முஸ்லிம் ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுவதை IBHARI கண்டித்துள்ளது

66

முஸ்லிம் ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுவதானது  இஸ்லாமிய பாரம்பரிய நல்லடக்க முறைமையை மீறும் செயலாகும் என சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் (The International Bar Association’s Human Rights Institute – IBAHRI) கண்டித்துள்ளது.

இஸ்லாத்தில், தகனம் செய்வது ஒரு பாவமாக வும் மனித உடல் மீதான இழிவுபடுத்துலாகவும் பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்கள்  கோவிட் -19 காரண மாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை அரசு கடந்த மார்ச்  முதல் முஸ்லிம் இறந்தவர்களும் தகனம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. BBC அறிக்கையின் படி அரசாங்கத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுகத் சமரவீர நிலத்தடி நீர் மாசடை யாமல் இருப்பதற்கு தகனம் அவசியமாகும் எனக் கூறியுள்ளார்.

IBAHRI இணைத் தலைவரும், ஸ்வீடிஷ் பார் அசோசியேஷனின் முன்னாள்  பொதுச் செயலா ளருமான Anne Ramberg Dr jur hc கருத்துத் தெரிவிக்கையில்: ‘கோவிட் -19 இனால் பாதிக் கப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்கான உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் எந்த   வொரு பொது சுகாதார அபாயத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதால், பலவந்த தகனம் செய்வதற்கான இலங்கை அர சாங்கத்தின் கொள்கை மனித உரிமை களுக்கான உலகளாவிய பிரகடனம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரி மைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) – உறுப்புரை 9 மற்றும் 18 ஆகியவற்றுக்கு முரணானதாகும். இந்த உறுப்புரைகாளனது ஒரு நபரின் மத சுதந்திரத்திற்கான உரிமையையும், வழக்காறுகள், நடைமுறையில் தங்கள் மதத்தை வெளிப்படுத்தும் உரிமையை யும் உறுதிப்படுத்துகிறது.

எனவே, இலங்கையின் முஸ்லிம் களுக்கு அவர்களின் மத நம்பிக்கை களுக்கு ஏற்ப இறந்தவர்களை அடக்கம் செய்ய மத சுதந்திரம் மறுக்கப்படுவ தானது,  ICCPR மாநாட்டின் ஒரு தரப் பினரான இலங்கை சர்வதேச சட்டத்தை மீறும் ஒருநேரடி செயலாகும்.’

திருமதி ராம்பெர்க் மேலும் கூறிய தாவது:  உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, “இறந்தவர் களின் கௌரவம், அவர்களின் கலாச்சார மற்றும் மத வழக்காறுகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும்.” எனவே, ஒரு குடும்ப உறுப்பினரின் மர ணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த தனிநபர்களின் உரிமையாகும்.  எந்தவொரு விஞ்ஞான அடிப்படை யுமின்றி அமல்படுத்தப்படும் பலவந்த தகனக் கொள்கையை மாற்றிக்கொள்ளு மாறும், மத சுதந்திரத்திற்கான தனிநப ரின் உரிமையை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.’