10 க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் மாகாண தேர்தலில் வெற்றி.

56

அமெரிக்காவில் உள்ள மாகாண பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 5 பெண்கள் உட்பட 10 க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றனர். அமெரிக்க மாகாணங்களின் பேரவைகளுக்கான தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அவற்றில் இந்திய அமெரிக்கர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் நிமா குல்கர்னி (கென்டக்கி), கீஷா ராம் (வெர்மோண்ட்), வந்தனா ஸ்லேட்டர் (வாஷிங்டன்), பத்மா குப்பா (மிச்சிகன்), ஜெனிஃபர் ராஜ்குமார் (நியூயார்க்) ஆகியோர் பெண்கள் ஆவர்.

அவர்கள் தவிர நீரஜ் ஆண்டனி (ஓஹியோ), ஜெய் செதரி (வடக்கு கரோலினா), அமிஷ் ஷா (அரிஸனா), நிகில் சாவல் (பென்சில்வேனியா), ரஞ்சீவ் புரி (மிச்சிகன்), ஜெரிமி கூனி (நியூயார்க்), ஸ்ரீதானதர் (மிச்சிகன்), ஏஷ் கல்ரா (கலிஃபோர்னியா) ஆகியோரும் மாகாண பேரவைக்கான தேர்தல்களில் வெற்றி பெற்றனர்.