ஜனவரி 01 முதல் 1000 ரூபாய் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

27

– பா.உ. வடிவேல் சுரேஸ்

எப்போதும் இனவாத்திற்கோ தீவிரவாதத் திற்கோ ஆதரவளிக்காத இலங்கைத் தேயிலையின் பெயரை காப்பாற்றுவதற்கு சிரமப்படுகின்ற தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

நீண்டகாலமாக இலங்கையில் வாழ்ந்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வர முடியாது தமக்குத் தெரியும் என்றும் என்றா லும் அவர்கள் சிங்கள மக்களுடன் சிநேக பூர்வமாக நடந்துகொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாய்களாக அதிகரிக்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஜனவரி 1ம் திகதி முதல் நாளாந்த சம்பளமாக ரூபாய் 1000 வழங்கப்படும் என அர சாங்கம் தெரிவித்திருந்தது. எனவே அரசாங்கம் தமது வாக்குறுதியை காப்பாற்றும் என தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.