ற உறுப் பினர்கள் பகிரங்கமாகவே அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட னர். இவ்விரண்டு விடயங்களும் அரசியல் முறைமைக்கும் நாட்டிற்கும் பாரிய தீங் கினை ஏற்படுத்திக்கொண்டிருந்த விடயங் கள் என்றாலும் 19ம் யாப்புச் திருத்தத்தில் இவற்றினை இல்லாதொழிக்கும் வகையி லான எந்தவொரு மாற்றங்களும் மேற்கொள் ளப்படவில்லை.

கறுப்புப் பணம்

நாட்டின் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் வியாபாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளும் கறுப்புப் பணத்தில் செயற்படு வதும் இலங்கையின் அரசியல் முறைமை யின் சீர்கேட்டுக்கு இன்னொரு முக்கிய காரணியாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான அபேட்சகர் ஒருவரின் செலவான ஏறக்குறைய 3 பில் லியன்களில் பெரும்பாலான தொகையானது போதைப்பொருள் வியாபாரிகளது பணத் திலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

ஜனநாயக அரசியல் முறைமை காணப் படும் எல்லா நாடுகளிலும் தேர்தல் செலவு களை மட்டுப்படுத்தக்கூடிய சட்டங்கள் காணப்படுகின்றன. இலங்கையிலும் 1977ம் ஆண்டுவரை இவ்விடயம் காணப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுக்கள் காணப்படுகின்ற அனைத்து நாடுகளிலும் கட்சியின் நிதி மற் றும் தேர்தல் நிதியை கட்டுப்படுத்துவதற்காக மற்றும் கட்சிகளின் உள்ளக செயற்பாடுகள் ஜனநாயக முறையில் அமைவதை உறுதிப் படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழு விற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையின் தேர்தல் ஆணைக் குழுவிற்கு இவ்விரண்டு அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. இது தெரியாமலோ தவறாகவோ இடம்பெற்றதொரு விடய மல்ல. மாறாக இது காணப்படுகின்ற மோச மான அரசியல் முறைமையை மறைப்பதற் காக காணப்படும் சில அலங்காரங்களாகவே இங்கு சில ஜனநாயக முறைமைகளாகக்  காணப்படுகின்றன.

தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் ஆணைக்குழுவில் காணப்படும் இந்தக் குறைபாடானது 19இற்கு முன்னர் கலந்துரையாடப்பட்ட விடயமல்ல. மாறாக இவ்விடயம் 17ம் திருத்தம் கொண்டுவரப் படும் சந்தர்ப்பத்திலேயே கலந்துரையாட லுக்குள்ளாகிய விடயமாகும். இது தொடர் பாக 2009ம் ஆண்டே நான் பின்வருமாறு கூறியிருந்தேன்.

“தேர்தல் ஆணையாளரின் கருத்துப்படி 17ம் திருத்தத்தை கொண்டுவந்தவர்கள் அது தொடர்பாக எந்தவொரு விடயத்தையும் கலந்துரையாடியிருக்கவில்லை. இதன் மூலம் 17ம் திருத்தத்தை மேற்கொண்டவர்கள் தொடர்பான மட்டுப்பாடுகளை புரிந்து கொள்ள முடியுமாகவிருக்கின்றது. இந்த சீர் திருத்தை மேற்கொண்டவர்கள் இதனை நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற் கொண்டிருந்தாலும் அதனை அவசரத்தில் மேற்கொண்டுள்ளனர். ஆழமான ஆய்வின் றியே குறைந்தபட்சம் தேர்தல் ஆணையாள ரின் கருத்தைக்கூட அவர்கள் பெற்றிருக்க வில்லை. அது மாத்திரமன்றி அண்டை நாடான இந்தியாவின் தேர்தல் ஆணைக்குழு தொடர்பான விடயங்களைக்கூட பார்த்த தாகத் தெரியவில்லை. (-17வது திருத்தம் மற்றம் தேர்தல் ஆணைக்குழு 19.04.2009 -ராவய”)

இக்கட்டுரையிலேயே கூறப்பட்ட மற்று மொரு விடயம்

“ஜனாதிபதி முறைமையின் கட்டமைப்பு தொடர்பான உரிய அவதானமின்றியே 17ம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டி வைப்பதற்காக உரிய சக்தியற்ற கயிற்றி னாலேயே அதிகாரங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக கட்டினை அவிழ்ப்பது இலகுவானதாகும். இதன் காரணமாக மேற் கொள்ளப்பட்ட மாற்றங்கள் பயனற்ற மாற் றங்களாக மாற்றமடைகின்றன. 17ம் திருத்தத் திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியமைக் கான காரணம் அது சட்டபூர்வமானது என் பதற்காகவன்றி அச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளிலிருந்து அதனைக் காப்பாற்றுவதற்காகவே.

