இஸ்லாத்தின் பூமியில் நெடன்யாஹுவை வரவேற்று முஸ்லிம்களை அவமானத்துக்கு ஆளாக்கியுள்ளது சவூதி

75

லத்தீப் பாரூக்

2020 நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை தினம் தான் சட்டத்தை துச்சமென மதிக்கும் இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹுவை முஸ்லிம்களின் புனித இல்லங்களான மக்கா மற்றும் மதீனா என்பனவற்றின் காவலன் தனது மண்ணில் வரவேற்ற நாளாகும். பலஸ்தீன மக்களை கொடுமைக்குள்ளாக்கி அங்குள்ள பள்ளிகளை நிர்மூலமாக்கி வரும் ஒருவரை சவூதி அரேபியாவில் வர வேற்ற அன்றைய நாள் உலக முஸ்லிம் களின் வரலாற்றில் ஒரு வெற்கக் கேடான நாளாகப் பதியப்படும். உரிமைக் குரல் எழுப்ப வழியின்றி நிர்க்கதி நிலையில் உள்ள உலக முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்பட்ட தினமாக இந்தத் தினம் பதியப்படும்.

இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு தனது கரங்களில் பலஸ்தீன மக்களின் இரத்தக்கறை படிந்தவர். அவரை சவூதி இளவரசர் தாம் உருவாக்கி வரும் எதிர்கால செங்கடல் உல்லாசபுரி நகரில் வரவேற்று மூன்று மணிநேரம் சந்தித்துப் பேசி உள்ளார். இந்தச் சந்திப்புக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி தானும் அதில் பங்கேற்றுள்ளார் அமெரிக்காவில் இப்போது பதவி விலகிச் செல்லத் தயாராக உள்ள சுவிஷேச கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த வெளிவிவகார செயலாளர் மைக் பெம்பியோ.

இஸ்ரேலிய ஆதரவு மேலைத்தேச ஊடகங்களில்  இந்தச் சந்திப்புக்கு அமோக பிரசாரம் வழங்கப்பட்டுள் ளது. ஆனாலும் சவூதி இதை மறுத்துள் ளது. இது ஒரு பொய் என சவூதி கூறுகின்றது. ஆனால் இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட பெரும் பாவங்களில் ஒன்றாகக் கருதப் படும் பொய் உரைப் பது ஒன்றும் சவூதிக்கு புதிய விடயம் அல்ல. பொய் என்பது அந்த ஆட்சி யில் இரண்டறக் கலந்த ஒரு விடயம்.

ஆனால் உண்மையில் 1990 களில் இருந்தே இத்தகைய இஸ்ரேல் தலை வர்களுக்கும் அதன் உளவு பிரிவான மொஸாட்டின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான இரகசிய சந்திப்புக்கள்  சவூதி அரேபிய அரச மாளிகைகளில் இடம்பெற்று வருகின்றன. இந்த சந் திப்புக்கள் பற்றி விவரங்கள் வெளியே தெரிந்தால் அது மோசமான விளைவு களைக் கொண்டு வரும் என்ற அச்சம் காரணமாக சவூதி அரேபிய ஆளும் தரப்பு இந்த சந்திப்புக்களை மிக இரகசியமாகப் பேணி வருகின்றது. இதற்கு பிரதான காரணம் இஸ்ரேலை தமது வெறுப்புக்குரிய ஒரு விரோதி யாகவே சவூதி அரேபிய மக்களுள் பெரும்பாலானவர்களும் மதத் தலை வர்களும் கருதி வருகின்றனர்.

இதைவிட உலக முஸ்லிம்களிடம் இருந்து மிகவும் இரகசியமாக வைக் கப்பட்டுள்ள ஒரு விடயம் என்ன வென்றால் சவூதி மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டுமே பிரிட்டிஷ் ஏகாதி பத்திய வாதிகளால் உருவாக்கப்பட் டவை. பிரிட்டிஷ் நாணயத்தின் இரு பக்கங்கள் தான் இவ்விரு நாடுகளும் என்பதே முஸ்லிம்களிடம் இருந்து மறைக்கப்படடுள்ள யதார்த்தாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் மத்திய கிழக்கு பிராந்தியம் குழப்ப நிலையில் இருந்தது. பழங்குடி ஆட்சி யாளர்கள் புலர் அந்தப் பிராந்தியத்தின் பல பகுதிகளை தத்தமது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டிருந்தனர்.

