நான் ஜனாதிபதிக்காக நீதிமன்றத்தில் சுமார் 35 வழக்குகளில் வாதாடியுள்ளேன்

30

கடந்த அரசாங்கம் ஜனாதிபதிக் கெதிராக பல்வேறு போலியான வழக் குகளை தாக்கல் செய்திருந்தது. யாராவது ஏதா வது விடயம் ஒன்றுக்காக விசார ணைக்குச் சென்றால் அவர்களை விடு தலை செய்வதற்காக இதில் கோட்டா பய ராஜபக்ச அவர்கள் தொடர்புபடு கின்றார் என்று வாக்கு மூலம் தாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டது. இதற் கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன  என நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் தெரி விக்கும்போது, பிரதமர் மீதும் இவ்வா றான போலியான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வாறே நாமல் ராஜ பக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச போன்றவர்கள் மீதும் போலியான வழக் குகள் கடந்த அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டது. இவை தொடர்பான விபரங்களை நான் தனிப்பட்ட வகையி லும் தெரிந்து வைத்துள்ளேன். ஏனெ னில் இந்த வழக்குகளுக்காக நான் நீதி மன்றத்தில் வாதாடினேன்.

தற்போது வழக்குகளிலிருந்து குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் விரைவாக விடு தலை செய்யப்படுவதாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர். நீங்கள் போலியாக எந்த விதமான ஆதாரங்களுமின்றி வழக்குத் தொடுத்ததன் காரணமாகத்தான் தற்போது அவர்கள் விடுதலை செய்யப்படுகின்ற னர். இந்தத் தீர்ப்புக்களை வழங்கும் நீதி பதிகள் உங்கள் ஆட்சிக் காலத்தில் நிய மிக்கப்பட்டவர்கள்தான் என்றும் அமைச் சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.