எமக்கு டொலர் அச்சிட முடியாது

28

மேலும் மீளச் செலுத்த முடியாத வெளிநாட்டுக் கடன் தொடர்பாக சர்வதேச ரீதியாக உதவி பெற்றுக்கொள்ளப் பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

உள்நாட்டில் பணப் பிரச்சினை என்றால் பணம் அச்சிட முடியும். அதன் காரணமாக பணவீக்கம் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டாலும் அதற்கு நாம் ஏதாவது வழிமுறையில் முகங்கொடுக்க லாம். ஆனால் எமக்கு டொலர் அச்சிட முடியாது.

அந்நியச் செலாவணியை நாம் உழைக்க வேண்டும். அதனை உழைப்பதற்கான பிரதான வழிதான் சுற்றுலாத் துறை அடுத்ததாக எமது ஆடைத் தொழிற்துறை ஏற்றமதி இவை காரணமாக அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளோம்.

எனவே கடந்த அரசாங்கங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்தொகையை மீளச் செலுத்துவதற்காக சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.