வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் வாக்குரிமை: மன்னாரா? புத்தளமா? எமக்கே தீா்மானிப்பதற்கு விட்டுவிடுங்கள்.

37

“30 வருடங்களுக்கு முன்னர் எம்மை ஆயத முனையில் பயமுறுத்தி வெளியேற் றினர். தற்போது எமது வாக்குரிமையை யும் பறித்துவிட்டு விரட்டுவதற்கு முயற்சிக்கன்றனர். இப்போது  நாட்டின் எந்த வோரிடத்திலும் வாக்குரிமையற்றவர்களாக மாறும் நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.”

புத்தளம் மாவட்டத்தில் உள்ள உலுக் காப்பள்ளம் கிராமத்தில் இக்கதையை நாம் கேட்டோம். அங்கு வாழும் மாந்தை பிர தேச சபையின் உறுப்பினர் முஹம்மட் சபீர் அவர்களது இக் கதையை கண்ணீர் மல்க எம்மிடம் கூறினார். இதன் மூலம் அவர்கள் எதிர்கொள்ளும்  வார்த்தைகளால் கூற முடி யாத வேதனையை எம்மால் உணர முடிந் தது.

லாபிர் உட்பட அந்த மக்கள் 1990ம் ஆண்டு புத்தளத்திற்கு வந்தனர். விடுத லைப் புலிகளின் கட்டளைக்கேற்ப 24 மணித்தியாலங்களுக்குள் தமது உடமை களை விட்டு அவர்கள் வெளியேற வேண்டி ஏற்பட்டது. அக்கட்டளைக்கேற்ப மன்னார் மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ் ந்து வந்த சிங்கள முஸ்லிம் மக்கள் வெளி யேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதில் முஸ்லிம்களில் பெரும்பாலான வர்கள் புத்தளத்திற்கும் சிங்களவர்கள் மெதவச்சி பிரதேசத்திற்கும் வெளியேறிச் சென்றனர். இம்மக்கள் அப்போதிலிருந்து சிறிய நிலப் பிரதேசத்தில் குறுகிய வீடு களை அமைத்து மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்துவந்தனர். இவ்வாறு அவர்களில் சிலர் அந்த வாழக்கையுடன் போராடி தமது வாழ்க்கைத் தரத்தை அதி கரித்துக்கொண்டனர். அவ்வாறானவர் களில் ஒருவர்தான் நாம் இங்கு குறிப்பட்ட லாபிர்.

30 வருடக் கதை

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் லாபிர் தமது பிறந்த நிலத்தின் உரிமையை நிலை நாட்டிக்கொள்வதற்காகவும் தமது மக்க ளின் வாழும் உரிமையை நிலைநாட்டு வதற்காகவும் மீண்டும் தமது பிறந்த மண்ணுக்குச் சென்றார். தற்போது அவர் அங்கு மாந்தை பிரதேச சபையின் உறுப் பினர்.

“யுத்தம் முடிவடைந்தமைக்காக எம்மை விட யாரும் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாமே. நான் ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால்…” என்று அவர் தொடர்ந்தும் கூறிக்கொண்டு சென்றார். அவரது கதை முடிவதற்கான அறிகுறிகள் இல்லை. வாழைக் குலை ஒன்றை கையில் ஏந்தியவாறு பாதையில் சந்தித்த லாபிர் எம்மை அவரது வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.

“இது எனது வீடல்ல. எனக்கு இங்கு புத்தளத்தில் வீடு இல்லை. எனக்கு மன் னாரில் 4 ஏக்கர் காணி உள்ளது. அதில் 3 ஏக்கரில் பயிர் செய்ய முடியும். எனக்கு இங்கு 1சாண் நிலம் கூட இல்லை. அவ் வாறிருந்தும் அதிகாரிகள் என்னை இங்கு இழுத்துப் போட்டுள்ளனர். அங்கு எனது வாக்கை வெட்டியுள்ளனர். அங்கு பிரதேச சபை உறுப்பினராக இருக்கும் எனக்கே இந்நிலமை என்றால் அங்கு வாழும் மக்களது நிலமை எவ்வாறு இருக்கும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

