இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
கோவிட் 19 வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க இந்தியா தயாரிக்கும் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்க தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்தார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்த இந்திய அமைச்சர் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில்
ஜனாதிபதி அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது இடம் பெற்ற கலந்துரையாடலில், கோவிட் 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர் கால நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் சிகிச்சையின் அவசியத்தை சரியாக மதிப்பிட்ட பின்னர், இந்தியாவில் தயாரிக் கப்படும் கோவிட் தடுப்பூசியைப் பெற இலங்கை விருப்பத்துடன் உள்ளதாக கூறினார்.
தடுப்பூசியை பிற நாடுகளுக்கு ஏற்று மதி செய்யும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதாக கலாநிதி ஜெய் சங்கர் உறுதியளித்தார். பரஸ்பர நன்மைகளை அதிகரிக்க இந்திய-இலங்கை இரு தரப்பு உறவை பரஸ்பர நன்மையை பெறும் வகையில் மேம்படுத்த ஜனாதி பதி அவர்களும் இந்திய அமைச்சரும் இணக்கம் தெரிவித்தனர்.