1918ம் ஆண்டு காலப்பகுதியில் முதலாவது உலக மகா யுத்தத்தின் போது பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனித்துவ சக்திகள் மத்திய கிழக்கை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கு பலஸ்தீன தாயக பூமியில் யூத நாட்டை உருவாக்குவதற்காக சதித் திட்டத்தை மேற்கொண்டனர். தனது இந்த இலக்கை அடைந்து கொள்ள பிரிட்டன் அரபு ஆட்சியாளர்களின் தயவை நாடியது.

அப்துல் அஸீஸ் இப்னு அல் சவூத் அப்போது அரோபியாவின் மத்திய பகுதியான நஜதில் ஒரு சிறிய பழங் குடி கோத்திர ஆட்சியாளராக இருந்தார். அப்போது துருக்கிப் பேரரசின் ஆளுன ராக ஹிஜாஸ் மாநிலத்தில் இருந்த ஷரீப் ஹுஸேன் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் அரசு இப்னு சவூதைப் பயன்படுத்தியது. புனிதப் பிரதேசங் களான மக்கா மற்றும் மதீனா ஆகிய நகரங்களை உள்ளடக்கிய ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுனராக இருந்த ஷரீப் ஹுஸேன் இஸ்ரேலின் உருவாக்கத்தை தீவிரமாக எதிர்த்ததே அவர் மீது தாக்கு தல் நடத்த முக்கிய காரணமாயிற்று.

ஷரீப் ஹுஸேனை பதவியில் இருந்து தூக்கி எறிந்த பின்  1932ல் பிரிட்டிஷ் பேரரசு புதிதாக ஒன்றி ணைக்கப்பட்ட வஹ்ஹாபி ராஜ்ஜி யத்தை (சவூத் இல்லம்) சவூதி அரே பிய ராஜ்ஜியம் என்று மறு பெயர் இட்டது. இந்த சவூதி கோத்திர நிர்வா கத்தின் கீழ் இஸ்லாத்தின் இருபெரும் புனித ஸ்தலங்களான மக்காவும் மதீனாவும் கொண்டு வரப்பட்டன. இவ்வாறுதான் வஹ்ஹாபியர்கள் பிரிட்டிஷ் பேரரசு அரேபியாவில் சியோனிஸத்தை நிலைநிறுத்த துணை நின்றனர். அன்று முதல் சவூதி அரேபியா இஸ்லாத்தின் காவலனாக வும் அதன் புனிதத் தலங்களான மக்கா மதீனா என்பனவற்றின் காவலனாகவும் தன்னை வெளி உலகுக்கும் முஸ்லிம் உலகுக்கும் காட்டிக் கொண்டு சியோ னிஸ்ட்டுகளுடன் இரகசிய உறவு களைப் பேணி வருகின்றது.

யெமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலேஹ் படு கொலை செய்யப்பட இரு தினங்க ளுக்கு முன் ஒரு விடயத்தைக் குறிப் பிட்டிருந்தார். 1967 ஜுனில் இஸ்ரேல் அமெரிக்காவினதும் ஐரோப்பாவின தும் ஆதரவோடு தான் அரபு நாடுகள் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டது. இதற்கு காரணம் அன்றைய சவூதி அரேபிய மன்னர் பைஸால் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜோன்ஸனிடம் இந்த ஆக்கிரமிப்பை நடத்துமாறு விடுத்த வேண்டுகோளா கும் என்பதுதான் அவர் தெரிவித்த தகவல். இதன் மூலம் அரபிகள் மேற்குக் கரை, காஸா, ஜெரூஸலம், கோளான் குன்று ஆகிய பகுதிகளை இழந்தனர். அரபிகள் மீதும் முஸ்லிம் களின் தார்மிக விழுமியங்கள் மீதும் விழுந்த பேரிடியாகவே இது கருதப்படுகின்றது.

