போர்ட் சிட்டி ஊடாக சேவைத்துறையில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் நாம் தயாரா ?

166

ஏ.ஜி. நளீர் அஹமட்,

கொழும்பு துறைமுக நகர திட்டம் 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விஷேட நகர வர்த்தக வலயமாகவும் 72 வருட சுதந்திர இலங்கையின் கூடிய எதிர்பார்ப்புடன் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார வலயமுமாகும். இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட மகாவெலி திட்டம் மற்றும் ஏற்றுமதிக்காக உருவாக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளையும் விட மிகக் கூடிய எதிர்பார்ப்புடன் இலங்கையின் பொருளாதார ஆற்றலைக் கட்டியெழுப்பும் நவீன திட்டமாக இது அமைகிறது.

ஆசியாவில் முதற்தர ஸ்மாட் நகரமாக உருவாக்குவதோடு, சர்வதேச மட்ட சேவை வழங்குநராக அபிவிருத்தி செய்வது இதன் முக்கிய குறிக்கோளாக அமைந்துள்ளது.  இதற்கென 269 ஹெக்டெயர் நிலப்பரப்பு கொழும்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தரைதோற்ற வடிவில் இது மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு மூலோபாய பிரதேச மாக அமைகிறது. இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையில் சீன துறைமுக பொறியியல் நிறுவனத்தின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இதன் துணை செயற்திட்டமாக இதன் நிர்மாணப் பனிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் நிர்மாணப் பனிகள் முழுமையாக 2041 ஆம் ஆண்டளவில் முழுமையடையும் என சீன துறைமுக பொறியியல் நிறுவனம் குறிப்பிட்டுள் ளது. ஆகவே இதன் நிர்மாணப் பணி சுமார் இரண்டு தசாப்த கால செயற்திட்டமாகும்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசாலமான தனியார் வெளிநாட்டு முதலீட்டு செயற்திட்டமாக இது அமைவதோடு இடம் ஒருங்கிணைப்பு, நிர்மாணம் மற்றும் உருவாக்கம் அதனோடு இணைந்த உள்ளக ஆரம்ப உட்கட்ட மைப்புக்கென இது வரை 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவளிக்கப்பட்டு வெற்றிகரமாக ஆரம்ப வேலைப்பாடுகள் பூர்த்தி செயயப்பட்டுள்ளன. சர்வதேச தரம் வாய்ந்த அதி நவீன காரியாலய தொகுதி, சில்லறை விற்பனை சார்ந்த நிறுவன தொகுதி, குடியிருப் புத் தொகுதி, வரவேற்பு மற்றும் அது சார்ந்த   சேவை துறை மற்றும் பொழுதுபோக்கு துறைகளுக்காக 13.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன.

178 ஹெக்டெயர் நிலப்பரப்பு வர்த்தக செயற்பாடுகளுக்காகவும், 91 ஹெக்டெயர் நிலப்பரப்பு மத்திய பூங்காவையும் கடலோரப் பொழுதுபோக்கு பொதுப் பகுதியாகவும் அமையவுள்ளது. கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் இடப்பரப்பில் 46 வீதம் குடியிருப்புத் தொகுதிக்கும், 26 வீதம் காரியாலய தொகுதிக் கும், 13 வீதம் சில்லறை விற்பனை துறைக்கும் 6 வீதம் விருந்துபசார துறைக்கும் (ஹொடெல்) ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏனைய நிலப்பகுதி சர்வதேச வைத்தியசாலை,  சர்வதேச பாடசாலை, மாநாட்டு மற்றும் கண்காட்சி சார்ந்த கட்டிட செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலப்பரப்பு கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.    116 ஹெக்டெயர் நிலப்பரப்பு சீன துறைமுக பொறியியல் நிறுவன கொழும்பு துறைமுக தனியார் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாது இந்நிலப்பரப்பில் முதலீட்டு உரிமை அந் நிறுவனத்திற்கே உரித்துடையது.

கொழும்பு துறைமுக நகர திட்டம் மூலம் புதிதாக 83,000 தொழில்வாய்ப்புகள் உருவாக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் (பெப்ரவரி 2020) ஜனாதிபதியால் மேலாய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு மற்றும் சட்டம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப் படவுள்ளது.

