அவதானத்திற்குட்படும் தலைமைகள்

197

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அரசியல் கட்சிகள், உலமா சபை, பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூக நிறுவனங்கள், தரீக்காக்கள், இயங்கங்கள் என பல்வேறுபட்ட அமைப்புக்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துக்கும் தலைமைகளும் சமூக ரீதியான பொறுப்புக்களும் காணப்படுகின்றன.

இவ்வாறான நிறுவனங்களின் தலைமைகளுக்குள்ள கடமைகளையும் பொறுப்புக்களையும் அவர்கள் உரிய முறையில் நிறைவேற்றிட வேண்டும். பொறுப்புகள் வகிப்பவர்கள் அவர்களின் பொறுப்புக்கள் தொடர்பாக மறுமையில் விசாரிக்கப்படுவர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

தலைமைப் பொறுப்புக்களில் உள்ளவர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்று வதற்கு தேவையான திறன்களை கொண்டிருத்தல் வேண்டும். எப்போதும் தலைமையில் உள்ளவர்களின் செயற்பாடுகள் அனைவரினதும் அவதானத்திற் குட்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு தலைவர் விடும்   சிறிய தவறு அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரையும் பாதித்துவிடும்.

அறிவு, நுணுக்கம், தூரநோக்கு என்பன ஒரு தலைமையிடம் காணப்பட வேண்டிய முக்கியமான திறன்களாகும். இவ்விடயங்கள் அவர்களது செயற் பாடுகளிலும் முடிவுகளிலும் தென்பட வேண்டும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதிதுவப் படுத்தும் சில தலைமைகளது அண்மைக்கால செயற் பாடுகளை அவதானிக்கும் போது சிறந்த தலைமை யிடம் காணப்பட வேண்டிய பண்புகளை கொண்டி ராமையின் விளைவாக ஏற்படுகின்ற விடயங்களாக நாம் கருதவேண்டியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ இடங்களுக்கு அறிவும் நுணுக்கமும் தூரநோக்கும் கொண்டவர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். தெரிவு செய்யப்பட்ட வர்கள் இப்பண்புகளை மேலும் வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். அவ்வாறில்லாத போது அடிக்கடி பல்வேறு நெருக்கடிகளில் சிக்குவதற்கான நிலைமைகள் ஏற்படு வது தவிர்க்க முடியாததாகிவிடும். இது அவர்களை மாத்திரமன்றி முழு சமூகத்தையும் பாதித்துவிடும். இவற்றை சிறிய தவறுகளாகக் கருதி மன்னித்து விட்டுச் செல்லமுடியாது.

தலைமைகளிடம் காணப்பட வேண்டிய இன்னு மொரு முக்கிய அம்சம் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு, உரிய முறையில் அவற்றுக்கு பதில் வழங்குவதாகும். ஒரு தவறு நடந்தால் அத்தவறை ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான செயற் பாடுகளை அவர்கள் மேற்கொள்ளல் வேண்டும்.

அவ்வாறில்லாமல் தவறுகளை ஏற்றுக் கொள்ளாது, அவற்றை வேறுபக்கம் திருப்பதும் போலிக் காரணங் களை கூறி தப்பித்துக்கொள்ள முனைவதும் தலைமைகளிடம் ஏற்கத்தக்க விடயங்களல்ல.

தலைமைத்துவ திறன் வாய்ந்தவர்களை பொறுப் புக்களுக்கு தெரிவு செய்யும் வரலாற்று யுக சந்தியில் முஸ்லிம் சமூகம்  நின்றுகொண்டிருக்கிறது.