நடைபெற வேண்டியது என்ன?

  63
  • விக்டர் ஐவன்

  தற்போது இலங்கையானது அரசு, அதன் சமூக அரசியல் முறைமை, பொருளாதாரம் என்பன முழுமையான வீழ்ச்சியின் கட்டத்திலேயே உள்ளது. மக்களின் தற்போதைய அன்றாட வாழ்க்கை கடினமானது என்றாலும் அது பொறுத்துக்கொள்ளக் கூடிய அளவி லேயே உள்ளது. இந்நிலைமையானது  விரை வாக மோசமான கட்டத்தை அடைவதனைத் தடுக்க முடியாது. இதற்குச் சமாந்தரமாக சமூகத்தின் நடைபெற  வேண்டிய விடயம் என்ன?

  தற்போது இலங்கை அரசின், சமூக-அரசி யல் மற்றும் பொருளாதாரம் என்பன வீழ்ச்சி யின் கட்டத்திலேயே உள்ளது. மக்களின் தற்போதைய அன்றாட வாழ்க்கை கடினமா னது என்றாலும் அது பொறுத்துக் கொள்ளக் கூடிய அளவிலேயே உள்ளது.  ஆயினும்கூட, இந்த நிலைமை விரைவில் மோசமாக மாறும் என்பது தவிர்க்க முடியாததாகும். இதற்குச் சமாந்தரமாக சமூகமும் தனது புத்திசாதுரிய மாக செயல்படும் திறனையும் இழக்கும்.

  இந்த சிக்கலான நெருக்கடிக்கு முன்னால், கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கம் எந்த விதமான நடைமுறை பார்வையுமற்று  பாது காப்புப் படைகள் மற்றும்  அமானுஷ்ய சக்தி களின் ஆதரவை நாட வேண்டிய இக்கட்  டான நிலையிலேயே உள்ளது. கோதபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு செலவு செய்த பணக்காரர்கள், தங்கள் செலவுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் சொத்துக்களை அதிகபட்சமாக கொள்ளையடிக்கும் கொள்கையை பின்பற்று கிறார்கள் என்பதும் தெளிவான விடயமாகும்.

  தலைமையின் நெருக்கடி

  ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவிற்கு ஒப் படைக்கப்பட்டது சிறந்த நிலையில் இருந்த ஆட்சி செய்வதற்கு எளிதானது நாடொன் றல்ல. மாறாக, ஒரு சிறந்த அனுபவம் வாய் ந்த திறமையான ஆட்சியாளர் ஒருவரால் கூட நிர்வகிக்க முடியாத வீழ்ச்சிக் கட்டத்தில் இருந்த நாடாகும். கோதபய ராஜபக்ஷ அவர் களை பிரச்சாரத்தினால் செயற்கையாக மிகைப்படுத்தப்பட்ட  ஒரு  தலைவராகவே கருத வேண்டியுள்ளது. இதன் காரணமாக  சாதாரண மக்கள் அவர் மீது இமாலய நம் பிக்கையை ஏற்படுத்திக்கொண்டனர்.

  அவரை மிகைப்படுத்திக் காட்டியமை அவரது வெற்றியை அதிகரிப்பதற்கான தாக் கத்தை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் வெற்றியின் பின்னர் அவரது நற் பெயரைக் குறைப்பதற்கும்  அது பங்களிப்புச் செய்துள்ளது. கோதபய ராஜபக்ஷ அவர்கள் இராணுவ சேவையில் இருந்தபோது அசாதா ரண  திறமைகளை வெளிப்படுத்திய ஒரு  சிறந்த அதிகாரியாக இருந்திருக்கலாம். பாது காப்பு செயலாளராக செயற்பட்டபோது சர்ச் சைக்குரிய விடயங்கள் இருந்தபோதிலும், இறுதிக்கட்டப் போரை  ஒருங்கிணைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

