14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000, – 43 ஆயிரம் குடும்பங்களுக்கு 10,000

22

COVID – 19 தொற்று நிலைமையினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அரச நிவாரண நடவடிக்கைகளில் இதுவரை சுமார் 14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவும்  43 ஆயிரம் குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களும்  வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த மாதத்திலிருந்து இம்மாதம் 10 ஆம் திகதி வரையிலும் இவை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக திறைசேரியிலிருந்து 7.56 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5,000 ரூபா கொடுப்பனவிற்காகவே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கின்றது.

கொழும்பு மாவட்டத்தில் 7500 குடும்பங்களுக்கும் கம்பஹா மாட்டத்தில் 7000 குடும்பங்களுக்கும் களுத்துறை மாவட்டத்தில் 4000 குடும்பங்களுக்கும் 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.