வெளிநாட்டிலிருந்து திரும்பும் ஊழியர்களை அதிக செலவில் தனிமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

81

– விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச

கடந்த காலங்களில் தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களில் அறவிடப்பட்ட கட்டணத் தொகைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட  வேண்டும் என விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

மேலும் அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பும் ஊழியர்களை அதிக செல வில் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவரது சமூக வளைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாட்டிலிருந்து வரும் ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தல் இலவச மாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவற்றிற்கு எந்தவிதமான கட்டணமும் அறவிடப்படக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.