‘’இவ்விடயமானது விடுதலைப் புலி கள் எம்மை 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேற்றியமையை விட மோசமானது. ஏன் எம்மை மன்னாரிலிருந்து வெளி யேற்றினீர் என அதிகாரிகளிடம் கேட்கும் போது வீட்டில் கத்தி இல்லை, அம்மி இல்லை என்ற கதைகளைக் கூறுகின்றனர். ஆனால் மன்னாரிலுள்ள எனது வீட்டின் மின்சாரப் பட்டியல், நீர்ப்பட்டியல், தொலைபேசிப் பட்டியல் என்பன எனது பெயரிலேயே உள்ளது.”

இரண்டு இடத்திலும் விடுபட்டுப் போயுள்ள வாழ்க்கை

இது லாபிருக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள நிலையல்ல. இவ்வாறு வாக்குரிமையை இழந்துள்ள ஒரு பெண்தான் செய்யது தம்பி சிபாயா. இவருக்கு லாபிரின் அளவு வாக் குரிமையின் தேவைப்பாடு இல்லாவிட் டாலும் கொரோனாவின்போது வழங்கப் பட்ட 5000 ரூபாய் கிடைக்காமல் போன மையின் காரணமாக தற்போது வாக்குரி மையின் முக்கியத்துவத்தை விளங்கியுள்ள மையை அவரின் கதையில் எமக்கு விளங்கியது.

‘’புலிகளின் பிரச்சினை முடிவடைந் ததன் பின்னர் நாம் மீண்டும் மன்னாருக்குச் சென்றோம். ஆனால் அங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் காணப்படாமை காரணமாக நாம் மீண்டும் புத்தளம் திரும்பினோம். தற்போது அங்கும் வாக்கு இல்லை இங்கும் வாக்கு இல்லை. வீட் டில் எட்டுப் பேர் உள்ளனர். யாருக்கும் வாக்கு இல்லை. கொரோனா காலத்தில் வழங்கிய பணமும் இதன் காரணமாக எமக்குக் கிடைக்கவில்லை.”

வாக்கு தொடர்பாக கதைப்பதற்கு மன்னார் மாவட்டக் காரியாலயத்தினால் சிபானாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்த போதிலும் அவரது கணவர் அன்றாட உழைப்பாளி என்ற காரணத்தினால் அவர் அங்கு சென்றிருக்கவில்லை.

“எமக்கு மன்னார் காரியாலயத்திலி ருந்து வாக்கு தொடர்பாக கதைப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஏன் எம்மை மீண்டும் அழைக்கின்றீர் யுத்த காலத்தில் கூட எமக்கு மன்னாரில்தான் வாக்கு இருந்தது என நாம் கூறினோம். அப்போது அவர்கள் கட்டாயம் வரவேண்டும் இல் லாவிட்டால் வாக்கை வெட்டுவோம்  எனக் கூறினார்கள். நாம் எவ்வாறு அங்கே போவது? அப்பிரயாணத்திற்கு மூவாயிரம் நான்காயிரம் வரை செலவாகும். இரண்டு மூன்று நாட்கள் கூலிவேலை இல்லாமல் போகும். அதன் காரணமாக நாம் போக வில்லை. இதன் காரணமாக அவர்கள் எமது வாக்குப் பதிவை வெட்டியுள்ளார் கள். தற்போது எமக்கு அங்கும் வாக்கு இல்லை. இங்கும் வாக்கு இல்லை.”

அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

உலுக்காப் பள்ளம் வீதியில் நாம் நடந்து செல்லும்போது நாம் மொஹிதீன் ஆமி னாவை சந்தித்தோம்.