கொவிட் 19 வைரஸ் மற்றும் அதனோடு இணைந்த வகையில் இலங்கை மற்றும் சர்வதேச நாடுகள் முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடி சார்ந்து உள்ளக கட்டமைப்பு நிர்மாணத்தில் தாமதம் ஏற்படக் கூடிய வாய்ப்பு கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் 19 வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளா தார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு குறைந்தது 12 தொடக்கம் 18 மாதமளவு தேவைப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை இலங்கை சர்வதேச சேவைத்துறையில் ஆற்றியுள்ள  வகிபாகம்,  கொழும்பு துறைமுக நகர திட்ட நிர்மாணப் பணிகள் நிறைவு பெறும் 2041 ஆம் ஆண்டளவில் அதன் சர்வதேச பரிமாணம், 2041 ஆம் ஆண்டு சர்வதேச முதலீட்டு வாய்ப்பு களைப் பெறுவதிலுள்ள ஆற்றல், கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பாக இலங்கை கையாளும் கொள்கைகள் போன்ற கேள்விகள் மீது கவனம் செலுத்துவதில் துறை சார்ந்தவர்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர். அரசியல் காரணங் களுக்காக இருந்தாலும் ஆரோக்கியமான அம்சமாகவே இது அமையும்.

இலங்கையின் புதிய கட்டமைப்பு மாற்றம். சேவைத் துறை சார்ந்த புதிய மாற்றம்.

வட அமெரிக்காவையும் ஜரோப்பாவையும் மத்தியஸ்தமாகக் கொண்ட சர்வதேச சேவைத்துறை ஆசியாவை நோக்கி திரும்பும் இந்நூற்றாண்டில் மூலோபாய ரீதியாக கொழும்பு துறைமுக நகரத்தை ஸ்தானப்படுத்தும் ஆற்றலில் இதன் வெற்றி தங்கியுள்ளது. ஆசியாவில் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் சர்வதேச சேவைத்துறையில் சமகாலத்தில் ஆற்றிவரும் பங்களிப்பை சரியாக அடையாளப்படுத்தி இலங்கையின் ஆற்றலை கட்டியெழுப்பும் பன்முக வாய்ப்புகளை தேடுவதில் தான் துறைமுக நகர திட்டத்தின் பொருளாதார அடைவு தங்கியுள்ளது. 2041 ஆம் ஆண்டளவில் ஸ்மார்ட் என்ற விடயப்பரப்பு, அது எந்த தொழிநுட்பத்தில் தங்கி இருக்கப்போகிறது என்பதை பொருத்து அமையப் போகிறது. எனவே நவீன தொழிநுட்ப பயன்பாட்டு பரப்பாக இதனை முன்னகர்த்தும் தேவை புதிய நிலப்பரப்புக்குண்டு.

டுபாய் சர்வதேச பொருளாதார நிலையம், இந்தியாவிலுள்ள குஜராத் சர்வதேச பொருளாதார தொழிநுட்ப நகரம், தென் கொரியாவிலுள்ள         சென்டெ சர்வதேச வர்த்தக மாவட்டம், மலேசியா விலுள்ள லமுஆன் சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார நிலையம் என்பன ஆசிய பிராந்தியத் தில் அமைந்துள்ள சர்வதேச சேவைத் துறையை இலக்காகக் கொண்ட விஷேட பொருளாதார வலயங்களாகும். 2041 ஆம் ஆண்டளவில் கொழும்பு துறைமுக நகரமும் மேற்கூறிய வலயத் திற்குள் அமைந்து விடப் போகிறது. குறைந்தது 2030 ஆம் ஆண்டுகளிலிருந்து ஆசியாவை நோக்கி திரும்பும் சேவைத்துறை சார்ந்த முதலீடுகளை கொழும்பு துறைமுக நகரம் பெறுவதற்கு முயற்சிக்க வேண் டும். தவறும் பட்சத்தில் ஆற்றல் குன்றிய விஷேட பொருளாதார வலயமாக மாறும் அபாயமுண்டு. ஆகவே தென் கொரியாவுக்கும், மலேஷியாவிற்கு முள்ளதை போன்று நாடு களிடையே திறந்த பொரு ளாதார உடன்படிக்கை களுக்கு இலங்கை செல்ல வேண்டும். பரந்த சந்தை வாய்ப்புகளையும்,         சேவைத்துறைகளுக்கான சட்டக ஒருங்கிணைப்பு களையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

