பைடனின் வெற்றியை விட டிரம்பின் தோல்வியே அமெரிக்க மக்களின் சாதனை

37
  • காமினி வியங்கொட

சில சந்தர்ப்பங்களில் நாம் பயணங்களை நிறுத்த வேண்டி வருவது புதிய பயணமொன்றை ஆரம்பிப்பதற்காகவன்றி படுகுழிக்குள் விழுந்து விடாமல் இருப்பதற்கே. பைடனின் எதிர்கால பயணம் தொடர்பாக கருத்துக் கூறுவதற்கு இன் னும் காலம் இருக்கின்றது. ட்ரம்பின் பயணத்தை தடுத்து நிறுத்தி 200 வருடங்கள் பழமையான ஜனநாயகத்தையும் அதனையும் விட பழமை யான சிவில் நாகரிகத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றிய சந்தர்ப்பமாக இதனைக் கருதுவது முட்டாள்தனமானதல்ல.

டொனால்ட் ட்ரம்ப் அசாதாரணமாக மனதள வில்  பாதிக்கப்பட்ட விகாரமான உருவ மொன்றை பிரதிபலித்த ஒரு நபராவார். அவரது பேச்சு மாத்திரமன்றி, அதனை முன்வைக்கும் உடல் பாங்கை அவதானித்தாலும் சாதாரணமாக ஒரு பிரசித்தி பெற்ற பேச்சாளரின் கைகள் வெளி நோக்கியே இருக்கும். அது சிலரின் ஒரு கையாக இருக்கலாம். இன்னும் சிலரின் இரு கைகளாக வும் இருக்கலாம். டொனால்ட் ட்ரம்பின் எந்தப் பேச்சையாவது எடுத்துப் பாருங்கள், அவரது இரு கைகளும் மூட்டினால் மடிக்கப்பட்டு வயிற்றின் இரு பக்கமும் அவரை நோக்கியே இருக்கும். இது அவர் அதிகம் பேசும் சொற்களி லும் காணக்கூடிய ஒரு வினோதமானதொரு விடயமாகும்.

‘வள வள எனப் பேசுகின்றவர்’ என பேச்சா ளர் வகையொன்று உள்ளது. அவர்களை அவர் களது பேச்சின் உள்ளடக்கத்தினாலன்றி அவர்கள் தமது வாயினால் வெளிப்படுத்துகின்ற அதிக சத் தத்தினை வைத்தே அடையாளம் கண்டுகொள்ள லாம். கழுத்து நரம்புகள் வெளியே தெரிய, கண் கள் பெரிதாகி, முகம் சிவந்து ஒரு வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் அதிக உச்சரிப்புடன் வெளிப்படுத்துகின்றமை போன்ற வெளிப்படை யான அம்சங்கள் மூலம் இவர்களை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளலாம். அவ்வாறான வர்களிடம் கூட ட்ரம்ப் இன் அசைவுகள் போன்று அடையாளங்களை இதுவரை நான் கண்ட தில்லை. இதன் காரணமாக எனக்கு ட்ரம்ப்     அசாதாரணமாக மனதளவில் பாதிக்கப்பட்ட ஒருவரை பிரதிபலிக்கின்றவர் என்று பல சந்தர்ப் பங்களில் தோன்றியுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங் களில் அவரால் கூறப்பட்ட கருத்துக்களை வைத்து இது இன்னும் எனக்கு உறுதியாகின்றது.

இந்த மனநோயாளியையும் இதற்கு முன்னர் இருந்த அமெரிக்க ஜனாதிபதிகளது செயற்பாடு களையும் ஒப்பிடுகின்ற பல விடயங்களை ஊட கங்களில் காணக் கிடைத்தது. உதாரணமாக பின்லாடன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் அதனை அமெரிக்க ஜனாதிபதி உலகிற்கு முன் வைத்த விதம் மற்றும் அதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் இவ்வாறான மிக முக்கியமான சந்தர்ப்பம் ஒன்றில் எவ்வாறு நடந்துகொண்டுள் ளார்கள், அவர்கள் பயன்படுத்திய சொற்கள் என்ன என்பவை பதியப்பட்டுள்ளன. அவர்களது குறித்த செயற்பாடுகள் தொடர்பாக பல வித்தி யாசமான கருத்துக்கள் இருந்தாலும், குறிப்பிட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும், ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போன்ற குரூரமான விடயங்களில் கூட அவர்கள் கவனமாக வார்த்தைகளை பயன் படுத்துவதற்கே முயற்சித்துள்ளார்கள்.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வருவ தற்கு முன்னரும் ஆட்சிக்கு வந்ததன் பின்னரும் அவர் எந்த விடயத்தை பேசினாலும் அதில் இருந்த  முரட்டுத் தனமும் சிறுபிள்ளைத் தனமும் வேறு நாட்டுத் தலைவர்கள் மாத்திரமன்றி எமது பாடசா லைக் கால ‘மருதானை சொப்ப’ போன்றவர் களையே வெட்கப்பட வைக்கின்றளவுக்குள்ளது.

