தீமை வென்றது : நீதி மரணித்தது: ஐ. நா.சபை உருக்குலைந்தது : உலகமே முடிவுக்கு வந்தது

59
  • லத்தீப் பாரூக்

இஸ்ரேல் என்ற யூத நாடு பலஸ்தீன மக்களின் பூர்வீக பூமியில் 1947ல் ஸ்தா பிக்கப்பட்டது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இன்று உலகில் இடம்பெற்று வரும் மோதல்கள், யுத் தங்கள், இரத்தக்களரிகள், ஸ்திரமற்ற நிலை, அமைதியின்மை என எல்லாவற் றுக்கும் மூல காரணமாக அமைந்துள்ளது இந்த நாடுதான்.

1930களின்; ஆரம்பம் முதல் உலகில் நிரந்தர எல்லைகள் அற்ற ஒரு நாடாக, படுகொலைகளைப் புரிந்து, அண்டை நாடுகளை ஆக்கிரமித்த, பலஸ்தீன பூமி யை அதிகம் அதிகமாக பறித்தெடுத்த, பலஸ்தீன மக்களை மிகக் கொடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கிய, காஸா பிரதேசத்தை கிட்டத்தட்ட திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றிய, சுவாசிப்ப தற்கான காற்றைத் தவிர மற்ற எல்லா வற்றையும் அந்த மக்களுக்குத் தடை செய்த இஸ்ரேல் இன்றும் அதன் குற்றச் செயல்களை தொடர்ந்து கொண்டே வருகின்றது.

இஸ்ரேலின் வரலாறை தேடிப் பார்க் கின்ற போது கடந்த நூற்றாண்டின் திருப்பத்தில் துருக்கிப் பேரரசின் கட்டுப் பாட்டில் பலஸ்தீனமாக இருந்தது தான் இன்று இஸ்ரேலாக மாறி உள்ளது என்பதை இலகுவாக அவதானிக்கலாம். 1896ல் 95 வீதமான மக்கள் இங்கு அரபி களாகவே காணப்பட்டனர். 90 வீதமான நிலங்களும் அவர்களிடம் தான் இருந்தது. அது மிகவும் அமைதியான சமாதான மான ஒரு பூமியாகவே இருந்தது. அங்கு மக்கள் சத்தம் போட்டு பேசக் கூட மாட்டார்கள். மோசமான வார்த்தைகள் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.

1897ம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தின் பெஸல் நகரில் இடம்பெற்ற முதலாவது உலக சியோனிஸ காங்கிரஸில் தான் பலஸ்தீன பூமியில் இஸ்ரேலை ஸ்தா பிக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக் கப்பட்டது. புத்தாண்டுகள் கழித்து 1907ல் லண்டன் காலனித்துவ மாநாட்டில் மத்திய கிழக்கை கொந்தளிப்பில் வைத்தி ருக்கக் கூடிய ஒரு ஆதிக்க சக்தியை உருவாக்க பிரிட்டன் தீர்மானித்தது.

இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் இடையில் உள்ள பொதுவான சதித் திட்டத்தின் கீழ் தான் யூத சக்திகளும் பிரிட்டனும் ஒன்றிணைந்தன. அவை இரண்டும் சேர்ந்து வகுத்த சதித் திட்டத் தின் விளைவாகத் தான் முதலாவது   உலக மகா யுத்தத்தின் போது துருக்கியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அதன் பிறகு ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி 1917ல் இந்தப் பகுதியில் ஆதிக்கத்தைக் கொண்டி ருந்த பிரிட்டன் யூத குடியேற்றத்துக்கு வழியமைத்தது. விஷேடமாக ரஷ்யாவில் உள்ள யூதர்கள் இங்குள்ள பலஸ்தீனப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டு குடி யேற்றப்பட்டனர்.

பிரிட்டிஷ் மற்றும் யூத சக்திகளின்      சதித் திட்டத்தை அறிந்திராத நிராயுத பாணிகளான பலஸ்தீன மக்கள் சதிகாரர் கள் எதிர்பார்த்தபடி இதை எதிர்க்க ஆரம் பித்தனர். அதன் முடிவு சட்டவிரோத மாகக் குடியேற வந்த யூதர்கள் தமக்கி டையில் ஹகானா, ஸ்டேர்ன், இர்குன்,         சவாய் லுயுமி போன்ற பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கிக் கொண்டனர். மெனாச்சம் பெகின், இட்ஷாக் ஷாமிர், ஏரியல் ஷரோன் அகியோர் இந்த பயங் கரவாத குழுக்களின் ஞானத் தந்தை களாகச் செயல்பட்டு இஸ்ரேலிய பயங் கரவாதத்தின் மூலவேர்களாகத் திகழ்ந்த னர். பலஸ்தீனக் கிராமங்கள் ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் இந்தக் குழுக் கள் வேட்டையாடின. மேலே குறிப்பிட்ட இந்த மூவரும் பிற்காலத்தில் இஸ்ரே லின் பிரதமர்களாகத் தெரிவு செய்யப் பட்டனர் என்பது தான் அந்த நாட்டின் கேவலமான இரத்தக்கறை படிந்த வரலா றாகும்.