மரபான பொருளாதார ஒழுங்குகளுக்குள் இருந்து கொண்டு பரந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் ஆற்றல் குறைந்து செல்லும் நிலையில் இலங்கையும் தனது உள்ளக பொருளா தார ஆற்றலை மீள வடிவமைக்கும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறது. பயிற்றுவிக்கப்பட்ட தொழில் வல்லுநர்களின் தேவை இலங்கைக்கு இருக்கிறது. வீசா வழங்கும் முறைமைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பகுதியை மேலும் வலுப்படுத்த வேண்டும். சர்வதேச முதலீடுகளுக்கு இலங்கை வழங்கும் காப்புறுதிக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். சர்வதேச முதலீடு களுக்கு காப்புறுதி சார்ந்த சட்டக ஏற்பாடுகளின் முன்னேற்றம் மிக அவசியமான விடயப்பரப்பாக அமைந்து காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு அர்ப்பணிக்கும் ஆற்றல், சட்டத்தின் ஆட்சி, சிவில் சமூகங்களின் செயற்பாடுகளுக்கு வழிவிடும் அளவு, ஊடக சுதந்திரம், உள்நாட்டு அரசாங்கங்க ளின் ஆட்சி கால நீடிப்பு, சூழல் கொள்கைகள் மற்றும் பயங்கரவாதம் அது தொடர்பாக கையாளும் பாதுகாப்பு ஒழுங்குகள் போன்ற விடயங்களின் பால் சர்வதேச முதலீட்டாளர்களும், பல் தேசிய நிறுவனங்களும் கூடியளவு கவனம் செலுத்துகிறது. இலங்கையும் இதற்கான அர்ப்பணிப்புகளிலிருந்து விடுபட முடியாது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு சிவில் நிர்வாக முறைமை இருக்கத்தக்க இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில் பல் பக்க முதலீட்டு வாய்ப்புகளை தவறவிடுமோ என்ற அச்சமும் மேலெழுந்து செல்கிறது.

2018 ஆம் ஆண்டு கிழக்காசியா, சர்வதேச        சேவைத் துறையில், ஏற்றுமதியில் 20.8 வீதமும், இறக்குமதியில் 26.5 வீதமும் பங்களிப்புச் செய்துள் ளது. சீனா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகியன இதில் முக்க்ணீயமானது. தென்னாசியா சர்வதேச ஏற்றுமதியில் 4 வீதமும் சர்வதேச இறக்குமதியில்  3 வீதமுமே செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இலங்கை வெறுமனே 0.1 வீதமே சர்வதேச சேவைத் துறை வர்த்தகத்தில் பங்கேற்புச் செய்கிறது.

சேவைத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றம்.

  1. நிலையான மாற்றம்

சகல நாடுகளிலும் வளர்ந்து வரும் முதியோர் தொகை. முதியோர்களுக்கு தேவைப்படும் சுகாதார துறை சார்ந்த சேவைகளின் கேள்வி அதிகரித்து காணப்படுகிறது. வழமையான நுகர்வோர் பொருட் கள் சேவைத் துறைகளையும் விட மருத்துவத் துறை சார்ந்த விடயங்களுக்கு கேள்வித் தன்மை அதிகரித்துக் காணப்படுகிறது. அதே போன்று 1980 ஆண்டுக்கும் 1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களை மிலேனியல்ஸ் என்று அழைப்போம், 1997 ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் களை ஜெனரேஷன் ணு என்று அழைப்போம், 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்களை புதிய தலைமுறையினர் என்று அழைக்கிறோம், ஒவ் வொரு தலைமுறையினருக்குமிடையிலான டிஜிடல் தேவைப்பாட்டின் நாட்டம் வித்தியாச மானது. 2030 ஆம் ஆண்டளவாகும் போது டிஜிட்டல் தேவைப்பாடுடைய தலைமுறையினர் உலக சனத் தொகையில் 50 வீதத்தையும் தாண்டியவர்களாக இருப்பர். எனவே சேவைத் துறையின் தன்மையும் மாற்றமடையும்.

  1. பூகோள வருவாய் ஒன்றிணைவு

நுகர்வோரின் விருப்பு பரந்ததாக அமைந்து காணப்படும். தனது வருவாய்க்குட்பட்ட தெரிவுக்கு பல்வகை சாதனங்கள் காணப்படும். ஆனால் சகலதும் ஒரே தரத்தில் அமைந்ததாகக் காணப்படும். நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியுமான ஒழுங்குகள் காணப்படும்.