குறித்த திருத்தமானது யாப்புக்கு முரணா னது என்ற விடயத்தை அப்போதைய ஜனா திபதி குமாரதுங்க அவர்களும் தெரிந்து வைத் திருந்தது மாத்திரமன்றி ஜனாதிபதியாவதற் குக் கனவு கண்டு கொண்டிருந்தவர்களும் அதனை தெரிந்தேயிருந்தனர். இதன் காரண மாக இவ்விடயத்தில் ஆட்சியாளர்களன்றி மக்களே ஏமாற்றப்பட்டனர். ”

சுயாதீன ஆணைக்குழுக்கள்

நாட்டிலுள்ள அரச நிறுவனங்கள் ஊழ லும் மோசடியும் நிறைந்து காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அரசியல் தலையீடின்றி சுயா தீன ஆணைக்குழுக்களுக்கு நபர்களை நிய மிப்பதால் மாத்திரம் குறித்த நிறுவனங்களை சிறந்த நிறுவனங்களாக மாற்ற முடியாது. நாட்டின் நீதிமன்றம் பாரிய வீழ்ச்சி அடைந்த நிலையில் காணப்பட்டது. நீதிபதிகளை நியமிக்கும்போது அரசியல் தலையீடின்றி நியமிப்பது முக்கியமான விடயமாகும். ஆனால் குறித்த விடயத்தினால் மாத்திரம் சுயாதீனமான நீதிமன்றமொன்றை உருவாக்க முடியாது. ஆனால் இந்த ஆணைக்குழுக் களை உருவாக்கியவர்கள் இதன் மூலம் சுயாதீன நீதிமன்றம் ஒன்றை உருவாக்க முடியும் எனக் கருதியதோடு அது தொடர்பாக பகிரங்கமாகக் கருத்துக்கூறியும் வந்தனர்.

ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஆணைக் குழுக்களை நடாத்திச் செல்வதற்கான செலவு மிக அதிகமாகும். அதிகமான ஆணைக்குழுக் களின் செலவுகளை ஒப்பிடும் போது அத னால் வழங்கப்படும் சேவை மிகக் குறை வானதாகும். நிறுவனங்களில் ஊழலை இல் லாதொழிப்பதும் அவற்றின் செயல்திறனை அதிகரிக்கும் பொறுப்பின் குறித்த நிறுவனங் களின் தலைவர்களுக்கு வழங்கி குறித்த விட யங்களை அவர்கள் உரிய முறையில் நிறை வேற்றுகின்றார்களா என்ற விடயத்தை அவ தானிக்கும் பொறுப்பை அரசியல் யாப்பு சபைக்கும் குறித்த ஆணைக்குழுக்களுக்கும் வழங்கியிருந்தால் இந்த ஆணைக்குழு முறைமையினால் அதிக பலன்களை பெற்றி ருக்கலாம்.

நல்லாட்சி அரசாங்கம் ஊழலுக்கும் புதிய விளக்கத்தை வழங்கியிருந்தனர். அதாவது ராஜபக்ஷவினரின் காலத்தில் மேற்கொள்ளப் பட்டவையே ஊழலாகக் கருதப்பட்டது. அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டவை அவர்களால் ஊழலாகக் கருதப்படவில்லை. இவ்வாறு ஊழலுக்கு வழங்கப்பட்ட குறுகிய வரைவிலக்கணம் காரணமாக ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்துமே பயனற்ற விடயங்களாக மாறியது.

மாற்றத்தின் குழப்பம்

ராஜபக்ஷவினரது ஆட்சியைக் கவிழ்த்து விட்டு நல்லாட்சியைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட விடயங்களில் ஒழுங் கின்மை காணப்பட்டதோடு ஒரு வகையான  சதியின் இயல்பும் காணப்பட்டது. சாதாரண மாக ஜனநாயக முறைமையொன்றில் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் ஆட்சிக்கு வருவது பிர தான எதிர்க்கட்சியாகும். அடுத்த அரசின் தலைவராக வருவது அக்கட்சியின் தலைவ ராவார்.

ஆனால் 2015ம் ஆண்டு சாதாரணமாக நடைபெறும் இம்முறைமை நடைமுறைப் படுத்தப்படாமல் இருப்பதற்கான தடைகள் காணப்பட்டன. மஹிந்தவை தோற்கடிப்ப தற்கு ரணிலுக்கு முடியாது அதற்காக பொது வேட்பாளர் ஒருவர் தேவை என்ற கருத்தை மாதுலவாவை தேரரின் பெயரில் சிலர் சமூகமயப்படுத்தினர். இந்த மக்கள் இயக் கத்தில் பல தரப்பினரும் காணப்பட்டாலும் இதில் முக்கியமாக முடிவுகளை எடுக்கக் கூடிய இடங்களில் இருந்தவர்கள் இதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் ஒன்றாக வேலைசெய்து முரண்பட்டு வெளி யேறியவர்களே .

ஐ.தே.கட்சியின் அனுமதியுடன் பொது அபேட்சகரை வெற்றிபெறச் செய்து அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்தவிதமான அதிகாரங்களும் கிடைக்கப்பெறச் செய்யாமல் அவரை கட்சி யிலிருந்தும் ஓரங்கட்டி தமக்குத் தேவை யான ஒருவரை கட்சியின் தலைவராக மாற்றி கட்சியையும் கைப்பற்றுவதே இவர்களது நோக்க மாக இருந்தது.

