இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் தலைவராக ஈவா வணசுந்தர

15

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலை வராக ஈவா வணசுந்தரவை நியமிப்பதற்காக அவரது பெயர் பாராளுமன்ற சபைக்கு ஜனா திபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஈவா வணசுந்தர இதற்கு முன்னர் உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாகக் கடமையாற்றியவர் என்பதோடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மிக நெருக்கத்திற்குரியவர் என 2014 ஜுலை 6ம் திகதி ‘தேசய’ என்ற நாளேட்டுக்கு ஒருமுறை தனது செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் அவர் சட்டமா அதிபர் காரியாலயத்திலிருந்து மாலை வீட்டுக் குச் செல்லும்போது அவருக்கு அலரி மாளிக்கை வருமாறு அப்போதைய ஜனாதிபதி அழைத்ததாகவும்  அவர் அங்கு சென்றபோது அவரை வியப்புக் குள்ளாகும் வகையில் மிகவும் நெருங்கிய நட்புடன் உயர் நீதிமன்ற நீதி பதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளதை அறிவித்ததாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தனது சட்டக் கல்லூரியின் நெருங்கிய நண்பர் என்பதால் குறித்த பதவியைச் சந்தோசகமாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.