  1. தொழிநுட்ப முன்னேற்றம்

வயது வேறுபாடின்றி டிஜிடல் கருவிகளின் பயன்பாடு அதிகரித்து காணப்படும். தமது நாளாந்த தேவைகளை பு+ர்த்தி செய்வதும் இலகுவாக இருக்கும். நுகர்வோர் பொருட்களை வியாபார தளத்திற்கு நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளும் தேவை குறைந்து காணப்படும். இணைய தள பக்கங்கள் பெருகிக் காணப்படுவ தோடு நுகர்வோர் தெரிவு, கட்டணம் செலுத்தல், தருவிப்பு என்பன மிக இலகுவாகவும் வேகமாக வும் பெற்றுக்கொள்ளும் தன்மை வளர்ந்து காணப்படும்.

முப்பரிமாண அச்சுப் பதிவுகள், வளைதள நேரடி ஒளிபரப்புகள் இன்றும் அதன் தேவைப் பாடுகள் அதிகரித்தே காணப்படுகின்றன. எனவே சேவைத்துறை இந்தப் போக்கையும் கருத்திற் கொள்ளும்.

  1. கால நிலை மாற்றம்

கால நிலை மாற்றம் மரபான மற்றும் நவீன சேவைத்துறைக்கு பாதிப்பை அல்லது சேவைத் துறையில் மாற்றீட்டின் தேவைப்பாட்டை        சுட்டிக் காட்டுகிறது. கால நிலை மாற்றத்தினால் மின்சார துண்டிப்பு, அதனோடு இணைந்த     சேவைகள் துண்டிப்பு, பொதி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையில் ஏற்படும் தாமதம், பருவகால பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் தாக்கம், வௌளம், மண் சரிவு, கடலோர அனர்த்தங்கள், காடு தீப்பற்றல் மற்றுமுண்;டான ஏனைய புதிய எதிர்பாரா அனர்த்தங்களி;னால் ஏற்படும் பாதிப்புக்கள் நாளாந்த சேவைத் துறைக்கு சவாலாக அமைந்து காணப்படுகிறது. இன்று காலநிலை மாற்றங்களால் மனிதர்களுக் கும், ஏனைய உயிரினங்கள், சுற்றாடல் மற்றும் ஏனைய துறைகளுக்கும் ஏற்படும் பாதிப்பு அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்பவற்றை கூட்டாக பெற்றுக் கொள்வதற்கு அரச தலைவர் மட்டம் தொடக்கம் சிவில் இளைஞர் அமைப்புக்கள் கூட பல் வேறு மாநாடுகள், ஆய்வுகளின் பக்கம் கவனத்தை செலுத்தியுள்ளன.

கால நிலை மாற்றத்தினால் சுற்றுலாத் துறைக்கு ஏற்படும் பாதிப்பு, குறிப்பாக சுற்றாட லுக்கு ஏற்படும் பாதிப்பு என்பன நாளாந்த வருவாய் இழப்புகளுக்கு காரணமாக அமைகிறது.

இத்தகைய மாற்றங்களும் அவதானிப்புகளும் உள்வாங்கப்பட வேண்டும். கொழும்பு நகர திட்டம் 2041 ஆம் ஆண்டையும் தாண்டிய நுகர்வோர் சேவை துறை மூலோபாயங்களை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். ஆசிய நாடுகளின் பொருளாதார தேவைப்பாட்டின் ஒன்றிணைவை பூர்த்தி செய்வதாக முதலீட்டு வாய்ப்புகளும், வருவாய் வாய்ப்புகளும் அமைய வேண்டும்.

சேவைத்துறையில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள்

  1. சேவைத் துறைக்கு சாதகமான கொள்கை ரீதியான மேம்பாடுகள் இல்லாமை, சர்வதேச சட்ட ஏற்பாடுகளின் போதாமை.

உலக வங்கியின் அண்மைய பருவகால வர்த்தக செயற்பாட்டு தரப்படுத்தல் சுட்டியில் இலங்கை 99 வது இடத்தில் இருக்கிறது. வரி முறைமை, வரையறுக்கப்பட்ட மூலதன பயன் பாடு, இடப் பதிவு செயன்முறையிலுள்ள தாமதங்கள், பொருத்தப்பாடற்ற தொழிலாளி களின் ஆட்சேர்ப்புகள் போன்ற விடயங்களை பின்னடைவிற்கான காரணங்களாக தரப்படுத்தல் சுட்டி சுட்டிக்காட்டுகிறது.