‘’எனது மகள் ஒரு ஆசிரியை. அவர் வேலை செய்வது மன்னாரில். கொரோனா வின் காரணமாக பாடசாலை விடுமுறை என்பதால் நான் மகளுடன் புத்தளத்தில் இருந்தேன். அதன் காரணமாக நாம் இம் முறை புத்தளத்திலேயே வாக்களித்தோம். ஏனெனில் சென்றமுறை நாம் மன்னாருக்கு வாக்களிக்கச் செல்லும்போது பஸ்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள் ளப்பட்டு தாக்குதலும் இடம்பெற்றது. அதன் காரணமாக இம்முறை தேர்தல் ஆணைக்குழுவினால் எமக்கு புத்தளத்திலி ருந்தே மன்னாருக்கான வாக்கை இடுவ தற்கான விசேடமான முறைமையொன்று ஏற்படுத்தித்தரப்பட்டது. தற்போது குறித்த விடயம் எமக்கு தீங்கான விடயமாக மாற்றம் பெற்றுள்ளது” என்று மொஹிதீன் ஆமினா கூறினார்.

தற்போது அதிகாரிகள் தொடர்ந்தும் எமக்கு புத்தளத்திலேயே வாக்களிக்குமாறு கூறுகின்றனர். அதாவது எங்களுக்கு புத்த ளத்திலேயே வாழிடத்தை அமைத்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றனர். இது எமது அடிப்படை மனித உரிமை மீறலாகும். நாம் வாழ்வதற்கு விரும்பும் இடத்தை தெரிவுசெய்வதற்கான உரிமை மீறலாகும். நாம் விருப்பத்துடன் புத்த ளத்திற்கு வரவில்லை. பலவந்தமாகவே வெளியேற்றப்பட்டோம். எனவே எங் களை ஏன் இங்கு வாழுமாறு பலவந்தப் படுத்துகின்றனர்?”

1990 ஆண்டில் புத்தளத்திற்கு வந்த சுமார் ஒரு லட்சம் பேரில் பெரும்பாலா னோர் புத்தளத்திலேயே நிரந்தரமாக குடியேறியுள்ளனர். அவ்வாறு நிரந்தரமாக குடியேறியவர்களில் ஒருவர்தான் மொஹ மட் அஸாம். கைக்குழந்தையாக புத்தளத் திற்கு வந்த இவருக்கு மன்னாரை விட புத்தளம் பழக்கத்திற்குரிய இடமாக மாறி விட்டது.

“எனக்கு புத்தளம் நன்று. மன்னாருக் குப் போய் எதைச் செய்ய? எமக்கு இருந்த நிலங்கள் தற்போது காடுகளாக மாற்ற மடந்துள்ளது. அதனை வெட்டுவதற்குப் போய் காட்டு வளத்தை அழிக்கின்றார்கள் என்ற அவப் பெயரை வாங்குவதனை   விட இங்கு இறுப்பதே நன்று. நான் நன் றாகக் கல்வி கற்று பட்டமும் பெற்றுள் ளேன். கடந்த காலங்களில் அரசிடம் வேலைவாய்ப்புப் பெறுவதற்காக அழுவ தனை விட்டுவிட்டு நான் சிங்கப்பூர்  சென்று முஸ்தபா வியாபார நிலையத்தில் வேலைசெய்தேன். நான் ஒரு சிறந்த ஊழியத்தையும் அங்கு பெற்றேன். நான் இங்கு ஒரு வியாபார நிலையத்தை நிர் மாணித்து வருகின்றேன். எனக்கு இங் கேயே வாக்குப் பதிவு உள்ளது. எனது தந்தை என்றால் இங்கு வாழ்வதற்கு பெரியளவு விருப்பமாக இல்லை. ஆனால் தற்போது அவர்களும் என்னால் சந்தோச மாக உள்ளனர்.”

இது ஒரு சூழ்ச்சி

அஸாம் அவ்வாறு கூறினாலும் பலரின் விருப்பமும் தமது பிறந்த மண்ணில்  சென்று குடியேறுவதே. இது ஒரு முடிவு றாத விவாதமாகும். ஆனால் இதில் முக்கியமானது அதிகாரிகளின் விருப்பத் தினைவிட மக்களின் விருப்பமே ஆகும். இது தொடர்பாக பல முறை பாராளுமன் றத்தில் குரலெழுப்பிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுத் தீன் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளார். அவரின் கருத் துப்படி இதுவொரு சூழ்ச்சியாகும்.