இது கடந்த வாரம் உச்சத்தை எட்டியது. வாக்கு கள் எண்ணப்படும் சந்தர்ப்பத்தில் பைடன் அவரை விட கூடிய வாக்குகள் பெறுகின்றமை உறுதியாகிக் கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் அவரால் கூறப்பட்ட விடயங்கள், அவரது தோல்வி உறுதியான பின்ன ரும் அவரே அவர் வெற்றி பெற்றதாக அறிவித் தமை போன்றவை, அவரது மனக் குழறுபடியை விளங்கிக் கொள்ளாதவர்கள் யாரும் இருந்தால் அவர்களும் இவரது மனக்குழறுபடியை விளங்கிக் கொள்ளும் வகையிலேயே இருந்தது.

இறுதியாக அவரது பேச்சை நான் கேட்டது சில தினங்களுக்கு முன்னரே. ‘’என்னை விட அறிவுள்ள ஒருவர் இருக்கின்றாரா? கூறுங்கள் பார்ப்போம், அவ்வாறு யாரும் இருக்கின்றாரா? என்னை மாதிரி பணம் இருக்கும் ஒருவர் இருக்கின்றாரா? கூறுங் கள் பார்ப்போம், எனது வீடு மாதிரி அழகான வீடொன்று வேறு யாரிடமாவது இருக்கின்றதா? ஹா கூறுங்கள்; எனது வீடு எவ்வளவு அழகானது.”

நான் கூறுகின்ற இந்த விடயத்தை நீங்கள் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இது உண்மை. இந்த அனைத்து வசனங்களும் அவரால் கூறப்பட்ட வையே. நீங்கள் இதனை நம்ப முடியாமல் இருப் பதற்குக் காரணம் உங்களுக்கு சாதாரண அறிவும், புத்தியும் இருப்பதனாலேயே. நீங்கள் ஆரோக்கிய மாக இருக்கின்றதாலேயே. அவ்வாறானதொரு ஆரோக்கியமான மனதுக்கு இவ்வாறானதொரு தூசனத்தை ஏற்றுக்கொள்வதற்கும் அங்கீகரிப்பதற்கும் முடியாததனாலேயே. அதன் காரணமாக எனது கருத்தை நீங்கள் நம்ப முடியாமல் இருப்பதே ட்ரம்ப் என்பவர் விரைவாக குணப் படுத்தப்பட வேண்டிய ஒரு மனநோயாளி என்ற எனது நிலைப் பாட்டை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.

மற்றையவர்களை விட அழகானதொரு வீடு எனக்கு உள்ளது என்பது அமெரிக்க ஜனாதிபதியா வதற்கான தகுதியை எனக்கு வழங்குகின்றது என அவர் நினைப்பது மாத்திரமன்றி அதனை சத்தமாக உலகிற்கும் கூறுகின்றார் என்பது ஒரு நம்ப முடி யாததொரு விடயமாகும். இவ்வாறானதொரு நபரை 2016இல் அமெரிக்க மக்கள் தெரிவு செய்தது அவர்கள் மடையர்கள் என்பதனாலா? அல்லது அவர்கள் இவ்வருடம் அவரை தோல்வியடையச் செய்ததன் காரணமாக  அவர்கள் அறிவாளிகளா?

இது ஒரு இலகுவான பிரச்சினையல்ல. இதற்கு வழங்க முடியுமான பதிலும் சிக்கலானது. அபிவி ருத்தியடைந்ததாகக் கருதப்படும் நாடு ஒன்றில் கூட பெரும்பாலும் மக்கள்  ஒரு பிரச்சினைக்கு உடனடி யான தீர்வையே விரும்புகின்றனர். இதனை ஒரு உதாரணம் மூலம் பின்வருமாறு விளக்குவதற்கு விரும்புகின்றேன்.