  1. தொழிற்துறைக்கு ஏற்ற துறை சார் ஆளணியினரின் பற்றாக்குறை

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத் துறைக்கு வருடாந்தம் 18000 புதிய பயிற்று விக்கப்பட்ட ஆளணியினரின் தேவை இருப்ப தாக இலங்கை தொலை தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சுட்டிக் காட்டுகிறது. இலங்கையில் வருடாந்தம் அரச பல்கலைக்கழகங்களில் கற்று வெளியேறும் பட்டதாரிகளில் பெரும்பாலான இளைஞர்களின் பிரயோக ரீதியான ஆங்கில அறிவு குறிப்பாக தொடர்பாடல் திறன், பிரயோக ரீதியான மென் திறன் குறைபாடுகள், துறை சார்ந்த சிறப்பு துறையில் தொழிநுட்ப ரீதியான அறிவு இன்மை என்பன பின்னடைவிற்கான காரணங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இது தொழிற் துறைக்கு பாரிய சவாலாக நோக்கப்படுகிறது. கற்கை காலத்தின் இறுதியில் வளர்முக நாடு களில் உள்ளது போன்று ஐணtஞுணூணண்டடிணீண் களை பெற்றுக் கொள்ளாமை இலங்கை மாணவர்களின் தொழிற் துறைக்கு தடையாக அமைந்து காணப்படுகிறது. மென் திறன் மற்றும் துறை சார்ந்த தொழிநுட்ப அறிவை ஐணtஞுணூணண்டடிணீண் காலத்தில் ஒரு மாணவனால் பெற்றுக் கொள்ள முடிகிறது.

  1. சேவைத்துறை சார்ந்த இலங்கையின் அபிமானத்தை பூகோள ரீதியாக வளர்த்தல்

ஏற்கனவே இலங்கைக்குள்ள சர்வதேச அபிமானத்தை பேணிப் பாதுகாப்பதோடு, புதிய வழிமுறைகளை தேடுவதும் முக்கியமானது. இலங்கை தேயிலையின் அபிமானம், இலங்கை ஆடை தொழிற்துறையின் அபிமானம், இலங்கை யின் சுற்றுலாத் துறை மூலமான அபிமானங் களைக் கொண்டு கொழும்பு நகர திட்டத்திற் குரிய புதிய முதலீட்டு மூலோபாயங்களை மேற்கொள்வது         சவாலான விடயமாகும். போட்டித் தன்மை வாய்ந்த முதலீட்டு வாய்ப்புகளை சர்வதேச பொது இராஜ தந்திரங்கள் மூலமாகவும், கலை கலாசார பிரதி பலிப்பின் மூலமாகவுமே பெற்றுக் கொள்ளலாம்.

இலங்கை தமது பொருளாதார கொள்கை களை அமெரிக்க மற்றும் ஐரேப்பா சார்ந்து  மேற்கொள்வதை விடுத்து ஆசிய நாடுகளின் கூட்டிணைவில் பங்கேற்க வேண்டும். ஆசியான் கட்டமைப்புடன் பலமான ஒருங்கிணைப்புகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிய நாடுகளுடன் திறந்த பொருளாதார கொள்கை களை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்காவை மையமாகக் கொண்ட உலக அரசியல், சர்வதேச அரசியல், இராஜதந்திர முறைமைகள் பலமிழந்து வருகின்றன. சர்வதேச வங்கி முறைமைகளும் ஆசியான் கட்டமைப்பை நோக்கி நகர்கிறது. 2035 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவை தலைமையக மாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான செயற்பாடுகள் சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயற்படவுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை ஆசியா நாட்டு பொருளாதார வலை யமைப்பு களுடன் தமது செயற்பாடுகளை தீவிரப் படுத்த வேண்டும். ஆசியானில் 2030 ஆம் ஆண்டளவில் முழு உறுப்புரிமை பெற்ற நாடாக தமது ஆற்றலை தகைமைப்படுத்த வேண்டும். ஆசியா நாடு களிடையே பண்டமாற்று சேவை, தொழிநுட்ப   சேவை, தொடர்பாடல் துறை    சேவை, மருத்துவ துறை சேவை, சுற்றுலாத் துறை சேவை என்ப வற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றகரத்தை அடைந்திருக்க வேண்டும்.   சர்வதேச சேவைத்துறை யில் தற்போதுள்ள 0.1 வீதமான பங்களிப்பை 2030 ஆம் ஆண்டளவில் 2.00 வீதமளவுக்கு முன்னகர்த்த வேண்டும். ஆசியா நாடுகளிடையே சேவைத்துறை யில் 5.00 வீதத்துக்கும் அதிகமான நிலையை 2030 ஆம் ஆண்டளவில் பெற்றிருக்க வேண்டும். கொழும்பு நகர திட்டம் ஆசியாவின் பொருளாதார ஒழுங்குகளிலிருந்து விடுபட முடியாது.

