கல்வியின் பண்புத் தரம்: கற்றல் கற்பித்தல் செயன்முறையில் மாணவர் சார்ந்த சிந்தனைகள்

37

மாணவர்களது கற்றல் பாங்குகளோடு (Learning Styles) தொடர்புபடுத்தி செய்யப்பட்ட ஆய்வுகள் மாணவர்கள் கற்பவற்றை தமது முன்னறிவுடனும் அனுபவங்களுடனும் இணைத்துக் கொள்ளவும் அவற்றை யதார்த்த வாழ்க்கையில் பிரயோகித்து உச்ச பயன் பெறவும் விரும்புகிறார்கள் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றன.

எனவே, ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளை தரமுள்ளதாக மாற்றுவதற்கு பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்வது சிறப்பானதாகும்.

 1. மாணவர்கள் கற்பவற்றை தமது முன்னறிவுடனும் அனுபவங்களுடனும் இணைத்துக் கொள்கின்றனர்.
 2. மாணவர்களது கற்றல் பாணிகள் வேறுபடுகின்றன. தேவைகளின் வேறுபாடுகளுக்கு ஏற்ப கற்றல் முறைகளை மாற்ற விரும்புகின்றனர். இதற்காக நவீன கற்பித்தல் முறைகளை விரும்புகின்றனர்.
 3. மாணவர்கள் பாடத்தில் தரப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வினாக்களுக்கு விடையளிக்கவும் தமக்கிடையே ஒத்துழைத்து கூட்டாகச் செயற்படவே விரும்புகின்றனர்.
 4. கற்பித்தல்-கற்றல் செயன்முறையில் கற்றலானது இரு வழித் தொடர்பாகவும் இடம்பெறுகின்றது.
 5. மாணவர்கள் கவர்ச்சிகரமாகக் கற்பதற்குத் தூண்டும் முறையில் அமைகின்ற கற்பித்தல் செயன்முறைகளையே விரும்புகின்றனர்.
 6. மாணவர்கள் தொடர்ச்சியான முன்னேற்றத்தையே விரும்புகின்றனர்.
 7. மாணவர்கள் தாம் கற்றவற்றை ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் முக்கியமானவை.
 8. தகவல்களைத் தொகுத்தல், பகுப்பாய்வு செய்தல், விமர்சித்தல், மதிப்பீடு செய்தல் போன்ற உயர் நிலைச் சிந்தனைகளுக்கு வாய்ப்பளித்தல்.
 9. மாணவர்கள் கோட்பாட்டு அறிவினை பிரயோக அறிவாக மாற்ற முனைகின்றனர்.

கற்பித்தல்-கற்றல் செயன்முறையைத் திட்டமிடுகையில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் நல்ல பண்புத் தரத்தை விருத்தி செய்யும் வகையில் பின்வருவனவற்றில் கவனம் செலுத்துதல் வரவேற்கத்தக்கது.

 1. அறிவுத் திறன், நல்ல மனப்பாங்குகளை மாணவரிடம் விருத்தி செய்தல்.
 2. சமூகம் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை விருத்தி செய்தல்
 3. கலாசாரம், தேசப்பற்று என்பவற்றை விருத்தி செய்தல்
 4. சமூகமயமாக்கலுக்கு உதவுதல்
 5. அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை விருத்தி செய்யும் வகையில் தனியாகவும் நிறுவன ரீதியாகவும் பங்காற்றுதல்
 6. வாழ்விற்கும் தொழிலுக்கும் வழிகாட்டி உதவுதல்
 7. புதிய தொழில்நுட்பங்களின் படி கற்பிக்கவும் புதிய தொழில்நுட்ப முறைகளுக்கு மாணவர்களை நெறிப்படுத்தவும் ஊக்கத்துடன் செயற்படுதல்
 8. மனித வள அபிவிருத்திற்கு வாழ்நாள் முழுவதும் பல வழிகளிலும் பங்களிப்புச் செய்த

மேற்குறித்த அம்சங்களின் அடிப்படையில் நோக்குகையில் கல்வியின் பண்புத் தரவிருத்தி கருதி இன்றைய கல்விச் செயற்பாடுகளின் நடைமுறைகளை மீளமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. கல்வியின் பண்புத் தரவிருத்திக்குத் தேவையான தேர்ச்சிகளை ஆசிரியர்கள் விருத்தி செய்யும் வகையில் ஆசியர் கல்விக்கான நிகழ்ச்சித் திட்டங்களும் தமது நிகழ்ச்சித் திட்டங்களுக்கான நோக்கங்களை மீள வடிவமைக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.