துருக்கியில் பாரிய நில அதிர்ச்சி

45

நேற்றைய தினம் துருக்கியின் இஸ்மிர் நகில் 7.0 ரிக்ச்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்ச்சியினால் 25 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதோடு, சுமார் 800 பேர் காயமடைந்துள்ளனர். கட்டிட இடுபாடுகளின் கீழ் மேலும் பலர் இறந்த நிலையில் உள்ளனர் என்று ஊகிக்கப்படுகின்றது.

அயலில் உள்ள கிரேக்கத்தின் சோமாப் தீவில் இதன் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அங்கு டீனேஜ் பருவத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 3 மில்லியன் மக்களைக் கொண்ட இஸ்மிர் நகரம் கலேபரம் அடைந்துள்ளது. மீட்புப் பணிகளும் நிவாரண உதவித் திட்டங்களும் தொடர்வதாக துருக்கிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இப்பூமி அதிர்ச்சியினால் சிறியளவிலான சுனாமி அலைகளும் சோமாப் தீவை அண்டிய கடற் பரப்பில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.