‘’நான் இது தெடர்பாக முதலாவதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணை யாளருடன் கதைத்தேன். ஆனாலும் தெளி வான பதில் இல்லை. அதன் காரணமாக இதனை நான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறையிட்டேன். அவர்களும் இது தொடர் பாக எந்தவிதமான பதிலும் தரவில்லை. மன்னாரில் வாழும் மக்களில் அரசியல் வாதிகளில் சிலரும் இணைந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறை யிட்டனர். அவர்களும் இதுவரை எந்த விதமான தெளிவான பதிலும் தரவில்லை. நான் தெளிவாகக் கூறுகின்றேன் இது ஒரு சூழ்ச்சியாகும். எனவே நான் இது தொடர் பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு முறை யிடுவதற்குத் தீர்மானித்துள்ளேன்.”

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்கள் அவர் கைதாவற்கு சில நாட் களுக்கு முன்னர் எம்மிடம் தெரிவித்தார். அவர் கைது செய்யப்பட்டதும் இந்த வாக் காளர்களுக்கு பிரயாண வசதி செய்து கொடுத்தார் என்பதற்காகவே.

ரிசாட் பதியுதீன் முன்னாள் அமைச்சர் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவது மன் னார் மாவட்டத்தையே. மன்னார் தாரா புரம் கிராமத்தைச் சேர்ந்த அவரும் 1990ம் ஆண்டு 2 ரூபா உறையில் உடைகளைப் போட்டுக்கொண்டு வெளியேறியவர் என்று கூறப்படுகின்றவரே.

மன்னாரில் மதிப்பீடு

மன்னாரில் வாழும் மக்களின் வாக் குரிமை தொடர்பானதொரு மதிப்பீடு தற் போது நடைபெற்றுவருகின்றது. மன்னார் மாவட்டக் காரியாலயத்தின் தேர்தல் பிரிவினால் மேற்கொள்ளப்படும் இந்த மதிப்பீடு எப்போது முடிவடையும் என்ப தற்கான திகதியொன்று இதுவரையில்லை. இதற்குப் பொறுப்பாகவுள்ள மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் ஜேசுதாசன் ஜெனிட்டன் தற்போது இவ்வருடத்திற் கான உரிமை தொடர்பான மதிப்பீடு இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.

‘’மன்னாரோ புத்தளமோ எங்காவது ஒரு இடத்தில் வாக்குப்பதிவை வைத்தி ருக்க வேண்டும். கடந்த வருடம் நாம் மேற்கொண்ட உரிமை மதிப்பீட்டிற்கு வராதவர்களின் வாக்குப் பதிவு இரத்தாகி இருக்கலாம். அவ்வாறானவர்கள் சுமார் 1500 பேர் உள்ளனர். தற்போது இவ்வருட மும் மீளாய்வு நடந்துகொண்டிருக்கின் றது. இதன் காரணமாகவும் இம்முறை சிலர் நீக்கப்படலாம். இந்த அனைத்துத் தகவல்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படுகின்றது. தற்போது எமது கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் செல் கின்றனர். 20ம் திகதிக்குப் பின்னர் இவ் வருடத்தின் தகவல்களைத் தரமுடியும்.

கடந்த வருடம் மன்னாரிலிருந்து நீக் கப்பட்டவர்களின் தகவல்களை தரும்படி பிபிசி சிங்கள் சேவை உதவித் தேர்தல் ஆணையாளரிடம் வினவியபோது அவர் அதனை தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழ் விண்ணப்பிக்குமாறு வேண்டினார். எனவே மன்னார் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் அலுவலகங்களுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் அனுப்பப் பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு

ஜனாதிபதித் தேர்தலின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு வாக்காளர் களுக்கு புத்தளத்திலேயே வாக்களிப்பதற் கான ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி 12 வாக்குச் சாவடிகளில் 6275 பேர் புத்தளத்தில் வாக்களிப்பதற்கு ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் நிறை வேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டி யாரச்சி கருத்துத் தெரிவிக்கையில் அடிப் படை ஜனநாயகக் கட்டமைப்பொன்றில் ஒரு பிரஜைக்கு அவரது விருப்பின்படி வசிப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.

