சிறுபான்மைக் காப்பீட்டை அரசியலமைப்பில் உள்ளடக்குதல்

46

– சிராஜ் மஷ்ஹூர்

அரசியலமைப்பு (Constitution) என்பது,  அரசுக்கும் பிரஜைகளுக்கும் இடையிலான,  அத்தோடு பிரஜைகளுக் கும் பிரஜைகளுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் (Social Contract) ஆகும்.

இதனை ஒரு நாட்டின் அதியுயர் சட் டம் அல்லது தாய்ச் சட்டம் (Supreme Law) என்பர். எந்தவொரு சட்டமும் அர சியலமைப்புக்கு அமைவாகவே இருக்க வேண்டும், அதற்கு எதிராக இருக்கக் கூடாது என்பதே இதன் விளக்கமாகும். எதிரான சட்டங்கள் அரசியலைப்பு மீற லாகவே கருதப்படும்.

ஒரு நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை, அந்நாட்டின் அரசியலமைப்பே முறைப்படுத்தி ஒழுங்கமைக்கிறது.

1.அரசின் தன்மையை (Nature of the State) வரையறை செய்தல்

அரசாங்கத்தின் கட்டமைப்பை (Structure of the Government) விபரித்தல்

அரசின் அதிகாரங்களையும் கடமை களையும் விளக்குதல்

குடிமக்களின் உரிமைகளையும் கட மைகளையும் சுட்டிக்காட்டுதல்

போன்ற விடயங்கள் ஒரு அரசியல மைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

அரசாங்கம் பல அங்கங்களைக் கொண் டது. சட்டவாக்கத் துறை, நிறைவேற்   றுத் துறை, நீதித் துறை ஆகியனவே ஒரு அரசாங்கத்தின் பிரதான மூன்று அலகு களாகும். இவ்வலகுகளின் அதிகாரம் (Power), மட்டுப்பாடுகள் (Limitations) குறித்த தெளிவை சுட்டிக்காட்டும் ஆவண மாக அரசியலமைப்பே விளங்குகிறது.

அரசியல் தலைவர்களது அதிகாரத்தை, அரசியலமைப்பே மட்டுப்படுத்துகிறது. இதனால் அவர்கள் வரம்பு மீறுவது தடுக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தினதும் நிறைவேற்றுத் துறையினதும் தன்னிச்சையான நடவடிக் கைகள், அரசியலமைப்பு மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன.

சட்ட ஆட்சியை (Rule of law) மதித்து நடக்கவும், தனிநபர்களுக்கு உள்ள உரி மைகளைப் பேணிப் பாதுகாக்கவும் அரசியலமைப்பு பிரதான பங்களிக்கிறது.

நடைமுறைச் சிக்கல்கள்- விமர்சனங் கள் இருந்தபோதிலும், அரசியலமைப் பானது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுமாகும்.

பெரும்பாலான நாடுகளில் இது எழு தப்பட்ட ஆவணமாகவே உள்ளது. எனி னும், எழுதப்படாத மரபுகளையும் வழக் காறுகளையும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கும் நாடுகளும் உலகில் உள்ளன.

இலங்கையின் அரசியலமைப்பானது,  எழுதப்பட்ட அரசியலமைப்பு (Written Constitution) என்ற வகைக்குள் அடங் கும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆவணத்தையே புதிய அரசாங்கம் இப்போது உருவாக்கப் போவதாக அறி வித்துள்ளது.

புதிய அரசியலமைப்பிற்கான மக்கள் அபிப்பிராயங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்தகாலங்களிலும் இதுபற்றி எவ்வள வோ பேசப்பட்டுள்ளன; ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன; எண் ணற்ற ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இம்முறை 2/3 பெரும்பான்மை மூலம் புதிய அரசியலமைப்பொன்று உருவாக் கப்படுவதற்கான சாத்தியப்பாடு அதிகம் உள்ளதால்தான், இந்த விடயம் மிகுந்த முக்கியத்துவம் உடையதாக மாறியுள்ளது.

புதிய அரசியலமைப்பை வரைந்து முடிக்க குறைந்தபட்சம் 6 மாதங்களோ ஒரு வருடமோ எடுக்கலாம். ஆதலால் இது குறித்து தொடர்ந்து உரையாடுவதும் கருத்தாடுவதும் இன்றியமையாதது.

அத்துடன், இது ஒரு சமூக ஒப்பந்தம் என்ற வகையில், குடிமக்களாகிய நாம் நமது கரிசனையைக் கூட்டி இதற்குப் பங்களிப்பதும் மிக அவசியமாகும்.

ஆனால், இலங்கையின் அரசியலமை ப்பு உருவாக்கங்களின்போது மக்களது அபிலாசைகளை விட, ஆளும் வர்க்கங் களின் நலன்களே பெரிதும் முன்னி லைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அரசிய லமைப்பு வரலாற்றின் கசப்பான பக்கங் கள் இவை.

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாசைகள், சமூக- அரசியல் இருப்பு என்பன வரலாறு நெடுகிலும் முறையாக உள்வாங்கப்படவில்லை. ஒரு வகையான சிறுபான்மை விரோத மனப்பான்மையே இங்கு வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இனப் பிரச்சினைக்கான தீர்வு ஆலோசனை களை, அரசியலமைப்பு மாற்றங்களின் போது வேண்டுமென்றே கவனத்தில் கொள்கிறார்கள் இல்லை.

இது கசப்பான யதார்த்தம்தான். ஆயினும், அதற்காக நாம் நிராசையடைந்து முற்றாக ஒதுங்கத் தேவையில்லை. முடிந்த வரை ஆளும் தரப்பு மீதான அழுத்தங் களை அதிகரிக்கச் செய்வதனூடாக குறைந்தபட்ச உத்தரவாதங்களையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கான ஒரு எத்தனமே இதுவாகும். பெரும்பான்மைவாதத்தின் பிடியிலிருந்து விலகி, பல்லின- பன்மொழி -பல் கலாச்  சார இலங்கையைக் கட்டியெழுப்பவே நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அந்த வகையிலேயே, ’சிறுபான்மைக் காப்பீட்டை அரசியலமைப்பில் உள்ளடக் குதல்’ என்ற விடயம் மிகுந்த முக்கியத் துவம் பெறுகிறது.

(தொடரும்.)