தமக்கெதிரான இந்த சதித்திட்டத்தை அறிந்திருந்த ரணில் விக்ரமசிங்க அப் போது கட்சியில் இருந்த குழப்ப நிலை மையைக் கருத்திற் கொண்டு அதனை தவிர்க்கும் வகையில் பொது அபேட்சகருக்கு முழுமையான ஆதரவை வழங்கு வதன் மூலம் பொது அபேட்சகரை    தனது வலைக்குள் இழுக்கும் எதிர் பொறி முறையொன்றினை கையாண்டார்.

முரண்நிலைமையின் முடிவு

ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரை ரணிலால் விரும்பி யதுபோல் அவரை ஆட்டுவிக்க முடிய வில்லை. ஆனால் தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டது ஐ.தே.கட்சியின் பணத்தினாலும் அதிகாரத்தினாலும் என் பதனை அவர் மறந்தார். ஆனால் ரணில் தனது எதிரிகள் ஜனாதிபதியுடன் மேற் கொள்ளும் வேலைகளை விட தனது நம்பிக்கைக்குரிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் ஜனாதிபதியிடம் அதிக விடயங்களை மேற்கொள்ளலாம் என நம்பினார். அது தொடர்பான உறுதி மொழியும் சந்திரிக்காவிடமிருந்து ரணிலு க்கு கிடைக்கப் பெற்றிருந்தது. ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்காமல் இருப் பதில் அவர்கள் தோல்வி யுற்றிருந்தா  லும் தலைவர்கள் இருவருக்கு மிடையி லிருந்த சந்தேகத்தை பாம்பும் கீரியும் போல் மாற்றுவதில் அவர்கள் வெற்றி யடைந்தனர். இதன் காரணமாக நல் லாட்சி அரசாங்கத்தின் பயணம் கேலிக் குள்ளாகிய பயணமாக மாறியது.

52 நாள் அரசாங்கம் ஏற்படுவதற்கு முன்னரும் முரண்பாடான பல்வேறு விடயங்கள் திரைக்குப் பின்னால் இடம் பெற்றிருந்தன. ஜனாதிபதிக்கும் கோட்டாவுக்குமிடையிலான உறவை தேனும் பாலும் போல் மாற்றியவர்களும் இவர் களே. சாணி அபேசேகர சிறைக்குச்       செல்வதற்கான அடிப்படையான விடயங் களையும் இவர்களே மேற்கொண்டனர். ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையி லான இந்த கீரியும் பாம்பும் சண்டைக்கு ஜனாதிபதியின் சமூக நிலை மாத்திர மன்றி அவரது குலமும் ஒரு காரணமாக இருந்தது.

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதி பதவியிலிருந்த ஏனைய அனைவரையும் விட அதற்கு பொருத்தமற்றவராய் மாறி னார். சதித்திட்டமேயன்றி வேறு முறை யில் ஜனாதிபதியாக வருவதற்கான வாய் ப்பு அவருக்கு இருக்கவில்லை. அதன் காரணமாக அவரால் மேற் கொள்ளப் பட்ட பிழைகளின் காரணத்தை எம்மால் புரிந்துகொள்வது கடினமான விடய மன்று.

நல்லாட்சியை இவ்வாறான மோச மான நிலைக்கு இட்டுச்சென்ற இக்குழு வினருக்கு ரணில் விக்ரமசிங்க அவர் களுடன் கோபம் கொள்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் இவர்களது இந்த செயலின் காரணமாக ஐ.தே.கட்சி மற்றும் ரணில் மீது சேதத்தை ஏற்படுத்தியது மாத்திரமன்றி நாட்டின் மீதும் பொதுமக்கள் மீதும் அதிக சேத த்தை ஏற்படுத்தியது.

அவர்கள் இல்லாவிட்டால் நல்லாட்சி சிறந்த முறையில் அமைந்திருக்கும் என்று நான் இங்கு கூறவரவில்லை. ஆனாலும் அவர்களது செயற்பாடு இவ்வாறு அமையாவிட்டிருந்தால் சேதம் இந்தளவு ஏற்பட்டிருக்காது.

என்னவென்றாலும் இலங்கை பய ணித்துக்கொண்டிருந்தது அராஜகத்தை நோக்கியே. அராஜகத்தின் சாத்தான் எதிர்க்கட்சி என்னும் பாய்மரக் கப்பலின் பாயை கிழித்தெறிந்து கப்பலானது திக்குத்தெரியாமல் செல்லும் நிலை மையை ஏற்படுத்தியது. இப்போது அதே சாத்தான் கோட்டாபே ராஜபக்ஷ எனும் பாய்மரக் கப்பலின் பாயையும் கிழித் தெறிந்துள்ளது. இலங்கை மிக விரைவாக ஆளும் கட்சியுமில்லாத எதிர்க்கட்சியு மில்லாத அராஜக தேசமொன்றாக மாறும்.