பலஸ்தீன மக்களின் எதிர்ப்பை நிர் மூலமாக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட மெனாச்சம் பெகினின் குழுவினர் கொலைவெறியை கட்டவிழ்த்து விட்ட னர். நூற்றுக்கணக்கான பலஸ்தீன ஆண் களையும். பெண்களையும் சிறுவர்களை யும் அவர்கள் கொன்று குவித்தனர். ஜெரூஸலத்தில் இருந்து சற்று தொலை வில் உள்ள டேர்யாஸின் என்ற கிராமத் தில் மட்டும் 254 பேர் கொன்று குவிக் கப்பட்டனர். அன்றைய காலப் பகுதி யில் மனித இனத்துக்கு எதிரான மிக மோசமான படுகொலைகளாக இந்தச் சம்பவமே அமைந்திருந்தது. வியட்னா மில் இடம்பெற்ற வெட்கக் கேடான “வியட்நாமின் மைலாய் படுகொலை கள்” சம்பவத்தோடு ஒப்பிடும் வகையில் இது அமைந்திருந்தது.

ஏந்த விதமான உதவிகளும் அற்ற நிலையிலும் பலஸ்தீனர்களின் எதிர்ப்பு கள் வலுவடைந்தன. பிரிட்டிஷ் அதிகார பீடம் அதை இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது. இந்த எதிர்ப்பு எச்சரிக்கை மட்டத்தை அடைந்த போது பிரிட்டிஷ் ராஜ்ஜியம் அதன் அரபுக் கைக்கூலிகளான பழமைவாத இராணுவ சர்வாதிகாரி களைப் பயன்படுத்தியது.

1946 முதல் 2000 வரை பலஸ்தீன மக்கள் எவ்வாறு தமது தாயக பூமியை இழந்துள்ளனர் என்பதை இந்த வரை படம் சித்தரிக்கின்றது.

அரபு சர்வாதிகாரத்துடன் கூடிய பிரிட் டிஷ் அரசின் பின்புலத்துடனான யூத பயங்கரவாதத்துக்கு முகம் கொடுக்க முடி யாத பலஸ்தீன மக்கள் தமது உயிரைக் கையில் பிடித்தவாறு ஓட்டம் பிடித்தனர். அந்த ஓட்டம் அவர்களை அண்டை நாடு களின் அகதி முகாம்களுக்குள் முடக்கி யது. மிக மோசமான நிலைமைகளின்  கீழ் இந்த தஞ்சம் இன்னமும் நீடிக் கின்றது. அதன் பிறகு தேவையான அளவு யூதர்கள் உலகம் முழுவதிலும் இருந்து மேலதிகமாக இந்தப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டனர். அதன் பிறகு தான் பலஸ் தீனத்துக்குள் யூத நாட்டை ஸ்தாபிக்கும் திட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் முன் வைக்கப்பட்டது.

அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் கூட அதை பொருட்படுத்தாமல் ஜனாதிபதி ட்ரூமனால் அச்சுறுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை 1947 நவம்பர் 29ல் எங்கி ருந்தோ கொண்டு வரப்பட்ட யூதர்களுக் காக பலஸ்தீன மக்களின் தாயகத்தில் ஒரு தேசத்தை உருவாக்கும் விதமாக பலஸ் தீன பூமியை கூறு போடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர் ந்து பலஸ்தீன மக்களின் காணிகளை சூறையாடும் உரிமை யூதர்களுக்குக் கிடைத்தது. யூதர்களுக்காக உருவாக்கப் பட்ட தேசமாக இருந்தாலும் கூட அங்கு அரபு யூதர்களின் அதாவது அரபு மொழி பேசும் யூதர்களின் எண்ணிக்கையே அதிக மாகக் காணப்பட்டது. அன்றைய மொத்த யூத சனத்தொகையான 1,008,900 இல் 509,780 ஆகக் காணப்பட்டது.

சியோனிஸ படுகொலைகளின் நடு வே 1948 மே மாதம் 14ம் திகதி இஸ்   ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டு பிர கடனம் செய்யப்பட்டது. பலஸ்தீன மக்க ளின் தாயக பூமியில் இருந்து ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் மூலம் சியோ னிஸ யூதர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலப் பிரப்பிலும் பார்க்க பல மடங்கு அதிக மான நிரப்பரப்பு அப்போதே இணைத் துக் கொள்ளப்பட்டது. மனிதாபிமான மற்ற படைப்பிரிவு ஒன்றிற்கான ஆரம்ப மாக அது அமைந்தது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை முற்றிலும் மீறும் வகையில் அது அமைந் திருந்தது. பிரபஞ்ச ரீதியான மனித உரி மைப் பிரகடனத்தை அது முற்று முழு தாக மீறியது. இவ்வாறு சகல மரபு களையும் உரிமைகளையும் மீறி நிறை வேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இன்று தன்னை ஒரு இறைமை உள்ள நாடாக உரிமை பாராட்டுவது வேடிக்கையான தாகும். யூத நாடு பிரகடனம் செய்யப் பட்டு 15 நிமிடங்களில் வெள்ளை மாளிகையில் இருந்தும் கிரம்ளின் மாளி கையில் இருந்தும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இஸ்ரேலை உருவாக்கு வதில் அவை இரண்டும் தான் பின்ன ணியில் செயல்பட்டுள்ளன என்பதை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்தது.

