நீதியான நாட்டினை கட்டியெழுப்புவதற்கான எமது பங்களிப்பு

220

அண்மையில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் வெளியிட்ட  இரண்டு கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை அதில் முதலாவது,

முத்துராஜவளை பாதுகாக்கப்பட்ட சேற்று நிலப் பகுதியில் 700 ஏக்கர் பிரதேசத்தில்  தனியார் நிறுவனமொன்று பாரிய சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டு வருவதாகவும் 1996ம் ஆண்டின் ஒக்டோபர் 31ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்த மானியின்படி இப்பிரதேசமானது பாதுகாக்கப்பட்ட பிரதேசமாகும் எனவும் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

சேற்று நிலப் பகுதியானது இவ்வாறு மண் நிரப்பப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டால் கம்பஹா மாவட்டத்தின் மழைநீர் வடிந்து கடலுக்கு செல்லும் இயற்கை வடிகான் அமைப்பு பாதிக்கப்படும் எனவும் அதன் காரணமாக வெள்ள அபாயம் ஏற்படும்  எனவே அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கக் கூடாது அதனை நாம் மேற்கொள்வதற்கு விடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அவரது இரண்டாவது அறிக்கை:

தற்போது வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிக பணம் செலுத்தி நாடு திரும்ப  வேண்டிய பிரச்சினையுடன் தொடர்பானது. இதற்கு அரசாங்கம் கடினமாக தீர்வை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இவ்வாறு இலங்கை நாடு எதிர்கொண்டுள்ள பொது வான பிரச்சினைகளின்போது எமது அரசியல் தலைவர் களோ எமது மதத் தலைமைகளோ  தமது கருத்துக்களை வெளியிடுவதனை நாம் காண்பதில்லை.  நாம் கடந்த காலங்களில் எமது சமூகத்தின் உரிமைகளுக்காக மாத்திரம் போராடுபவர்களாகவே காணப்பட்டோம். நாட்டின் பொதுவான பிரச்சினைகளில் நாம் அமைதியாகவே இருந்து வந்துள்ளோம்.

பலவந்த ஜனாஸா தகனம் காரணமாக முஸ்லிம்களின் உரிமை மீறப்படுவதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் தமிழ் அரசியல் வாதிகள் மதகுருமார்கள் என பல்வேறு தரப்பினரும் உள்ளனர்.

நாட்டில் சிறுபான்மையினருக்கு நீதி மறுக்கப்டும் சந்தர்ப்பத்தில் அதற்காக இவர்கள் குரல் கொடுக்கின்றனர். உண்மையில் இவர்கள் ஒரு சமூகக் குழுவின் உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராகவே இவ்வாறு குரலெழுப்பு கின்றனர்.

நாம் ஒரு சமூகமாக அல்லது எம்மை பிரதிநிதித்துப் படுத்தும் அரசியல் சமூகத் தலைமைகள் நாட்டில் இவ்வாறு யாருக்காவது நீதி மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் குரலெ ழுப்புவதை கண்டுள்ளோமா? இல்லை. நாம் எப்போதும் எமது சமூகத்தின் உரிமைகளுக்காக மாத்திரமே போராடி யுள்ளோம். நாட்டின் பொதுவான பிரச்சினைகளின்போது நாம் அமைதியாகவே இருந்து வந்துள்ளோம்.

இவ்வாறான எமது அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். ஒரு நீதியான நாட்டினை கட்டியெழுப்புவதற் கான முயற்சியில் நாமும் உழைக்க வேண்டும். சட்டம் நீதி பேணப்படும் நாடொன்றில் எவருக்கும் அநீதி இழைக்கப் படமாட்டாது. கடந்த காலங்களில் நாம் சட்டம் நீதியாக அமுல்படுத்தப்படும் நாடொன்றினை கட்டியெழுப்பு வதற்காக குரலெழுப்பியிருந்தால் தற்போது நாம் எதிர் கொண்டுள்ள பிரச்சினைக்கு நீதியின் பாதுகாப்பாவது கிடைத்திருக்கும்.