எனக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன- ஜனாதிபதி

334

அசிங்கமான அரசியலில் ஈடுபட வேண்டாம் என எதிரணியைக் கோரியுள்ள ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷ, அண்மையில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளித்திருக்கிறார்.

ஆம். நான்தான் நந்தசேன கோட்டாபாய. அது நல்லதொரு நாமம். எனக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஜனாபதி கோட்டாபாய என்றில்லாமல் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவாக செயற்பட வேண்டும் என சிலர் எதிர்பார்க்கின்றனர். நான் சற்று கடினமாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அவ்விரு கதாபாத்திரங்களையும் இணைத்துக் கொள்ள நான் தயாராகவிருக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.