மடையர்களாக்கப்படும் மக்கள்

116
  • விக்டர் ஐவன்

நாடு எந்தளவு பாதாளத்தில் விழ முடியுமோ அந்தளவு பாதாளத்தில் தற்போது வீழ்ந்துள்ள தாகக் கூறமுடியும். வெளியிலிருந்து யாரும் எம்மை இந்த இடத்திற்கு தள்ளவில்லை, மாறாக நாட்டின் தலைவர்கள் கல்விமான்கள் நாட்டுமக்கள் உட்பட அனைவரும் சேர்ந்தே இந்த இடத்தைத் தெரிவு செய்து கொண்டதாகக் கூறமுடியும்.

இலங்கை மனப்பாடம் செய்வதன் மூலம் கல்வி வழங்கப்படுகின்ற ஒரு முட்டாள் சமூகமாகும். 1ம் தரத்திலிருந்து பல்கலைக் கழகம் வரை மனனம் செய்வதன் மூலமே கல்வி வழங்கப்படுகின்றது. சாதாரண தரத்தில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி மட்டத்தை அதிகரிப்பதற்காக எடுக்க வேண்டிய புள்ளிகளின் அளவை மிக அதிகமாகக் குறைத்தே தேர்ச்சி மட்டத்தை அதிகரித்துள்ளனர். சில வருடங்களில் இந்த புள்ளிக் குறைப்பானது 14 புள்ளிகள் வரை சென்றுள்ளது.

குழந்தையொன்றுக்கு சிறிய வயதிலேயே உயர் அளவிலான அறிவுத் திறன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரக் குழந்தையொன்று கூட தாய்ப் பாலின் மணத்தை வைத்து தனது தாயை அறிந்துகொள்ளும் அறிவு அதற்கு வழங்கப்பட் டுள்ளது. பிள்ளைகளை ஒன்றிணைந்த செயற் பாடுகள், ஆய்வுகள், கேள்வி கேட்டல் போன்ற விடயங்களிலிருந்து தூரப்படுத்தி அனைத்து விடயங்களையும் மனனம் செய்வதன் மூலம் கற்பிக்கப்படும் பிள்ளை விமர்சன பூர்வமாக  ஒரு விடயத்தைப் பார்க்கும் பண்பை இழந்து முட்டாளாக மாறுகின்றது. இந்த முட்டாள் தனமானது முழு சமூகத்தையும் தற்போது பீடித்துள்ளதாகக் கூறமுடியும்.

IQ மட்டம்

2020ம் ஆண்டின் உலகில் IQ மட்டத்தில் இலங்கை 79 புள்ளிகளைப் பெற்று 137ம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 108 புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தைப் பிடித்துள்ள அதேநேரம் 59 புள்ளிகளைப் பெற்று மேற்கு ஆபிரிக்காவின் கினிஸோவா உலகின் 184ம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நான்கு தசாப் தங்களில் இலங்கை அடைந்துள்ள அறிவு வீழ்ச்சியின் அளவை இதன்மூலம் புரிந்து கொள்ள முடியும். மனனம் செய்வதன் அடிப்படையில்  இலங்கையில் கல்வி முறைமையை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் கல்வி அதிகாரிகள் மற்றும் நாட்டை ஆள்பவர்கள் நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ள தீங்கின் அளவை இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இதற்கு கல்விமான்கள் போன்றே நாட்டின் ஊடகவியலாளர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

மனன அடிப்படையிலான கல்விமுறை தொடர்பாக நாட்டில் எந்தவிதமான விவாதமும் இடம்பெறுவதில்லை என்றே கூறலாம். இந்த மோசமான முறைமை தொடர்பாக ஆசிரியர் களோ ஆசிரிய சங்கங்களோ எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவித்ததில்லை. மிகவும் கவலைக் கிடமான நிலை என்னவென்றால் இந்தக் கல்வி முறைமையானது பல்கலைக்கழகக் கல்வி முறையிலும் எந்தவிதமான எதிர்ப்புமின்றி நடை முறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதுதான்.