‘’இது அரச அதகாரிகளதோ அரசியல் வாதிகளினதோ விருப்பப்படி நடை பெறும் விடயமல்ல. அரசியல்வாதிகள் தமது தேவைகளை நிவர்த்திப்பதற்காக வேண்டி மக்களை வாக்களிப்பதற்கு அங் கும் இங்கும் கொண்டு செல்கின்றனர் என்றால் அதுவம் ஒரு பிரச்சினையாகும்.  சட்டத்தின்படி மன்னாரிலிருந்து புத்தளத் திற்கு வந்து 20 வருடங்களென்றால் அடுத்த வருடம் ஜுலை மாதத்திற்கு முன்னர் அவர் களுக்கு மன்னாரில் வாழ்வதற்கான வீடு இருந்தால் அவர்கள் அங்கு பதிவதற்கு விண்ணப்பித்தால் அதிகாரில் அவர் களை அங்கு பதிவதற்கான கடப்பாடு உடைய வர்கள்.” என்று அவர் கூறினார்.

“நபரொருவர் ஜுலை மாதம் 1ம் திக திக்கு முன்னர் ஒரு கிராம சேவகப் பிரிவில் வாழ்கின்றார்கள் எனின் சட்ட ரீதியாக அவர்களுக்கு அங்கு பதிவு வழங்கப்பட வேண்டும். 20 வருடங்கள் இவர்களுக்கு மன்னாரில் வாக்களிக்கும் உரிமை வழங் கப்பட்டிருந்தது. தேர்தல் ஒழுங்குபடுத்துப வர்கள் ஊடாக இவர்களுக்கு வாக்களிப் பதற்கான ஒழுங்குகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இது வாக்காளர்களின் தேவையா அல்லது அரசியல்வாதிகளின் தேவையா என்று கேள்வியும் எழுகின்றது. மக்களுக்குத் தேவை நிலையான வீடு, அவர்களது காணி பூமி, பிள்ளைகளுக்கு கற்பதற்கான சிறந்த சூழல் என்றால் அவர் களது முக்கியமான நோக்கமா இருக்க வேண்டியது வாக்களிப்பதற்கான உரிமை யல்ல. மன்னாரில் மீளக் குடியேறுவதற் கான தேவை இருந்தால் அவர்களது முக் கியமாக செய்ய வேண்டியது அவர்களது வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகள், அவர்களது காணிக்கான உரித்து, உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக முயற்சிசெய்வதுதான்”

“இந்த மக்கள் புத்தளத்தில் வசித்துக் கொண்டே மன்னாரில் வாக்களிப்பதால் அவர்களுக்கு அதற்காக எந்தவிதமான நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. இவர்கள் புத்தளத்தில் வாக்களித்தால் அவர்கள் வாழும் பிரதேசத்தில் அவர்களது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெற் றுக்கொள்வதற்காகவது அது உதவியாக இருக்கும். இவர்களது மன்னாரில் வாக் குப் பதிவை நீக்கி புத்தளத்திலும் வாக்குப் பதிவை நீக்குவதானது எவ்வாறும் ஏற்றுக் கொள்ள முடியாததொரு விடயமாகும்.

இலங்கைப் பிரஜைகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்களிப்ப தற்கான உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.”

கொரோனாவின்போது வழங்கப்பட்ட உதவிகளும் இவர்களுக்கு வழங்கப் படாமை தொடர்பாகவும் ரோகண ஹெட்டியாரச்சி கருத்துத் தெரிவித்தார்.

‘’வாக்குப் பதிவினை வாக்களிப்பதற்கு மாத்திரம்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது பல்வேறு விடயங்க ளுக்காக அது பயன்படுத்தப்படுகின்றது. வாக்குப்பதிவில் இருந்தாலும் இல்லா விட்டாலும் கிராம அலுவலரிடத்தில்  தமது பிரதேசத்தில் வசிக்கின்ற அனைவர் தொடர்பான தகவலும் இருக்க வேண்டும். இவ்வாறு உதவி கிடைக்காதவர்களுக்கு உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.”

