23

– பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன

காடழிப்பு மற்றும் சட்டவிரோத  மரம் வெட்டுதல் என்பவற்றைத் தடுப்பதற்காக இலங்கை வான்படையின் விமானங்களைப் பயன்படுத்தி கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத் துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர்  கமல் குணரத்ன தெரிவிப்பு.

சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப் படுவதைத் தடுப்பதற்கு அவை மேற் கொள்ளப்பட முன்னர் அதனை தெரிந்து கொள்வது முக்கியமாகும். எமது வளங் களை எமது எதிர்கால சந்ததியனருக்  காக நாம் பாதுகாக்க வேண்டும் என நாரஹேன்பிடியவில் அமைந்துள்ள உள் நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சல் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்தார். இவ்வாறான நடவடிக் கைகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி முப்படையினர் உட்பட பொலிஸாரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.