அன்று முதல் மத்திய கிழக்கை அடுத் தடுத்த ஆக்கிரமிப்புக்கள் மற்றும் படு கொலைகள் மூலம் இஸ்ரேல் ஒரு கொலைகளமாக மாற்றியது. 1956ல் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பன வற்றின் ஒத்துழைப்போடு எகிப்தின் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1967ல் தென் லெபனான், காஸா, சினாய் ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்தது. அதன் தொடராக மேற்குக் கரை, கோலான் குன்று, கிழக்கு ஜெரூஸலம் என்பன வற்றையும் தனது நெருங்கிய நண்பர் களான அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றின் துணையோடு இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

அதன் பிறகு இஸ்ரேல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் யாவற்றையும் இஸ்ரேல் அப்பட்டமாக மீறி உள்ளது. அந்த வகையில் உலகிலேயே மிகவும் கண்டனத்துக்கு உள்ளான ஒரு நாடாக வும் அது திகழ்கின்றது. ஐக்கிய நாடுகள்  சபையால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவே இஸ்ரேல் யுத்தக் குற்றங்களைப் புரிந்த ஒரு நாடு என்ற முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இஸ்ரேல் மீது எந்தத் தடை களையும் ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்ததாக வரலாறே கிடையாது. ஈராக், லிபியா, ஈரான் போன்ற நாடுகள் விட யத்தில் இந்த நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டுள்ளது.

அமெரிக்காவினதும் ஐரோப்பாவின தும் பகிரங்க ஆதரவோடு இஸ்ரேல் தனது குற்றங்களைப் புரிந்து வருகின்றது. அமைதியற்ற நிலையை உலகில் நீடித்து வருகின்றது. மனித உரிமை, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றின் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள் ளும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் மத் திய கிழக்கு விடயத்தில் மட்டும் வெட் கக் கேடான விதத்தில் நடந்து கொள்கின் றனர். இவர்கள் தான் மத்திய கிழக்கின் இதயத்தில் குத்தி இஸ்ரேலை நிர்மா ணித்தவர்கள். இப்போது அதே இஸ்ரே லின் பாதுகாப்பு என்ற போர்வையில் அமெரிக்க ஜனாதிபதியும் குரல் கொடுத்து வருகின்றமை கேவலத்தின் உச்சமாகும்.

இதில் மிகவும் கேவலமான மற்றொரு விடயம் யாதெனில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்குள்ளும் அதன் முக்கியமான அமைப்புகளுக்குள்ளும் சட்ட விரோத மான இஸ்ரேலும் உள்வாங்கப்பட்டுள் ளமையாகும். ஆனால் இஸ்ரேலினால் பாதிக்கப்பட்ட தமது சுதந்திரத்தையும் உரிமைகளையும் இழந்துள்ள பலஸ்தீனம் இன்னமும் இந்த அமைப்புகளுக்குள் அனுமதிக்கப்படாமையாகும். அமெரிக் காவையும் ஐரோப்பாவையும் காட்டு மிராண்டிகளான இஸ்ரேலிய யூத சக்திகள் எந்தளவு தமது கட்டுப்பாட்டில் வைத்துள் ளன என்பதற்கு இது ஒன்றே போதுமான உதாரணமாகும்.

இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஐக் கிய நாடுகள் சபையில் 120க்கும் மேற் பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன. அந்த வகையில் உலகிலேயே மிகவும் கண்டனத்துககு உள்ளான ஒரு நாடாக அதுவே இன்று வரை காணப் படுகின்றது. அந்தப் பிராந்தியத்தில் மட் டுமன்றி உலகில் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளினதும் கலவரங்களினதும் மூல காரணமாகவும் இஸ்ரேலே திகழ்ந்து வருகின்றது. ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஐக்கிய நாடுகள்      சபை அமைதி காத்து வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் செல்லப் பிள்ளை யாக இஸ்ரேல் இன்றும் இருந்து வரு கின்றமைதான்.

பலஸ்தீன மக்களை திரும்பிப் பார்க் கக் கூட இன்று யாரும் இல்லை. அரபு    சர்வாதிகாரிகள் அந்த மக்களின் முதுகில் குத்தி துரோகம் இழைத்து விட்டனர். மேற்குலக ஊடகங்களோ இன்று அந்த மக்களைத் தான் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி உள்ளன.