PCR மோசடி தொடர்பாக சுகாதாரப் பிரிவில் விசாரணை

605

சுகாதார அமைச்சின் மேலதிகாரிகள், வைத்தியர்கள் சர்வதேச நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கஇகீ மோசடி மற்றும் இரகசியமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருவதாக ‘அருண’ பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை 40 பேரிடம் இது தொடர்பான வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுள் மருத்துவ வழங்கல் பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் உட்பட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளடங்கியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ளக் கூடிய PCR கருவிகள் இருக்கையில் நான்காயிரம் ரூபாய்கள் பெறுமதியான PCR கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக உளவுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த வார இறுதிவரை சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை சுமார் 12 இலட்சங்கள் ஆகும். இதற்காக வேண்டி சுமார் 720 கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டுள்ளது.