2020ம் ஆண்டு வரி வருமானம் 207 பில்லியன்கள் குறைவு – வருமான வரித் திணைக்களம்

23

இவ்வருடத்தினுள் அறவிடப்பட வேண்டிய வரி வருமானம் 207 பில்லியன் ரூபாய்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வருமான வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எச்.எம்.டப்ளிவ்.ஸீ. பண்டார தெரிவித்தார்.

நிதி அமைச்சின் தீர்மானத்தின்படி இவ்வருடம் 613 பில்லியன் ரூபாய்கள் மொத்த வரி வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச் சலுகை நாட்டின் கொரோனா நிலை என்பன காரணமாக 406 பில்லியன் ரூபாய்களே அறவிடப்பட முடியுமாக இருந்தது.

அத்துடன் வருமானவரி செலுத்துவதற்கான கால எல்லை பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் சென்றவருடம் திட்டமிடப்பட்ட வருமானவரியில் 98வீதத்தினை திணைக்களம் பெற்றுக்கொண்டதாகவும் மேலும் தெரிவித்தார்.