ஒரு வருடத்திற்கு 7 கோடி மதுபான போத்தல்கள் சுற்றாடலுக்குச் சேர்க்கப்படுகின்றது

22

ஒரு வருடத்திற்கு 70 மில்லியன் (7 கோடி) மதுபான (கால்வாசி) போத்தல்கள் சுற்றாடலுக்கு வீசப்படுவதாக சுற் றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார். குறித்த அனைத்து போத்தல்களும் ஒரு நிறுவனத்தினால் தயாரிக்கப் படும் போத்தல்கள் எனவும் இவ்வாறான இன்னும் சில நிறுவனங்களும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த போத்தல்களை 6 மாதத்திற்குள் சுற்றாடலிலிருந்து மீளப் பெறுவதற்   கான நடவடிக்கைகளை எடுக்குமாறு குறித்த நிறுவனத்திற்குத் தெரிவித்திருப்ப தாகவும் அவ்வாறு அவர்கள் மேற்கொள்ளாவிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனவரி மாத்திலிருந்து 6 மாதத்திற்குள் இவ்வாறான போத்தல் களுக்கான மாற்றுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தமாறு குறிப்பிட்ட நிறுவனங் களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.