அன்று முதல் சவூதி ஆளும் வர்க் கம் இஸ்ரேலுடனும் அவர்களது பிரிட்டிஷ் அமெரிக்க எஜமானர்களோ டும் நகமும் சதையும் போல் ஒன்றி ணைந்துள்ளனர். அந்த வகையில் தான் முஸ்லிம் நாடுகள் மீது இந்த ஆதிக்க வெறி கொண்ட சக்திகளால் தொடுக் கப்பட்ட எல்லா யுத்தங்களிலும் பங்கேற்று அந்த நாடுகளை அழிப்பதி லும் இலட்சக்கணக்கான முஸ்லிம் களைக் கொன்று குவிப்பதிலும் தீவிரப் பங்கேற்று மத்திய கிழக்கை கொலை களமாக மாற்றி தமது இருப்பைத் தக்க வைத்து வருகின்றனர் சவூதி அரேபிய ஆட்சியாளர்கள்.

எட்டு வருடங்கள் நீடித்த ஈரான் ஈராக் யுத்தத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட தோடு இரு நாடுகளும் பாரிய அழிவு களைச் சந்தித்தன. குவைத்தில் இருந்து ஈராக்கிய படைகளை வெளியேற்ற நடத்தப்பட்ட படையெடுப்பு, அதன் பிறகு ஈராக் மீது கொடுக்கப்பட்ட யுத்தம், இதிலும் மில்லியன் கணக் கான மக்கள் அகதி முகாம்களுக்குள் தள்ளப்பட்டதோடு ஈராக் முழுமை யாக நாசமாக்கப்பட்டு மதிப்பிட முடியாத இழப்புக்களும் ஏற்படுத்தப் பட்டன. 1990ல் அல்ஜீரியாவில் ஏற்படுத்தப்பட விருந்த மக்கள் விருப்பத்து டன் கூடிய இஸ்லாமிய ஆட்சிக்கு  சாவு மணி அடித்து மதச்சார்பற்ற இரா ணுவ சர்வாதிகாரம் அங்கு ஸ்தாபிக்கப் பட்டது. இவை எல்லாவற்றிலுமே சவூதி அரேபியாவின் பங்களிப்புக்கான தடயங்கள் தெட்டத் தெளிவாகப் பதிவாகி உள்ளன.

சவூதி அரேபியா வற்புறுத்தியதன் விளைவாக அவர்கள் கொடுத்த இலஞ் சத்தைப் பெற்றுக் கொண்டு தான் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸர் அரபாத் 1993 செப்டம் பரில் ஒஸ்லோவில் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையில் ஒப்பமிட் டார். இந்த உடன்படிக்கை தான் படிப்படியாக பலஸ்தீன விடுதலை போராட்டத்துக்கு சாவு மணி அடித் தது. 2011ல் ஏற்பட்ட அரபு எழுச்சியின் போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன ஒன்றிணைந்து சிரியாவையும் லிபியாவையும் யுத்த களமாக மாற்றின. செழுமை மிக்க இந்த தேசங்களின் எண்ணெய், தங்கம் மற்றும் பணம் என்பனவற்றை தாங் கள் கொள்ளையடிப்பதற்காக அங்கே மக்கள் மத்தியில் பிளவுகளும் மோதல் களும் உருவாக்கப்பட்டன. இதுவரை லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இந்த மோதல்களில் பலியாகி உள்ளனர்.