விமர்சனபூர்வமான பார்வை  இல்லாதொழிதல்

விமர்சனபூர்வ பண்பை இழந்தவர்களுக்கு விசேடமானதொரு சந்தோசம் இருக்கின்றது என்றால் அந்த அதிகபட்ச சந்தோசத்தை அனுப விப்பவர்களாக இலங்கை மக்கள் உள்ளனர். நாட்டின் பொருளதாரம் படுமோசமான நிலையிலேயே இருந்தது, தற்போதும் உள்ளது. நாட்டின் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் நிலைமையும் நாடு மிக அண்மையிலேயே வங்குரோத்து நிலையை அடையும் என்ற இடத்திலேயே உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக நாட்டின் கொரோணா நிலைமையும் கட்டுப்படுத்த முடியாத அளவை அடைந்துள்ளது.

நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இவ்வாறு கழுத்து மட்டத்தை அடைந்துள்ள போதும் நாட்டின் ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள், புத்தி ஜீவிகள், பொதுமக்கள் இது தொடர்பான தெளி வற்ற நிலையிலேயே உள்ளனர். இது தொடர் பான கருத்தாடல்களும் எங்கும் இடம்பெறுவ தாகத் தெரியவில்லை. நாட்டின் புத்திஜீவிகளின் நிலை கவலைக்கிடமானது. ஊடகங்களது நிலை யும் வேடிக்கையாக உள்ளது. அவர்கள் தமது இலட்சினையை பிரபலப்படுத்துவதற்காக வேண்டி வதந்திகளை போட்டிக்கு பரப்பிக் கொண்டிருக்கிறார்களேயன்றி நாட்டின் இவ்வா றான நிலைமை தொடர்பான ஆரோக்கியமான கலந்துரையாடல்களையோ கருத்தாடல்களையோ நடைமுறைப்படுத்துபவர்களாக இல்லை. நாட்டின் ஆட்சி, சட்டம் நீதி உட்பட அனைத்து விடயங்களும் இந்த ஆழ வேறூன்றியுள்ள மோசமான முறைமையை பாதுகாப்பதும் பலப்படுத்துவதுமாகவே உள்ளது.

BCG தடுப்பூசி

இலங்கையில் தற்போது கொரோணா பரவலின் வேகம் அதிகரித்துள்ள போதிலும் காச நோய்க்காகப் பயன்படுத்தப்படும் BCG தடுப்பூசி சிறந்த முறையில் பயன்படுத்தப் பட்டமை காரணமாக உலகின் ஏனைய நாடுகளை விட இலங்கையில் மரண விகிதம் குறைவாக உள்ளது. குறித்த தடுப்பூசியினால் வழங்கப்பட்டுள்ள எதிர்ப்புச் சக்தியானது கோவிட் ஐ கட்டுப்படுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள் ளப்பட்டுள்ள ஆய்வு களிலும் BCG தடுப்பூசி பயன்படுத்தாத நாடுகளை விட தடுப்பூசி பயன்படுத்துகின்ற நாடுகளின் மரண விகிதம் குறைவாகவே உள்ளது. இந்த தடுப்பூசியை எந்த விதத்திலும் பயன்படுத்தாத  26 நாடுகள் உள்ள அதேவேளை அமெரிக்கா உட்பட குறித்த நாடுகளிலேயே அதிக மரண விகிதம் பதிவாகியுள்ளது.

அருகருகே உள்ள ஸ்பெய்னின் மரண வீதத்தை விட போர்த்துக்கலில் மரண வீதம் குறைவாகவே உள்ளது. ஸ்பெய்னில் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 35,369. போர்த் துக்கலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,438 ஆகும். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் ஸ்பெய்ன் BCG தடுப்பூசி பயன்படுத்துவதில்லை. அதேநேரம் போர்த்துக்கல் இதனைப் பயன்படுத்துகின்றது. இலங்கை 1949ம் ஆண்டிலிருந்து இந்த தடுப்பூசியை சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றதுடன் இலங்கை சனத் தொகையில் 95 வீதமான வர்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.