அலுவலக புகையிரதங்கள் நாளை ஓடும்

16

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடித்து நாளை தொடக்கம் அலுவலக ரயில்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படும் இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

40 அலுவலக புகையிரதங்கள் நாளை ஓடவுள்ளன. பிரதான பாதையில் கோட்டை முதல் பொல்கஹாவெல, ரம்புக்கன, கனேவத்த, கண்டி வரையான புகையிரதங்கள் மருதானை, தெமடகொட, களனிய, வனவாசல, என்டேரமுல்ல, வல்பொல, பட்டுவத்த, ஹொரபே, ராகம நிலையங்களில் நிறுத்தப்பட மாட்டாது.

சிலாபம் மற்றும் புத்தளம் வரையான புகையிரதங்கள் மருதானை, தெமட்டகொட, களனிய, வனவாசல, ஹொரபே, ராகம, பேரலந்த, கட்டுவ, நீர்கொழும்பு, குரண நிலையங்களில் தரிக்காது.

களனிவெளி புகையிரதங்கள் பேஸ்லைன் மற்றும் மருதானை நிலையங்களில் நிற்பாட்டப்பட மாட்டாது.