எகிப்தில் அந்த நாட்டு மக்கள் 60 வருடங்களின் பின் முதற் தடவையாக சுதந்திரமான, நீதியான ஒரு தேர்தலின் மூலம் ஜனநாயக ரீதியான ஒரு தலை வரைத் தெரிந்து எடுத்தனர். அவர் தான் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் பிரதிநிதி மொஹமட் முர்ஷி. ஆனால் அவருடைய தெரிவின் பின் அந்த நாட்டு மக்களை தமது விருப்பம் போல் நிம்மதியாக வாழ விடாமல் சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பன இணைந்து செயற்கையான உணவுத் தடடுப்பாட்டையும் ஏனைய தட்டுப் பாடுகளையும் ஏற்படுத்தின. இதற் கென இந்த நாடுகள் இணைந்து 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செயற்கை யான தட்டுப்பாடு அங்கு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி கடைசியில் முர்ஷியும் ஆட்சியில் இருந்து கவிழ்த்தப்பட்டார். சதிகாரர்கள் ஏற்கனவே திட்டமிட்டு காத்திருந்த படி இராணுவ சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் சிசி ஆட்சியில் அமர்த்தப்பட்டார். இன்று இந்தப் பிராந்தியத்தில் யூத வடிவமைப்புக் களுக்கு இவர் தான் உயிர் கொடுத்து வருகின்றார்.

கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உலக முஸ்லிம்கள்   சவூதி ஆட்சியாளர்களின் உண்மை முகத்தை அடையாளம் கண்டுள்ளனர். இது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அற்றதாகவும் இஸ்லாத்தில் இருந்து வெகு தூரம் விலகி நிற்பதாக வுமே அமைந்துள்ளது.

தனது அமெரிக்க மற்றும் ஐரோப் பிய எஜமானர்களைத் திருப்திப்படுத் தும் வகையில் இஸ்ரேலுடன் நெருக்க மான உறவுகளை ஏற்படுத்துவதற்காக சவூதி அரேபியா பலஸ்தீனர்களுக்கு துரோகம் இழைத்து அவர்களைக் கைவிட்டுள்ளது. இந்தியாவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பிஜேபி உடன் சவூதி கைகோர்த்துள்ளது. சீனாவில் யூகர் இன முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி சவூதி இதுவரை வாய் திறக்கவே இல்லை. உலகம் முழுவதும் முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதற்கான ஆயுதக் கொள்வனவுக்கு 18 பில்லியன் டொலர் களை முதலீடு செய்துள்ள சவூதி பெயரளவுக்கு றோஹிங்யா முஸ்லிம் களுக்கு 30 பில்லியன் டொலர்களை மட்டும் கொடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் பூரண சம்ம தத்தோடு தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஜெரூஸலத்தை இஸ்ரேலுக்கு தாரைவார்த்து கொடுத்தார். பாகிஸ் தான், மலேஷியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி உலகில் புதிய இஸ்லாமிய அமைப்பு ஒன்று உருவாவதையும் சவூதி தனது பலத்தை கொண்டு நசுக்கி உள்ளது. யெமன் நாட்டின் மீது இளவரசர் சல்மான் அபுதாபியின் உதவியோடு மேற் கொண்டுள்ள விமானத் தாக்குதல்கள் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிக மான உயிர்களைப் பலி எடுத்துள்ளது. அதுமட்டும் அன்றி இந்தத் தாக்குதல் அரபுலகின் ஏழ்மை மிக்க இந்த நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளி விட்டுள்ளது. யெமன் முஸ்லிம்கள் உட்பட அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள உலக முஸ்லிம்கள் எல் லோருமே இன்று பாதாளத்துக்குள் தள்ளப்பட்ட நிலையில் தான் வாழ்ந்து வருகின்றனா.

இத்தகைய ஒரு மோசமான பின்ன ணியில் தான் தற்போது இஸ்ரேலிய பிரதரையும் தனது மண்ணில் வரவேற் றுள்ளது சவூதி அரேபியா. இந்தப் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் வாழும் முஸ்லிமகள் இதனால் ஆத்திரம் அடைந்துள்ளனர். சவூதி அரேபயா மக்களை விட்டு வெகுதூரம் விலகிச் செல்கின்றது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற ஒரு ஆபத்தான நிலைதான் அங்கு ஏற்பட்டுள்ளது என்று எனது எகிப்திய ஊடகவிலாளர் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார்.