மர்ஹூம் பாக்கிர் மாக்காருடன் நெருக்கமாக பழகியவர்

75

சமூகத்தின் நலனுக்கு பெரும்பங்காற்றிய அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் செயலாளர் மௌலவி எம்.எம்.ஏ.முபாரகின் மறைவு முஸ்லிம் களுக்கு மட்டுமன்றி முழுநாட்டிற்கும் பேரி ழப்பாகும்  என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

மௌலவி எம்.எம்.ஏ. முபாரக்கின் மறைவை முன்னிட்டு அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் செயலாளர் மௌலவி எம்.எம்.ஏ.முபாரக்,முஸ்லிம் மதத் தலைவராக   சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.இலங்கையின் முக்கிய அரபிக் கல்லூரியான மகரகம கபூரியாவின் அதிபராக நீண்டகாலம் பணியாற்றி பல நூறு மௌலவிமார்கள் உருவாக பங்களித்துள்ளார்.மதீனா பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று இலங்கை வந்த அவர் மார்க்கக் கல்வியை புகட்ட பெரும் பங்காற்றியுள்ளார்.அவர் உலமா சபையின் தலைவராகவும் இறக்கும் வரை அதன்  செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மல்வானையில் பிறந்த மெளலவி முபாரக் மதப் போதகராக நாடுபூராவும் சென்று மக்கள் நலனுக்காக பணியாற்றினார்.மறைந்த எனது தந்தை மர்ஹூம் பாக்கிர் மாக்காருடன் நெருக்கமாக பழகிய அன்னார் அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்தார். கபூரியா அரபிக் கல்லூரியில் பிரச்சினையொன்று ஏற்பட்ட போது எனது தந்தை தலையிட்டு அதனை முடிவுக்கு கொண்டுவந்ததை இந்த இடத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.
எப்பொழுதும் சிரித்து முகத்துடன் இருக்கும் அன்னார் அனைவருடனும் இன்முகத்துடன் பழகக் கூடியவர்.அவரின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.அவரது குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.