கொரோனாவால் இறப்பவர்களின் இறுதிச் சடங்கிற்கு 58,000 ரூபாய் அறவிடப்படுகின்றதா?

20

பா.உ. முஜிபுர் ரஹ்மான் கேள்வி

கோவிட் காரணமாக இறப்பவர் களின் இறுதிச் சடங்கிற்கு இறந்தவர் களின் குடும்பத்தாரிடம் 58,000 ரூபாய் பணம் அறவிடப்படுகின்றதா என பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ் மான் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் மரணித்தவர்களின் குடும்பத் தாருக்கு இறுதிச் சடங்கிற்கான பெட்டி யைத் தீர்மானிப்பதற்கான உரிமை இருக் கின்றது. எனவே அதற்காக அவர்களிடம் பணம் அறவிடப்படுகின்றது. இவ்வாறு பணம் செலுத்த முடியாதவர்களுக்கு  நாம் அனுசரணையாளர்கள் மூலம் அத னைப் பெற்றுக்கொடுப்பதற்கான நட வடிக்கைகளை எடுத்துள்ளோம் எனவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.