சட்டத்தை அமுல்படுத்துவதேயன்றி அரசியல் பழிவாங்கல் இல்லை:

79

அதிகாரம் இருந்தபோதும் கிராமத்திற்குச் செல்லாத அரசியல் நடைமுறையை மாற்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இருந்துபோது தான் அடையாளம் கண்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி கிராமங்களுக்கு பேண்தகு அபிவிருத்தியை கொண்டுவருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தவறு செய்தவர்களைத் தண்டிப்பது சட்டத்தின் கடமையாகும். அதில் தலையிட்டு முந்தைய அரசாங்கம் செய்ததைப் போல அரசியல் பழிவாங்க தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

மக்களை தவறாக வழிநடத்தாமல் நியாயமான அரசியலில் ஈடுபடுமாறு ஜனாதிபதி அவர்கள் எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

மகா சங்கத்தினர் உட்பட மக்கள்  தான் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளரின் வகி பாகத்தை எதிர்பார்க்கின்றனர். பித்தளை சந்தியில், எல்.டீ.டீ.ஈ பயங்கரவாதிகள் தன்னை இலக்குவைத்து தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தினர். அதைச் செய்த பயங்கரவாதத் தலைவருக்கு நேர்ந்த கதியை மக்கள் அறிவார்கள். நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அல்லது கோட்டாபய ராஜபக்ஷ என்ற எந்த ஆளுமைக்கு ஏற்பவும் செயற்பட தயார் என்ற போதும், எதிர்க்கட்சி போன்று மோசமான அரசியலுக்கு தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (09) காலை அம்பாறை, உஹ னவில் உள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற ‘கிராமத்துடன் உரை யாடல்‘ நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரி வித்தார். ஜனாதிபதி அவர்கள் பங்கேற்ற ஐந்தாவது ‘கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சி இதுவாகும்.

முதலாவது நிகழ்வு 2020 செப்டம்பர் 25 ஆம் திகதி பதுளை ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவில் உள்ள வேலன் விட கிராமத்தில் ஆரம்பமானது.

இரண்டாவது நிகழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பிரதேச செய லக பிரிவில் உள்ள ஹிம்பிலியாகடவி லும் மூன்றாவது பலங்கொடை இம் புல்பே, ராவணாகந்தவிலும் நான்காவது கெபிதிகொல்லேவ கனுகஹவெவ கிராமங்களிலும் நடைபெற்றன.