நிவர் புயலுக்குப் பிறகும் தமிழ்நாட்டுக்கு மழை வாய்ப்பு

50

நிவர் புயலை அடுத்து, தென் கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள் ளது என்றும் இதன் காரணமாக, அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை மு ழுவதும் பரவலாக மழை பெய் யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்ன மாறுதலை அடையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனரான பாலச்    சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இது தமிழக கடற்கரையை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நிவர் புயல் தற்போது வலுவிழந்து விட்டது என்றும் கரையை கடந்த அந்த புயல் தற்போது தெற்கு ஆந்திராவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது என்றும் கூறினார்.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை பகுதி யில் 23 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழை காலத்தில், தமிழகத்தின் வடமேற்கு மற்றும் தென் பகுதியில் மழை பொழிவு இயல்பாக இருந்ததாகவும், மத்திய தமிழகத்தில் மழை பொழிவு குறைவாக இருந்ததாக வும் அவர் தெரிவித்தார்.