கொரோனா சிகிச்சை நிலையங்களில் நெருக்கடி இல்லை

0
11

நாடளாவிய ரீதியில் 36 சிகிச்சை நிலையங்களில் கொரோனா நோயாளர்களுக்கு தற்போது சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.இந்த நிலையங்களில் 2800 படுக்கைகள் தயார் நிலையிலுள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் சில வைத்தியசாலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தேவை கருதி குறித்த வைத்தியசாலைகளில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையை தவிர, தொற்றிலிருந்து குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிப்பதால் சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி நிலை ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.