பொறுப்பற்ற செய்திகளைப் பரப்பும் இணையத்தளங்கள் தடைசெய்யப்படும்

13

இணையத்தளங்கள் தடைசெய்வது தொடர்பாக இதுவரை எந்தவிதமான முடிவுகள் எடுக்கப்படாவிட்டாலும் சில இணையத்தளங்களைத் தடைசெய்வது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என சிறீலங்கா பொது ஜன பெரமுனவின் செயலாளர் பாராளு மன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பதிவுசெய்யப்படாத எந்தவிதமான பொறுப்புமற்ற வெளிநாட்டிலிருந்து இயங்கும் இணையத்தளங்கள் போலி யான செய்திகளைப் பரப்புவதாகவும் அவற்றினால் பலர் பாதிக்கப்படுவதா லும் இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங் கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த முடிவானது அரசாங்கத்திற்காக வன்றி போலியான செய்திகள் காரண மாக தனிநபர்கள் பாதிக்கப்படுவதைக் கருத்திற் கொண்டே இந்த முடிவு பெறப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.