அறிவுப் பொருளாதாரமும் சமூக அமைதியும்

61

சமகால அறிவுப் பொருளாதாரம் எனும் கல்விக் கொள்கைக்கு அனைத்து நாடுகளும் அளவுக்கதிகமான முக்கியத்துவத்தினை அளித்து வருகின்றன. கல்வி இறுதியில் பெரும் பொருளாதார அனுகூலங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதே அறிவுப் பொருளாதாரமாகும். அதாவது, அறிவை பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு கருவியாகக் கொள்ளல் வேண்டும். அனைத்து அறிவும் அதனையொட்டிய ஆராய்ச்சிகளும் பொருளாதார ரீதியில் பிரயோகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

நாடுகள், குறிப்பிட்ட அறிவிலும் ஆராய்ச்சித் துறைகளிலும் தனியுரிமை கோரவும் அறிவியல் உண்மைகளை மறைத்துப் பயனடையவும் பிற நாடுகள் அதனைப் பயன்படுத்தி விடாமல் தடுக்கவும் அறிவுப் பொருளாதாரக் கொள்கை இன்று மறைமுகமாகத் தூண்டுதலளித்து வருகின்றது. அறிவுப் பொருளாதாரத்தின் அடியாக அறிவு முகாமை (Knowledge Management) சிந்தனையும் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளது. அது அறிவை எவ்வாறு உற்பத்தி செய்வது, அதனை எவ்வாறு வணிகச் சரக்கு போன்று விநியோகம் செய்வது, அறிவை அதிகபட்கம் பொருளாதார ரீதியில் பயன்படுத்துவது என்ற சிந்தனைகளை மையப்படுத்தியுள்ளது.

ஆக, நவீன வலதுசாரி முதலாளித்துவத்திற்கு அறிவும் கல்வியும் ஒரு மூலதனம் மட்டுமே. நுகர்வுக்கான கச்சாப் பொருளைப் போன்று அறிவை உலகம் பார்க்கத் தொடங்கிவிட்டது. விளைவாக, பயங்கரமான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. சூழல் மாசுபடுத்தப்படுகின்றன. அரசுகள் அறிவைத் துஷ்பிரயோகம் செய்வது போன்று கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியிலும் தாம் பெறும் கல்வி மற்றும் அறிவு பற்றிய மனப்பாங்குகள் வேகமாக மாற்றமடைந்து வருகின்றன.

படிப்பது ஒரு தொழிலைப் பெறுவதற்கே. அதன் மூலம் தொழிற் சந்தையில் ஆகக் கூடிய ஊதியத்தைப் பெற்றுத் தரக்கூடிய தொழிலொன்றைப் பெற வேண்டும். அதன் மூலம் பெரிய பங்களா, சொகுசான வாகனம், எப்போதைக்குமான உல்லாசம் இப்படி வாழ்க்கை வசதிகளை வளப்படுத்த வேண்டும். தனக்கான ஒரு சமூக அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தூண்டுதலே மாணவர்களை -குறிப்பாக பரீட்சை மையக் கல்விக்கான உந்துகோல்களாக உள்ளன.

அதனால்தான் இன்று பல்கலைக்கழகங்களில் கற்போர் தமது கற்கைநெறியை முடித்த கையோடு நேராக லண்டன் அல்லது டொரன்டோ செல்லலாமா என யோசிக்கின்றார்களே ஒழிய தான் பெற்ற கல்வியைக் கொண்டு தனது சமூகத்திற்கு ஏதேனும் நன்மைகள் பயக்க முடியுமா என சிந்திக்கிறார்கள் இல்லை.

அடுத்தவனுக்காக வாழவும் பிழையான வழிகளில் தனது சமூக அந்தஸ்தை உயர்த்தவுமே பாடுபடுகின்றனர். சமூகத்தின் கட்டுக்கோப்பைப் பாதுகாக்கின்ற சக மனிதர்களை மதித்து வாழ்கின்ற விழுமியக் கல்வி இன்று படிப்படியாக இல்லாமல் போகின்றமைக்கு அறிவுப் பொருளாதாரம் (Knowledge Economy) எனும் இச்சிந்தனை காரணமாகின்றது.

விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகளில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ள சீனர்கள், உலகிலுள்ள அனைத்து உயிரினங்களையும் உண்கிறார்கள். அதைத் தாண்டி இறந்த மனித மாமிசங்களையும் புசிக்கின்றனர். குழந்தைகளை சமைத்து ஹோட்டல்களில் நாகரிகமாக உண்ணும் பழக்கம் சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில் உள்ளதாக கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது.

சீன அரசாங்கம் இன்று உய்குர் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து வரும் மனித நேயத்திற்கு எதிரான அத்துமீறல்கள் அவர்களது கல்விக்கும் சமூக வாழ்க்கைக்கும் இடையே உள்ள பாரிய இடைவெளியை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் நகர்ப் புறங்களிலுள்ள முன்னணிப் பாடசாலைகளில் கற்றவர்களே நாட்டின் முன்னணி இனவாதிகளாக செயல்படுகின்றனர். இனத் தேசியவாதத்தை வலுவூட்டி வளர்ப்பதில் இன்று வரை இந்நாட்டின் சில பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட பின்நிற்கவில்லை.

ஆக, அறிவுப் பொருளாதாரம், அதனையொட்டிய சடவாதம் இவற்றுக்கு வழங்கப்பட்ட எல்லையற்ற முக்கியத்துவம் இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான பூசல்களையும் முரண்பாடுகளையும் தூண்டி வளர்ப்பதற்கே காரணமாகியுள்ளது. இதனால் மத, கலாசார, விழுமியக் கல்வியிலும் ஒரு நாடு கவனம் குவிக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்துள்ளது.

விழுமியங்கள் இல்லாத தேசம் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாதது.