தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம். பாதிக்கப்பட்ட அனைவரும் அவசரமாக இந்நோயிலிருந்து குணமடைய வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
இவ்வைரஸின் பாதிப்பால் நாட்டில் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்டவர்களில் நாளாந்தம் உழைத்து தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களை அடையாளங் கண்டு இன மத பேதமின்றி அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.
“அயலவன் பசித்திருக்க தான் மாத்திரம் வயிறு நிரம்ப புசிப்பவன் உண்மை விசுவாசியல்ல” என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். உணவளிப்பது என்பது இஸ்லாத்தில் பெரும் நன்மையை ஈட்டித்தரும் செயலாகும். அதேபோன்று சதகாக்கள் சோதனைகளை விட்டும் எம்மைப் பாதுகாக்கும் என்பதும் நபி மொழியாகும். எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகமாக சதகாக்களில் ஈடுபடுவது மிகச் சிறந்த அமலாகும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட/ பிரதேசக் கிளைகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், மஸ்ஜித்கள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் தத்தம் பிரதேசங்களில் வாழும் மக்களை இனங்கண்டு உதவிகளை செய்யவதோடு, பக்கத்து மாவட்டங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கும் தங்கள் உதவிக் கரங்களை நீட்டுமாறு ஜம்இய்யா மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றது.
மேலும், இவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றவர்கள் அரசாங்கத்தின் சட்டங்களை மதித்து, உரிய அனுமதிகளைப் பெற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
கொவிட் 19 வைரஸின் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களும், அப்பிரதேசங்களில் வாழ் மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ள வேண்டிய ஜம்இய்யாக் கிளைகளின் தகவல்களும் பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் குறிப்பிட்ட ஜம்இய்யாக் கிளைகள் உலர் உணவுப் பொதிகளை வழங்குதல் போன்ற தம்மாலான உதவிகளை வழங்கி நன்மைகளை பெற்றுக் கொள்வதோடு ஏனைய பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் உதவிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதை ஜம்இய்யா எதிர்பார்க்கின்றது.
எனவே, மேற்கூறப்பட்ட அடிப்படையில் உதவிகளை மேற்கொள்ள முன்வருபவர்கள் ஜம்இய்யாவின் சமூக சேவைக் குழு ஒருங்கிணைப்பாளரான அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் 0777571876 அவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தேவையான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் இத்தால் குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.
உதவித் தேவைப்படும் பிரதேசங்கள் மற்றும் உதவிகளை மேற்கொள்ளும் ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் விபரங்கள்
கொவிட் 19 நோயின் காரணத்தினால் ஊரடங்கில் உள்ள பிரதேசங்கள் | உதவிகளை மேற்கொள்வதற்காக பிரித்துக் கொடுக்கப்பட்ட பகுதிகள்/ஜம்இய்யா கிளைகள் | |
மாவட்டம் | ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகள் | |
கொழும்பு | மட்டக்குளிய, முகத்துவாரம், புளுமென்டோல், கொட்டாஞ்சேனை. | மடவளை பிரதேசம் |
கிரேண்ட்பாஸ், கரையோர பிரதேச பொலிஸ் பிரிவு, ஆட்டுப்பட்டித் தெரு. | கண்டி நகரம் | |
மாளிகாவத்தை, தெமட்டகொட |
அக்குரணை, கல்ஹின்னை |
|
வெல்லம்பிட்டிய | ||
வாழைத்தோட்டம் | ||
பொரலை. | ||
கம்பஹா | வத்தளை, பேலியகொட, |
மாத்தறை மாவட்டம், ஹம்பாந்தோட்டை மாவட்டம் |
கடவத்தை, ராகம, | ||
நீர்கொழும்பு | ||
பமுணுகம | ||
ஜா-எல, சப்புகஸ்கந்த | ||
களுத்துறை | ஹொரணை, இங்கிரிய பொலிஸ் பிரிவு மற்றும் வேகட மேற்கு கிராம சேவையாளர் பிரிவு | காலி மாவட்டம் |
கேகாலை | மாவனெல்ல | மாத்தளை மாவட்டம், பலாங்கொடை நகரம். |
ருவன்வெல்ல | ||
குருநாகல் | குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு | குருணாகலை மாவட்டம் |
மட்டக்களப்பு | வாழைச்சேனை பொலிஸ் பிரிவு | காத்தானகுடி, ஏறாவூர் |
குறிப்பு: கொழும்பு மாவட்டக் கிளை பொதுவாக அனைத்து பிரதேசங்களிலும் செயற்படும் |
அஷ்–ஷைக் கே. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி)
செயலாளர் – கிளைகள் விவகாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்–ஷைக் ஏ.எல்.எம். ரிழா
உப தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா