பொருளாதாரம்: கயிற்றில் நடக்கும் மனிதனுக்கு ஒப்பான அரசாங்கம்

208

கலாநிதி டபிள்யூ.ஏ. விஜயவர்தன
(முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர்)

  • 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பகுப்பாய்வு செய்து விமர்சனம் செய்வதாயின், நீங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முன்வைக்கப்பட்ட அனைத்து வரவு செலவுத்திட்டங்க ளும் ஒரே வகையானவையாகவே உள்ளன. அவ்வரவு செலவுத் திட்டங்களில் விசேடமாக அரசாங்கத்தின் செலவுகள் அரசாங்கத்தின் வரவை விட அதிகம். துண்டும் விழும் தொகையை கடனாகப் பெற்று, அக்கடன் மூலமே அவை பூரணப்படுகின்றன. இந்த வரவு செலவுத் திட்டமும் அவ் வகையைச் சேர்ந்த ஒன்றாகும். தொற்றுநோய்க்கு நாடு உள்ளாகி, பொருளாதாரம் மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட் டுள்ள நிலையில் தான் இந்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான விடயங்களை இந்த வரவு செலவுத் திட்டத்திம் எதிர் பார்க்க முடியாது. அதற்கான காரண மாக அமைவது, தற்போது நோய் வாய்ப்பட்டுள்ள பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவது முதலில் எதிர்பார்க்கப்படுகின்ற விடயாகும். இந்த வகையில் பார்க் கும்போது, இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ள அனைத்து எதிர்பார்ப்புகளும், உடனடியாக பொருளாதாரத்தில் எழுச்சியை ஏற்படுவதற்கு முன்வைக்கப்பட் டுள்ள முன்மொழிவுகள் என்றே கூறலாம்.

  • இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் வருமானம் செலவுகளுக்கு இடையிலான வித்தியாசம் 1574 மில்லியன் ரூபாவாகும். இந்த வரவு செலவு இடைவெளியை பூர்த்தி செய்வதற்காகவும், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதா ரத்தை கட்டியெழுப்புவதற்காகவும் முன்வைக்கப்பட்டுள்ள மூலோ பாயங்கள் குறித்த உங்கள் பார்வை என்ன?

அரசாங்கத்தின் செலவுகளில் கடனை மீளச் செலுத்தும் தொகை மற்றும் கடனை மீளச்  செலுத்தும் போது ஏற்படும் செலவு என்பனவும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவேதான் 4500 பில்லியன் ரூபா வரையில் அரசாங்கத்தின் செலவுகள் அதிகரித்தி ருக்கின்றது. பொதுவாக வரவு செலவுத்திட்டத்தில் விசேடமாக அரசாங்கத்தின் கடனைச் மீளச் செலுத்தும் பணத்தை நீக்கிவிட்டு, தேறிய செலவு மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். அந்த வகையில் பார்க்கும்போது இரண்டு விடயங் களை எம்மால் அவதானிக்க முடியும்.

முதலாவது விடயம் என்ன வெனில், அரசாங்கத்தின் வருமானம் 2000 பில்லியன் ரூபா என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டுத் தொகை பொதுவாக தற்போதுள்ள வரி முறைமையின் கீழ் அரசாங்கம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. எனவே, சிலவேளை கடந்த வருடத்தின் வருமானமானது முத லில் எதிர்பார்ப்பதை விட மிகவும் குறைவாகவே இருந்தது. அதாவது, 1200 பில்லியன் ரூபா அளவிலேயே பெற்றுக்கொள்ள முடியுமாக இருந் தது.  இந்த நிலையின் கீழ் 2021 ஆம் ஆண்டில் 2000 பில்லியன் ரூபாவை பெறுவது மிகவும் கடுமையான சவா லாக மாறலாம். தற்போதுள்ள வரி முறையின் கீழ் இத்தொகையைப் பெற்றுக்கொள்வது கடினமாகும். இந்த வகையில் பார்க்கும்போது கடனைச் செலத்துவதற்காக மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். மீண்டும் கடனை வழங்கி, மேலதிகமாகவுள்ள எஞ்சிய தொகையை பூர்த்தி செய்வதற்காக மீண்டும் கடன் வாங்க வேண்டியேற் படும். அவ்வாறு செய்யும்போது, கடன் தொகையின் அளவு அதிகரிக் கும். எனவேதான், Fitch Rating Agency நிறுவனம் அண்மையில் இலங்கையை கடன் மீளச்செலுத்தும் தரத்தில் C மறை என்ற நிலையிலி ருந்து CCC என்ற நிலைக்கு தரத்தை குறைத்திருந்தது. அவ்வாறு மேற் கொள்வதற்கு காரணமாக அமைந்த ஒரு விடயம் என்னவெனில், அரசாங் கத்தின் கடன் தொகையின் அளவா னது தேசிய உற்பத்தின் சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 100 சதவீதமாக உயர்வதாக அவர்கள் அனுமானித்திருப்பதாகும். தொடர்ந்தும் வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையைப் பூர்த்தி செய்வதற்காக வும், கடனை மீளச் செலுத்துவதற் காகவும் கடன் பெறுவதனால், இந்த நிலை 100 சதவீதத்தையும் தாண்டிச் செல்வதற்கான வாய்ப்புள்ளது.

  • Standard Morgan போன்ற சர்வ தேச வங்கிகள், சர்வதேச ரீதியில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கஷ்டப்படும் நாடுகள் சிலவற்றைப் பெயரிட்டுள்ளன. அந்த நாடுகளில் முதல் இடத்தை ஈராக்கும், இரண் டாவது இடத்தை இலங்கையும், மூன்றாவது இடத்தை அங்கோலா வும் பிடித்துள்ளன. இவ்வாறான ஒரு பின்னணியில், அமெரிக்க டொலர் மூலம் வெளிநாட்டுக் கடன்களைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. இந்த வகையில், இலங்கை செலுத்த வேண்டியுள்ள வெளிநாட்டு கடன்களைச் செலுத்து வதற்கு சர்வதேச சந்தையிலிருந்து கடன் பெறுவதற்கு முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதா?

பொதுவாக இலங்கைக்கு இலகு கடன் கிடைத்த காலங்களைத் தவிர்த்து, அண்மையில் பெருமள வில் சந்தையிலிருந்து கடன் பெறுவ தற்கான வாய்பபு கிடைக்கவில்லை. குறிப்பாக Fitch Rating அடிப்படை யில் இலங்கை கீழ் மட்ட நிலைக்குத் தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் சந்தைக்குச் சென்று கடன் பெறும்போது பெருமளவிலான வட்டியைச் செலுத்தி, அதாவது தற்போதுள்ள 6 சதவீத வட்டிக்குப் பதிலாக 10 சதவீத அல்லது 11 சதவீத வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலைக்குச் செல்வதற்கு அரசாங்கம் இச்சந்தர்ப்பதில் விரும் பும் என்ற நான் நினைக்கவில்லை. அரசாங்கத்தின் பிரதான கொள்கை வகுப்பாளர்கள், நிதி அமைச்சர், திறைசேரிச் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி தொடர் பிலான இராஜாங்க அமைச்சர் முதலிய அனைவரும் போல் வெளி நாட்டு சந்தையிலிருந்து கடன் பெறுவதற்கு முயற்சிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் கடனை மீளச் செலுத்தும் விடயத்தில் பெரும் அன்னியச் செலாவணிப் பிரச்சினைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்படும். எனவேதான், கடனை மீளச் செலுத்த முடியாத நாடுகளின் பட்டியில் இலங்கையும் இடம்பெற் றுள்ளது. எதிர்வரும் 12 மாதங்களில் அரசாங்கமும், தனியார் துறையும் பெற்றுள்ள கடன்களை மீளச் செலுத் துவதற்கும், வட்டியைச் செலுத்து வதற்கும் எமக்கு 6.7 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின் றது. எனினும், எம்மிடம் 5.4 பில்லியன் பெறுமதியான டொலர் களே உள்ளது. எனவே, இந்த மீதித் தொகையை பூர்த்தி செய்வதற்கு கடன் பெற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அவ்வாறில்லாத போது, கடனை மீளச் செலுத்தாம லிருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த வகையில் அரசாங்கம் கடுமையான பிரச்சினைக்கு முகம் கொடுத்திருக்கின்றது. கயிற்றில் நடக்கும் மனிதனின் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கின்றது.

  • வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகை மற்றும் ஏனைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்காக அரசாங் கத்துக்கு புதிதாக பணம் அச்சிடும் முடிவை எடுக்கலாம். அரசாங்கம் அவ்வாறான ஒரு நடவடிக்கையை எடுத்தால், அது பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்?

இலங்கை போன்ற ஒரு நாட் டுக்கு, எந்நாளும் பணம் அச்சிட்டு இந்த நிலையிலிருந்து மீள முடியாது. ஏனெனில், எந்நாளுமே சிக்க வேண் டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அந்நிலைக்கு நாம் தற்போது வந்துள் ளோம். நாம் முதல் வருடத்தில் பத்து மாதங்களில் அரசாங்கத்துக்கு வங்கி களிலிருந்து 1800 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளோம். அதுவல்லாது அரசாங்கத்தின் கூட்டுத்தாபனங்க ளிலிருந்து 600 பில்லியன் ரூபா பெற்றுள்ளோம். இந்த வகையில் 2400 பில்லியன் ரூபா கடன் பெறப் பட்டுள்ளது. இதனைத் தான் பொது மக்கள் பரிபாசையில் பணம் அச்சிடல் என்று கூறுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்தும் பணம் அச்சிடும்போது பணவீக்கம் அதிகரித்து பொருட்க ளின் விலை உயரும். எமக்கும் தொடர்ந்தும் பணம் அச்சிடுவதன் மூலம் இந்தப் பிரச்சினையிலிருந்து மீளமுடியாது. இதுதான் நாடு எதிர் கொண்டிருருக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.

  • இந்த பொருளாதாரப் பிரச்சினை யிலிருந்து வெளிவருவதற்கு அரசாங்கம் எவ்வாறான கொள்கை களைப் பின்பற்ற வேண்டும்?

பதில்: கிணற்றில் விழுந்த மனி தனை கிணற்று வாயினால் தான் வெளியே எடுக்க வேண்டும். சுரங்கம் தோண்டி வெளியேறுவதற் கான வாய்ப்பு இல்லை. கிணற்று வாயினால் வெளியேறுதல் என்பதன் அர்த்தம் நாம் அனைவரும் பெரும் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதாகும். இத்தியாகத்தை உயர் மட்டத்திலிருக் கின்ற ஜனாதிபதி முதல் கீழ் மட்டத்திலிருக்கின்றவர் வரையில் அனைவரும் மேற்கொள்ள வேண் டும். குறிப்பாக வரவு செலவுத் திட்டத்திலுள்ள சீரியஸான விடயம் செலவுகள் அதிகரித்திருப்பதாகும். நுகர்வுச் செலவு அதிகரித்திருப்ப தாகும். எனவே, இந்த செலவுகளை குறைக்க வேண்டியிருக்கின்றது. வரவு செலவுத்திட்டத்திலுள்ள அதிகமான விடயங்களை மூலதனத்தை உருவாக்குவதற்கு ஒதுக்க வேண்டும்.

இவ்வாறான கொள்கைத் தொகுதி யொன்றின் ஊடாகப் பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணிப்பதற் குத் தேவையான சூழலை உருவாக்கு வதற்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். அப்போது இலங்கையால் இப் பிரச்சினை யிலிருந்து கரைசேர முடியும்.

  • 2021 ஆம் அண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இந்த இலக்கை அடைவதற்கு அரசாங் கத்துக்கு முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

2020 ஆம் அண்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான தரவுகள் மக்கள் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் எமக்கு இன்னும் வழங்கப்படவில்லை. 2020 ஆம் ஆண்டில் பொருளதாரம் 1.7 சதவீதத் தால் குறைவடையலாம் என்று மத்திய வங்கி கூறுகின்றது. எனினும் நிதி அமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் சந்தர்ப் பத்தில், இலங்கை 4.2 சதவீதத்தால் குறைவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது. எனினும் அவர் அதை ஏற்றுக்கொள் வதாகக் குறிப்பிடப்படவில்லை. பொருளாதாரம் 6.7 சதவீதம் குறை வடையும் என்று அண்மையில் ஒரு நிறுவனம் தெரிவித்திருந்தது. 2020 இல் இலங்கையின் பொருளாதாரம்  7 சதவீதத்தால் அல்லது 8 சதவீதத் தால் வீழ்ச்சியடையும் என்று பொரு ளாதாரம் குறித்த தெளிவுள்ளவர்கள் நம்புகின்றார்கள்.

அவ்வாறு வீழ்ச்சியடையும்போது, ஏற்கனவே 2019 இல் இருந்த பொரு ளாதாரத்திலிருந்து 92 வீதத்திற்கு வீழ்ச்சியடையும். அந்த வகையில் 92 இலிருந்து 5.5 சதவீத்தால் அதிகரித் தால் என்பதன் அர்த்தம் 97.5 க்கு நாம் செல்கின்றோம் என்பதாகும். 97.5 எனும் நிலை 2019 இல் நிலவிய நிலையை விட குறைவாகும். உண்மையில் வளர்ச்சி என்று கூறுவ தென்றால் 8 சதவீதத்ததை விட அதிகமான வளர்ச்சி 2020 இல் இருக்க வேண்டும்.

இந்தத் தரவுகள் குறித்து நாம் பார்க்கையில், 2020 இல் இலங்கைப் பொருளாதாரம் 8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது என்று வைத்துக் கொண்டால், அதன் அர்த்தம் 2019 இல் 100 ஆக இருந்தது என்பதாகும். 87 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது 92 வரையில் வீழ்ச்சியடைந் துள்ளது என்பது அதன் அர்த்த மாகும். வீழ்ச்சியடைதல் என்பதன் அர்த்தம் 76 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடைவதாகும். 76 இலிருந்து 5.5 சதவீதம் என்பதன் அர்த்தம் நாம் மீண்டுமொரு முறை 82 போன்ற ஒரு அளவுக்குச் செல்கின் றோம் என்பதாகும். இந்த வகையில் அத 2019 இனை விடக் குறைவாகும். நாம் பொருளாதார வளர்ச்சியை எதிர் பார்ப்பதாயின், 2020 இல் 8 சதவீதத் தையும் விட அதிகமான வளர்ச்சியை நாம் பெற வேண்டும். இந்த வீழ்ச்சி யான நிலையிலிருந்துதான் நாம் 2020 க்குச் செல்கின்றோம். எனினும் நாம் 2019 ஆம் ஆண்டின் நிலைக்கேனும் 2020 இல் செல்ல முடியாது.

இவ்வாறுதான் இத்தரவுகளை நாம் ஆராய வேண்டும். கடுமையாக முயற்சித்தால் 2021 இல் பொருளா தார வளர்ச்சியை 5.5 சதவீதத்துக்கு கொண்டு செல்வதற்கான இயலுமை நிலவுகின்றது. ஆனால் அது 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலையை விடக் குறைவானதாகும்.

நேர்காணல்: லோரன்ஸ் ஃபர்டினேன்டு
நன்றி: ராவய