சர்வதேச அங்கீகாரமுள்ள உயர் கல்வி நிலை யங்கள் ஆசியாவில் சிங்கப்பூரையும், மலேஷி யாவை யும் தளமாகக் கொண்டு செயற்படுகிறது. 2030 தொடக்கம் 2040 ஆம் ஆண்டளவுகளில் தென்னாசி யாவில் இலங்கையையும் சர்வதேச கல்விச் செயற் பாடுகளுக்கும், அதனோடிணைந்த ஆய்வுச் செயற் பாடுகளுக்குமான தளமாக, அது  சார்ந்த முதலீட்டுச் சூழலை இலங்கை கட்டி யெழுப்பும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.

ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிக் கொண்டு தமது தனிப்பட்ட நிலையான பொருளாதார ஒழுங்குகள் குறித்து சிந்திக்கிறது. 2030 ஆம் ஆண்டளவில் அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து விலகிக் கொள்ளும் எனத் தெரி விக்கப்படுகிறது. இத்தாலியும் 2025 இல் ஜரோப் பிய பொருளாதார கூட்டுகளிலிருந்து விலகிக் கொண்டு சுதந்திரமாகச் செயற்படவுள்ளது.

எனவே இலங்கை மரபான ஜரோப்பிய பொரு ளாதார ஒழுங்குகளை மாத்திரம் தமது வர்த்தக செயற்பாடுகளுக்கு கையாளும் தன்மையிலிருந்து விடுபட்டு புதிய பல்பக்க பங்காளர்களை தம்மோடு இணைத்துக் கொள்ளும் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக ஆசிய பொருளாதார கூட்டுகளுடன் தற்போதே இணைய வேண்டும்.

2041 ஆம் ஆண்டுக்கான சர்வதேச சேவைத் துறை சார்ந்த பல் பக்கப் பார்வைகளை தன்ன கத்தே கொண்டு கூடியளவு பருவகால ஆய்வு களின் அடிப்படையில், சர்வதேச துறை சார்ந்த நிபுணத் துவ ஆற்றல் கொண்ட நிறுவனங்கள்,  சேவை வழங்குனர்கள், பல் தேசிய நிறுவனங்கள், தனி நபர்களின் விமர்சன ரீதியான பங்களிப்பைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் பொருளாதாரத் துக்கு மிகப் பலமான நவீன மாதிரியாக கொழும்பு துறைமுக நகர திட்டம் அமைய வேண்டும். சர்வ தேச ஊடகங்களை, ஆய்வு நிறுவனங்களை, சமூக ஊடகங்கள் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை கொழும்பின் பக்கம் திருப்ப வேண்டும். அடைவு களைப் பெற்றுத்தரும் சர்வதேச விளம்பரங்களை, பொதுத் தொடர்பாடல் மூலோபாயங்களை இலங்கை தற்போதிலிருந்தே கையாள வேண்டும்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் அரசியல் காரணங்களுக்காக இழுத்தடிப்பு செய்யப்படும் பட்சத்தில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் வலயமாக பரிணமிக்கும் அபாயமுன்டு என்பதை அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது கொழும்பு துறை முகத்தில் மேற்கொள்ளும் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி கொழும்பு துறைமுக நகர திட்டத்துடன் இணைந்த வகை யில் கடல் போக்குவரத்தின் சேவைத்துறை சார்ந்த பிரதான துறைமுகமாக கொழும்பு துறைமுகத்தை யும் வலுப்படுத்தும் செயற்பாடுகளிலும் இலங்கை கவனம் செலுத்த வேண்டும்.

கொழும்பு துறை முகத்தின் கிழக்கு முனையம் சேவைப் பிரிவை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் மீள கவனம் செலுத்த வேண்டும். திருகோணமலை எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையத்தை இலாப மீட்டும் வலயமாக மாற்றுவதற்கான உன்மை யான துடர நோக்கு அர்ப்பணிப்புகள் மீதும் அதனோடு இணைந்த  சேவைத்துறைகள் மீதும் அரசாங்கம் கவனம் செலுத்தி 2041 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பு களுடன் கூடிய சேவைத் துறை  சார்ந்த ஆற்றலை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும்.