அமெரிக்காவில் தொழிலின்மை, போதைப் பொருள் வியாபாரம், அதற்கு அடிமையாதல், குற்றங்கள் மற்றும் சமூக அமைதியின்மை போன்றவற்றிக்கு பிரதான காரணம் வெளிநாடு களிலிருந்து புதிதாக குடியேறிய மக்கள் அங்கு அதிகம் உள்ளமையும் தென் அமெரிக்காவின் அபிவிருத்தியடையாத நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களுமே என்ற கருத்து அமெரிக்காவில் தேசியவாத சிந்தனையுள்ளவர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அமெரிக்கா பூகோள ரீதியாக இலத்தீன் அமெரிக்காவுடன் தொடர்புறுவது மெக்ஸிகோ ஊடாகவே. மெக்ஸிகோ அமெரிக்கா எல்லை சுமார் 2000 மைல்கள். இலங்கையின் தெவுந்தர முனையிலி ருந்து பேதுறு முனை வரையுள்ள தூரத்தின் 7 மடங்காகும்.

அமெரிக்காவிற்கு தெற்கில் உள்ளவர்கள் இவ்வாறு குடியேறிகளாக வருவதற்கு காரணம் அங்கு காணப்படும் வறுமையாகும். இந்த வறுமை யின் ஒரு பகுதியை அமெரிக்காவும் ஏற்க வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு நீண்டகாலத் தீர்வாக அமையலாம். ஆனால் இது ஒரு நீண்டகால முடிவற்ற ஒரு தீர்வாகும். அதற்குப்பதிலாக 2016ம் ஆண்டு இந்த  வளவளா பேச்சாளர் இதற்கான உடனடித் தீர்வொன்றை முன்வைக்கிறார். அது என்னவென்றால் தான் பதவிக்கு வந்தால் இந்த 2000 மைல் தூரத்திற்கு ஒரு மதிலைக் கட்டுவதாக மக்களுக்கு வாக்களிக்கின்றார். உடனடித் தீர்வுகளை விரும்பும் மக்களுக்கு இது ஒரு கவர்ச்சியான தீர்வாகும்.

இந்த நீண்ட எல்லையில் ட்ரம்ப் ஆட்சிக்கு வர முன்னரே 654 மைல்கள் அளவுக்கு பாதுகாப்பு வேலிகள் காணப்பட்டன. ட்ரம்பின் ஆட்சிக் காலத் தில் இது 669 மைல்களாக வளர்ச்சியடைந்துள்ளது. அதாவது 4 வருட காலத்தில் ட்ரம்ப் 15 மைல்கள் மேலதிகமாக இந்த மதிலை அமைத்துள்ளார். இந்த குடியேறிகளின் பிரச்சினைக்கு ட்ரம்ப் முன்வைத்த தீர்வின் பரிமாணம் அவ்வளவுதான்.

ஆனால் கடந்த 4 வருடங்களாக புத்திசுவாதீன முள்ள உலக மக்களிடமிருந்து  தூரமாகும் மதிலை அவர் கட்டிக்கொண்டிருந்தார். ஜனநாயகத்தின் அனைத்து அடிப்படைகளையும் அவர் விமர்சித் தார். நாகரிகத்தை விமர்சித்தார். அவரது இந்த ஜனநாயக விரோத செயற்பாடுகள் ஜனநாயக முறை மையை விமர்சிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜனநாயக முறைமை அல்லாமல் ஏகாதிபதியாக செயற்படுவதன் மூலமே பிச்சினை களுக்கு தீர்வு வழங்கலாம் என்ற கருத்து வலுப் பெற்று வந்தது. அவர் இம்முறையும் வெற்றி பெற்றிருந்தால் இக் கருத்துக்கள் இன்னும் வலுப் பெற்றிருக்கும். இலங்கையிலும் இவரது முறைமை யை சரி காணும் தற்போதைய ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பர். இதனை ஜனநாயகத்தின் தோல்வியாக இவர்கள் அடையாளப்படுத்தி பார்த்தீர்களா, உலகின் முதன்மையான அபிவிருத்தி அடைந்த நாட்டிலே மக்கள் ஜனநாயகத்தையன்றி வேலை செய்யக் கூடியவர்களைத்தான் விரும்புகின்றார்கள் என்று எமக்கு பாடம் நடாத்தியிருப்பார்கள்.

ட்ரம்பின் தோல்வியானது ‘மதில் தீர்வை’ மக் கள் நிராகரித்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றது. மக்கள் அவரை ஏன் இறுதித் தருணத்தில் நிராகரித் தார்கள் என்றால் அவர் 2016 இல் கூறியது போல் அல்ல என்பதனை மக்கள் 2020 இல் புரிந்து கொண்டனர். எனவே மக்கள் அவரை தோல்வி யடைச் செய்தனர்.

