பஹ்ரைனின் புதிய பிரதமர்

66

உலகில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்ற பஹ்ரைன் நாட்டின் 84 வயதான பிரதமர் ஷேய்க் கலீபா பின் ஸல்மான் அல் கலீபாவின் மறைவைத் தொடர்ந்து பஅந்த நாட்டின் புதிய பிரதமராக ஷேய்க் ஸல்மான் பின் ஹமாத் அல் கலீபா பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீபாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1971 முதல் பிரதமராகப் பதவி வகித்த பின் ஸல்மான் அல் கலீபா, அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் நேற்றுக் காலமானார். அதனைத் தொடர்ந்து பஹ்ரைனில் ஒருவார காலத் துக்கதினம் மன்னரால் அறிவிக்கப்பட்டது.

1783 முதல் அல்கலீபா குடும்பத்தினரே பஹ்ரைனை ஆட்சி செய்து வருகின்றனர்.

மறைந்த பிரதமர் கடலால் சூழப்பட்ட பஹ்ரைனில் வெளிநாட்டு அதிதிகளைச் சந்திப்பதற்கென சொந்தமான தீவொன்றைக் கொண்டிருந்தார். முன்னாள் ஆட்சியாளரான தனது தந்தை ஷேய்க் ஸல்மான் பின் ஹமத் அல் கலீபா (1942-1961) விடமிருந்து ஆட்சி அதிகாரத்தைக் கற்றுக் கொண்டார். 1961 இல் இவரது சகோதரர் ஷேய்க் ஈஸா பின் ஸல்மான் அல் கலீபா மன்னரானார். 1971 இல் பஹ்ரைன் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது.