பிfச் தரப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது

37

இலங்கையின் நீண்டகால கடன் மீளச் செலுத்துவதற்கான திறனை ஆய்வு செய்யும் பிfச் தரப்படுத்தலில் இலங்கையை CCC கட்டத்திற்கு தரமிறக்கியமையை ஏற்றுக்கொள்ள முடியாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் பதவியேற்று மத்திய கால பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியிருக்கும் இக்குறுகிய காலப் பகுதியில் குறித்த தரப்படுத்தல் வெளிவந்திருப்பது

கவலைக்குரிய விடயமாகும். தற்போது ஏற்பபட்டுள்ள பொருளாதார மலர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அரசாங் கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை குறித்த தரப்படுத்தலில் கண்டு கொள்ளப்படவில்லை எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நீண்டகால கடன்  மீளச் செலுத்துவதற்கான திறனை ஆய்வுசெய்யும் பிfச் தரப்படுத்தலில் இலங்கையை CCC கட்டத்திற்கு தர மிறக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட இந்த தரப்படுத்தலானது இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மீளச் செலுத்தும் திறன் சவாலுக்குட்பட்டுள்ளது என்பதையே சுட்டிக்காட்டு கின்றது. 2021 முதல் 2025 வரை அரசாங்கம் மீளச் செலுத்த வேண்டியுள்ள வெளி நாட்டுக் கடன்தொகை 23.2 பில்லியன் அமெரிக்கன் டொலர்களாகும்.