நாம் மாறுவதற்கு தயாராக உள்ளோமா?

45

– ஹனான் ஹுஸைன்

நாம் பெரும் கஷ்டங்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்த நிலையில் 2021 ஆம் புத்தாண்டுக்குள் நுழைகிறோம். எமது வாழ்க்கையின் தனிப் பண்புகள் மாற்றம் பெற்றுள்ளன.  நாம் ‘புதிய இயல்பு நிலை’ வாழ்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். உண்மையில் நாம் சூழ்நிலைக் கைதிகளாக வாழ்கிறோம்.

பிறரால் வடிவமைக்கப்பட்டு சொல்லப்படு வதை நாங்கள் நம்ப வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அதன் மூலம் நமது சிந்தனையும் நடத்தையும்  பிழையாக வழிநடாத்தப்படுவதை அவர்கள் எதிர்பார்க்கி றார்கள். இது  ஊடகத்தையும் மற்றும் உளவியலையும் தந்திரமாகப் பயன்படுத்தி நடாத்தப்படும் ஒரு யுத்தமாகும். எமது புத்திசாதுரிய மான நகர்வுகளால் மட்டுமே இந்த சவால்களை மிகைக்க முடியும்.

பல தசாப்தங்களாகப் பழகி வந்த எமது பழைய வாழ்க்கை முறையை வைத்துக் கொண்டு இந்த நெருக்கடி நிலையை எம்மால் வெல்ல முடியாது. முதலில் நாம் அந்த பழைய கூண்டுக் குள்ளிருந்து வெளியே வர வேண்டும்.

வெளிச் சூழலை உற்று நோக்கும் போது, அவர்கள் ஒரு பொதுக் கருத்தை உருவாக்க பிழையான தகவல்கள், போலியான செய்திகளைப் பயன்படுத்துகிறார்கள்.  இதன் வளர்ச்சிக்கு அறிவுப் பொருளாதாரம் மற்றும் சொந்த நலன்கள் பெரும் பங்களிப்புச் செலுத்துகிறது. இதனால் மற்றவர்களை அவஸ்தைப்படுத்துவதே அவர்களின் இலக்காக உள்ளது.

யார் கையில் தகவல் தொழில்நுட்பமும் ஊடகமும் இருக்கிறதோ அவர்கள், மீதியுள்ள பெரும்பான்மையைக் சூட்சுமமாகக் கையாள்கிறார்கள். தங்கள் இஷ்டம் போல ஆட வைக்கிறார் கள். தந்திர யோசனைகள், தவறான தகவல்கள் மற்றும் ஊடகங்கள் யாவும் புதிய மோதல்களின் உத்திகளாகக் காணப்படுகின்றன.

இப்போது சிந்தியுங்கள்! நாம் எங்கே செல்கிறோம்? நாம் முன்னோக்கி நகர வேண்டிய பாதை எது? முதலாவதாக எம்மிடம் மனப்பாங்கு மற் றும் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அடுத்து கல்வி மற்றும் திறன் விருத்தி செயற்பாடுகளில் நாம் உயர்ந்த நிலையைப் பெற முயற்சிக்க  வேண்டும். இவைதான் நவீன பொரு ளாதாரத்தின் அடிப்படைத் தூண்கள்.

அரசியல் போக்குகள் பொருளாதார திருப்பங் களுடன் இணைந்தே பயணிக்கும். நாம் எமது சமூகத்தின் தோற்றத்தை மாற்றியமைத்து புதிய ஆடை கட்ட வேண்டும். எமது சமூகம் பாரம் பரிய தந்திரோபாயங்கள் மற்றும் அடையாளங்களிலிருந்து விடுபட்டு கற்ற, தொழில்முறை மற்றும் உயர்நிலை அந்தஸ்துக்கு மாற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும்  நிலை பேறான வாழ்க்கை என்பதுவே எமது அவாவாக இருக்க வேண்டும்.

தலைமைத்துவத்தை விமர்சிக்கவோ அதற்காக போட்டியிடவோ எந்தத் தேவையும் கிடையாது.  எல்லாம் காலத்தால் மங்கி, மறைந்து அதற் கேற்ப இயல்பாக மாறும்.  இது கடந்த காலம் தந்த பாடங்கள். நாங்கள் எங்கள் வாழ் வொழுங்கை மாற்றவில்லை என்றால், புதிய இயல்பு நிலையானது நம்மை மாற்றும்படி கட்டாயப்படுத்தும். சிறந்ததொரு எதிர்காலம் உதயமாகும் என்ற நம்பிக்கையுடன்

-இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்-2021.