ஆசிய பிராந்தியத்தில் உருவாகி வரும் கொழும்பு துறைமுக நகரம் போன்ற சர்வதேச சேவைத் துறை சார்ந்த விஷேட பொருளாதார வலயங்கள் தொடர்பான மேலோட்ட பார்வை அட்டவணை 01.

குறிகாட்டி

வருடம் தகவல் மூலம் ஜக்கிய அரபு இராஜ்ஜியம் தென் கொரியா மலேஷியா இந்தியா

இலங்கை

நாடுகளின் தரைதோற்ற பருமன் (ச.கி.மீ) 2018 உலக வங்கி 71,020 97,489 328,555 2,973,190 62,710
மக்கள் தொகை (மில்லியன்) 2018 உலக வங்கி 9.6 51.6 31.5 1,352,62 21.7
பொது வசதிகள் உட்கட்டமைப்பு              
மின்சார இணைப்பு 2017 ஊலக வங்கி 100 100 100 92.6 97.5
மின்சார கடத்தியின் தரம் (வேகம், கொள்ளளவு, உற்பத்தி) 2019 பூகோல ஒப்பீட்டு வளர்ச்சி சுட்டி 42 7 38 108 39
இணைய பாவனைக்கான வாய்ப்புகள் 2018 உலக வங்கி 98 96 81 34 (2017) 34 (2017)
இனைணய பாவனைக்குரிய செலவு (1GB Data வுக்கான குறைந்த பட்ச செலவு) அமெரிக்க டொலர்களில் 2019 ஊயடிடந.உழ.ரம 10.23 15.1 1.2 0.3 0.8
பிரதான பாதைகளின் ஒன்றிணைவிற்கான வாய்ப்புகள் 2019 பூகோல ஒப்பீட்டு வளர்ச்சி சுட்டி 23 26 133 72 96
பாதைகளின் தரம் (பாதைகளின் உட்கட்மைப்பு, பாதைகளோடு இணைந்த பாலங்கள், மேம்பாலங்கள், இரு மருங்கிலுமான கழிவு நீர் வடிகாலமைப்பு, வீதி சமிஞ்சைகள் தரம்) 2019 பூகோல ஒப்பீட்டு வளர்ச்சி சுட்டி 7 9 19 48 76
விமான நிலையத்திற்கான (உட்பிரவேசம் மற்றும் வெளிப் பிரவேச வாய்ப்பு) 2019 பூகோல ஒப்பீட்டு வளர்ச்சி சுட்டி 19 16 20 4 59
தொழிலாளர் வளமும் தகைமையும்              
பாடசாலைக் கல்வி காலம் 2018 யுனெஸ்கோ 15.0 16.5 13.7 12.2 13.9
தொழித் துறைக் கல்விச் சேவைத் தரம் 2019 பூகோல ஒப்பீட்டு வளர்ச்சி சுட்டி 25 23 12 67 55
தகைமை பெற்ற பட்டதாரிகள் 2019 பூகோல ஒப்பீட்டு வளர்ச்சி சுட்டி 14 34 17 93 44
டிஜிடல் பாவனைக்கு  தகைமை பெற்ற மக்கள் தொகை 2019 பூகோல ஒப்பீட்டு வளர்ச்சி சுட்டி 14 25 10 59 68
அரசியல் சூழல்              
ஊழல் (180 நாடுகளை அடிப்படையாக் கொண்டது) 2018 ஊழல் தவிர்ப்புச் சுட்டி 23 45 61 78 89
அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் வன்முறை அற்ற தன்மை 2018 உலக அரசாட்சி சுட்டி 72 66 55 15 41
சட்டத்தின் ஆட்சி 2018 உலக அரசாட்சி சுட்டி 78 87 75 56 56
விதிமுறைகள் கையாள்கை விதம் 2018 உலக அரசாட்சி சுட்டி 80 83 75 47 48
குறிகாட்டி வருடம் தகவல் மூலம் ஜக்கிய அரபு இராஜ்ஜியம் தென் கொரியா மலேஷியா இந்தியா இலங்கை
நாடுகளின் தரைதோற்ற பருமன் (ச.கி.மீ) 2018 உலக வங்கி 71,020 97,489 328,555 2,973,190 62,710

 

ஆசிய பிராந்திய சர்வதேச விஷேட சேவைத்துறை சார்ந்த பொருளாதார வலய நாடுகளின் குறிப்பிட்ட துறை சார்ந்த அடைவுகளை உள்ளடக்கிய விபர அட்டவணை 02.

