பாடசாலைகள் நாளை ஆரம்பம்: பயமின்றி பாடசாலைக்கு அனுப்புங்கள்

17

பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இது தொடர்பாக தெரிவிக்கையில், மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விசேட செயல்குழு மற்றும் சுகாதார அமைச்சின் ஆலோசனை கிடைக்கப்பெற்றிருப்பதாக செயலாளர் தெரிவித்தார்.