மக்கள் கட்டமைப்பில் மாற்றம்

மன்னாரில் வாக்களிப்பு மறுக்கப்பட்ட வர்களுக்கு தற்போது புத்தளத்தில் உதவிக் கரம் நீட்டப்படுகின்றது. இதன் காரண மாக புத்தளத்தின் சனத்தொகை அதிகரித் திருப்பதாக புத்தளம் மக்களினதும் அரசி யல்வாதிகளினதும் கருத்தாகும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் அதிக வாக்குகள் பெற்ற பொதுஜன மக்கள் கட்சியின் சனத் நிசாந்தவின் கருத்து.

“1990 ம் ஆண்டு யுத்தம் காரணமாக பலர் இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் படகுகள் மூலம் கல்பிட்டி ஊடாக புத்தளத்தை வந்தடைந்தனர். புத்தளம் மக்களும் அவர் களை ஆதரவுடன் வரவேற்றனர். இருப் பிடங்களை வழங்கினர். அவர்களை நன்கு உதவி புரிந்தனர். நீண்டகாலமாக அவர்  கள் புத்தளத்தில் எங்களுடன் வாழ்ந்தனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அரசாங் கம் அவர்களை மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்காக வேண்டி மீள்குடியேற்ற அமைச்சும் உருவாக்கப்பட்டது. ஆனால் சிலர் இருக் கின்றனர் அவர்கள் புத்தளத்திலிருந்து போவதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக நாம் தேடிப்பார்க்க வேண்டும். தற்போது அவர்களுக்கு புத்த ளத்தில் வாக்களிப்பு உரிமை வழங்கப்பட இருப்பதாகக் கேள்விப்படுகின்றது. இதன் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் மக்கள் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படலாம். இதன் காரணமாக நாம் இவ்வா றானவர்களை மீளவும் அவர்களது பிர  தேசத்தில் குடியேற்றுவதற்காக கவனம் செலுத்தி வருகின்றோம். நாட்டின் பொது வான சட்டம் யாராவது 3 மாதத்திற்கு  மேல் எங்காவது வாழ்ந்துவந்தால் அவர் கள் அந்த இடத்தில் கிராம சேவகரிடம் பதியப்பட வேண்டும். எனக்குத் தெரிந்த வகையில் யாருக்கும் கட்டாயப்படுத்தி எவரது பதிவினையும் மாற்ற முடியாது” என அவர் கருத்துத் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட செயலாளர் சந்தர   சிறி பண்டார கருத்துத் தெரிவிக்கையில் அவர் இது தொடர்பாக ஊடகங்களில் கதைப்பது நல்லது என்று தெரவித்தார்.

“உண்மையில் இதுவொரு பிரச்சினையாகும். கடந்த தேர்தலில் மன்னார் மக்களுக்கு புத்தளத்தில் வாக்களிப்பதற் கான வசதி வழங்கப்பட்து. முல்லைத்தீவு வாக்காளர்கள் மூவரை பாதுகாப்புக்கு மத்தியில் முல்லைத்தீவுக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அடுத்த தேர்த லுக்கு முன்னர் எமக்கு இதற்கான சரியான தீர்வு வேண்டும். அத்துடன் நாட்டின் சட் டத்தின் அடிப்படையில் கடமையாற்று வதற்கு நாம் கடப்பாடு உடையவர்கள்.”

அதிகாரிகளின் கருத்துப்படி ஒரு பிர ஜைக்கு நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் வாழ்வதற்கும் வாக்களிப்பதற்குமான உரிமை இருக்கின்றது. ஆனால் இந்தக் கதையின்படி யாருக்காவது ஓரிடத்தில் தவறு நிகழ்ந்துள்ளது. எனவே இது தொடர்பான சரியான நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டுமல்லவா?

நன்றி: பிபிசி