ஈரானின் சிரேஷ்ட அணு விஞ்ஞானி மோஸன் பக்ரஸாத் கொலை

24

ஈரானைச் சேர்ந்த சிரேஷ்ட அணு விஞ்ஞானி மோஸன் பக்ரஸாத் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகாமையில் தனது காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பின் தொடர்ந்து வந்த ஆயுததாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவட், தாக்குதலுக்குட்பட்ட அணு விஞ்ஞானியை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது இடைவழியில் மரணித்தார் எனத் தெரிவித்தார்.

2010-2012 காலப்பகுதியில் ஈரானைச் சேர்ந்த அணு விஞ்ஞானிகள் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.