 

டுபாய் சர்வதேச வர்த்தக நிலையம் (டுபாய்)

சன்ங்டே சர்வதேச பொருளாதார  மாவட்டம் (தென் கொரியா) லபுஆன் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக நிலையம் (மலேஷியா) குஜராத் சர்வதேச வர்த்தக தொழிநுட்ப நகரம் (இந்தியா) கொழும்பு துறைமுக நகரம் (இலங்கை)  

சேவைத் துறை வகை வர்த்தகத் துறை தளம் தகவல் தொடர்பாடல் துறை   சார்ந்த ஸ்மாட் பொருளாதார தளம் சர்வதேச பொருளாதார துறை சார்ந்த தளம் பல் துறை சார்ந்த சர்வ தேச  விஷேட பொருளாதார தளம் பல் துறை சார்ந்த விஷேட பொருளாதார  தளம்   சேவைத் துறை வகை
தற்போதைய நிலை ஆரம்ப கட்ட செயற்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பகுதி அளவிலான செயற்பாடு கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2020-2023 ஆம் ஆண்டுக்குள் பூர்டத்தி செய்யப்படும் ஆரம்ப செயற்திட்டம் முடிவ டைந்துள்ளது. முதலீடுகளின் பால் கவனம் செலுத்துகிறது. பொரும்பாலான பகுதி நிர்மா னிக்கப்பட்டக் கொண்டிருக்கிறது, பகுதி அளவிலான செயற்பாடு கள் ஆரம் பிக்கப்பட்டுள்ளன. 2020-2023 ஆம் ஆணடலவில் பூர்த்தி செய்யப்படும். நிர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கறிது. 2041 ஆம் ஆண்டு செயற்பாடுகள் ஆரம் பிக்கப்படவுள்ளது.   தற்போதைய நிலை
பருமன் 1.1ச.கி.மீ 6 ச.கி.மீ 89.4 ச.கி.மீ (முடி வான அளவு குறிப் படப்படவில்லை) 3.58 ச.கி.மீ 2.69 ச.கி.மீ   பருமன்
பொருளாதார பார்வை             பொருளாதார பார்வை
கம்பனிகள் 2,137 (2018) 1600 (2017) 15,260 (2018) 225 (2019) தரவுகள் இல்லை   கம்பனிகள்
தொழிலாளில்கள் 23,604 (2018) 60,00(2017) 6,000 (2019) 9,000 (2016)எதிர் வரும் மூன்று ஆண்டுகளில் 30,000 புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க உத்தேசித்துள்ளது. 2041 ஆம் ஆண்டு முழு மையான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் போது 210,000 தொழில் வாய்ப்பு கள் உருவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது.   தொழிலாளில்கள்
குடியிருப்புத் தொகுதி (வீடுகள்) தரவுகள் இல்லை 36,000 (2017) முழுமை யடையும் போது 65,000 வீடுகள் என கணிப்பிடப் பட்டுள்ளது. 100,000 (2018) வீட்டுத் தொகுதி கட்டிட நிர்மாணப்பணி இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது 75,000 (2041)   குடியிருப்புத் தொகுதி (வீடுகள்)
இத் தளங்களை பார்வையிடும் மக்கள் தொ கை (வருடாந்தம்) நுகர்வு மறறும் பொழுது போக்கு) 8.5 மில்லியன் 1 மில்லியன் (2015) சியோல் நகர மக்களை மாத்திரம் அடிப்படை யாகக் கொண்டு தரவுகள் இல்லை தரவுகள் இல்லை 175,000 (நாளாந்தம்) ஒரு நாளில் ஒருவர் பல தடவை உட்பிரவேசிப்ப தையும், வெளியேறுவதை யும் அடிப்படையாகக் கொண்டு   இத் தளங்களை பார்வையிடும் மக்கள் தொ கை (வருடாந்தம்) நுகர்வு மறறும் பொழுது போக்கு)
பல சரக்கு, ஹொட்டேல், ஆடை மற்றும் அலங்காரப் பொருட்கள் சார்ந்த விற்பனைத் தொகுதிகள் 281(2018) 1000 (2017 முடிவான தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை   பல சரக்கு, ஹொட்டேல், ஆடை மற்றும் அலங்காரப் பொருட்கள் சார்ந்த விற்பனைத் தொகுதிகள்