இலங்கையிலும் இவ்வாறு ஒரு வருடத்திற்கு முன்னர் மக்கள் வாக்களித்தனர். எல்லோருக்கும் ஒருசட்டம் (ஒரே நாடு, ஒரே சட்டம்), உறவினர் களுக்கு முன்னுரிமை வழங்காமை, மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டித்தல், சீனா இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய் துள்ள நாட்டின் சொத்துக்களை மீளப்பெறல், இலங்கையின் ஒரு அங்குலத்தையேனும் வெளி நாடுகளுக்கு வழங்குவதில்லை, துறைமுகத்தின் கிழக்குப் பகுதி இறங்கு துறையை இந்தியாவுக்கு வழங்காமை, ஏப்ரல் தாக்குதல்தாரிகளுக்கு உரிய தண்டனை வழங்குதல், தனிச் சிங்கள அரசாங் கத்தை அமைத்தல் போன்ற மதில் தீர்வுகளை’ நம்பி மக்கள் வாக்களித்தனர். இவற்றில் செய்ய மாட்டோம் என்று சொன்னவைகள் தற்போது நடைபெறுகின்றன. செய்வோம் என்று கூறிய எதுவும் நடைபெறுவதில்லை.

சுதந்திரத்தின் பின்னர் 72 வருடங்களாக எமக்கு உரிய வகையில் வேலைசெய்யும் ஒருவர் கிடைக்க வில்லை. நாட்டை விற்றுத் தின்னும் 225 பாராளு மன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு துரத்த வேண் டும், பாராளுமன்றம் வெள்ளத்தில் மூழ்க வேண் டும், இதற்குப் பதிலாக பாராளுமன்றத்திற்கு பதில் கூறத் தேவையில்லாத வேலை செய்யக் கூடிய ஒருவரை நாம் நியமிக்க வேண்டும் என்ற கோஷம் அனைவருக்கும் கவர்ச்சியாக இருந்தது. இது எமது மதிலிலும் கவர்ச்சியாக எழுதப்பட்டிருந்தது.

இவற்றிற்கு மத்தியில் இலங்கையில்  கோவிட் பரவத் துவங்கியது. ஆரம்பத்தில் வைரஸ் பரவல் தீவிரத்தன்மை குறைவாக காணப்பட்டமையால் கட்டுப்படுத்துவதற்கு இலகுவாக இருந்தது. சீனா விற்கு அடுத்ததாக நாம் தான் சிறந்த முறையில் அதனைக் கட்டுப்படுத்தினோம் என ஜனாதிபதி கூறினார். அதற்கடுத்ததாக இரண்டாவது அலை பரவத் துவங்கியது. இது மக்களின் குறைபாடு காரணமாகப் பரவவில்லை, மாறாக ப்ரண்டிக்ஸ் என்ற நிறுனத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாகவே பரவியது. இதற்கு எதிராக எடுக் கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் வினவுவதற்கு சட்டமா அதிபருக்கு ஏற்பட்டது. 10 ஆம் திகதி வரை 41 பேர் இறந் துள்ளனர். ஒரே நாளில் மாத்திரம் 5 பேர் மரணித் துள்ளனர். நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவர் களின் எண்ணிக்கை 14,285. அனைத்து மாவட் டங்களிலும் நோய்த்தொற்றாளர்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளனர்.

இறுதியாக ஒரு கள்வனின் குடங்களை ஆற்றில் வீசுவதன் மூலம் தீர்வைப் பெறலாம் என்ற நிலைக்கு நாடு வந்துள்ளது. பிரச்சினை இவ்வளவு தீவிரத்தை அடைந்துள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு யுத்தமாக இருந்தால் இதனை எனக்கு இலகுவாக தீர்க்க முடியும். ஆனாலும் இது  சுகாதாரத்துடன் தொடர்பானது என்பதால் இது எனது கைகளில் இல்லை என 9 ஆம் திகதி யன்று ஜனாதிபதி கூறியிருந்தார். இது இதற்கு சில வாரங்களுக்கு முன்னர் அவர் கூறிய கருத் திற்கு தலைகீழானது.

மதில் என்பது சீனப் பெருஞ் சுவர் அல்ல. மதில் மூலம் பிரச்சினை மறைக்கப்படுகின்றதே தவிர தீர்க்கப்படுவதில்லை. பைடனை வெற்றி பெறச் செய்தமைக்காகவன்றி ட்ரம்பை தோல்வி யுறச் செய்தமைக்கே நாம் அமெரிக்க மக்களுக்கு நன்றிகூற வேண்டும்.