பல இஸ்லாமியச் சட்டங்களை கைவிட்டது அமீரகம்

118

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழும் வெளிநாட்டினர் தொடர்பில் பல இஸ்லாமிய சட்டங்களை அமீரகம் மாற்றியமைத்துள்ளது. வெளிநாட்டினரின் அன்றாட வாழ்வை எளிதாக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமீரகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 8.44 மில்லியன் வெளிநாட்டினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்காசியாவில் இருந்து அமீரகத்துக்குக் குடிபெயர்ந்தவர்களாவர்.

இவர்களின் வசதிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தினர் அல்லாது மற்ற நாடுகளில் இருந்து வந்து அங்கு வாழ்பவர்கள், அவர்களது தனிப்பட்ட சொந்த விஷயங்களில், தங்கள் சொந்த நாட்டில் என்ன சட்டம் உள்ளதோ அதனை பின்பற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து, பிரிந்து வாழ்தல், சொத்து பிரிவினை, மது அருந்துதல், தற்கொலை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடனான பாலியல் உறவு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான சட்டங்கள் இதற்கென மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் உடனான உறவுகளை அமெரிக்காவின் உதவியுடன் சீராக்கியதை தொடர்ந்து இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இதனால் ஏற்கனவே இஸ்ரேலிய சுற்றுலா வாசிகளும் முதலீட்டாளர்களும் அதிகரித்துள்ளனர்.

பல்வேறு கட்டங்களில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத் அல் நஹ்யான் இந்த உத்தரவுகளை நவம்பர் 7, 2020 அன்று அறிவித்தார். இது உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அவர்

திருமணம் ஆகாதவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதும் வெளிநாட்டவருக்குக் குற்றச்செயல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.