  ஆனால் நாட்டின் தலைமைக்கு அவர் வருவது திடீரென்று, எந்த அரசியல் அனுப வமுமற்ற நிலையிலாகும். 19 வது திருத்தத் தால் அரசியலமைப்பில் செய்யப்பட்ட மாற் றங்கள் குறித்து அவர் சரியாக அறிந்திருக்க வில்லை. நாடு எதிர்கொண்டிருந்த நெருக்கடி நிலைமை தொடர்பாக அவர் ஆழமாக அறிந் திருக்கவில்லை. அவர் அதிகாரத்திற்கு வந்த நாளிலிருந்து,  ஆட்சியாளர்களை பரீட்சிக்கும் கட்டுப்பாட்டு முறைகளை அகற்றுவதற்கான பணிகளையே அவர் மேற்கொண்டார். கட்டுப் பாடற்ற அதிகாரத்தைப் பயன்படுத்துபவர் கள் அதனை மோசமாகப் பயன்படுத்துவார் கள் என ஐவர் ஜென்னிங்ஸ் கூறியுள்ளார்.

  இராணுவமயமாக்கல்

  ஜனாதிபதி தனது அறியாமையின் நெருக் கடியை சமாளிக்க சிவில் நிர்வாகத்தை விட இராணுவ நிர்வாகத்திற்கு அதிக சந்தர்ப் பத்தை கொடுக்கும் கொள்கையை பின்பற்று வதன் மூலம்  எதிர்கொள்ள முயற்சிக்கிறார். நிச்சயமாக இது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு ஒரு தீர்வு அல்ல என்பதேடு இது பாதுகாப்புப் படையினரின்  மரியாதைக் கும் சிறந்ததல்ல.  ஒரு நாட்டிற்கு பாதுகாப் புப் படைகள்  சிவில் நிர்வாகத்திற்கன்றி, நாட்டை பாதுகாப்பதற்கே அவர்கள் தேவை. இராணுவ சேவையில் இணைபவர்களுக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கொள்கை கள் மற்றும் தொழில்நுட்பங்களே கற்பிக் கப்படுகின்றன. சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் அவர்களுக்கு கற்பிக்கப் படுவதில்லை.

  இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெ ரிக்கா  மற்றும் ரஷ்யா  இடையே பனிப்போர் இடம்பெற்ற காலகட்டத்தில், அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் இராணுவ ஆட்சியைப் பேணிய ஏராளமான நாடுகள் உலகில் இருந்தன.  ஆப்பிரிக்காவில் 37 நாடுகளிலும், லத்தீன் அமெரிக்காவில் 22 நாடுகளிலும் இராணுவ அரசாங்கங்கள் இருந் தன. ஆபிரிக்காவில் தற்போது இராணுவ அர சாங்கம் உள்ள ஒரே நாடு சூடான், அதுவும் கூட மக்களின் எழுச்சி  உள்நாட்டு மோதல்கள் காரணமாக சிவில் ஆட்சி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றப்பட்டதன் காரணமாக ஏற்படுத்தப்பட்ட  ஒப்பந்தத்தின் அடிப்படை யிலேயே அமைந்துள்ளது. ஆசியாவின் கடைசி இராணுவ அரசாங்கம் தாய்லாந்தில் இருந்தது, அதுவும் ஜூலை 16, 2019 அன்று முடிவடைந்தது.

  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஒரு காலாவதியான கோட்பாட்டை பரிசோதித்து வருகிறார், இது உலகில் ஏராளமான நாடு களால் முயற்சிக்கப்பட்டு தோல்வியுற்ற ஒரு கோட்பாடாகும். இந்தப் பரீட்சையால் நாடு மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மாத்திர மன்றி நாட்டின் ஆட்சியாளருக்கும் ஏற்படக் கூடிய சேதம் பெரியதாகும். பாதுகாப்புப் படையினர் இந்த வலையில் விழுவதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பது முக்கிய மான விடயமாகும்.

  எதிர்க்கட்சிகளின் முட்டாள்தனமான செயற்பாடு.

  இலங்கையின் தற்போதைய இந்த வீழ்ச்சி நிலைக்கு ஆளும் கட்சி மட்டுமன்றி எதிர்க் கட்சிகளும் சமமாக பொறுப்புக்கூற வேண் டும். நாட்டின் தோல்விக்கு ராஜபக்சாக்கள் மாத்திரமன்றி நாட்டின் ஆட்சியில்  நேரடியா கவோ அல்லது மறைமுகமாகவோ பங்காற் றிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத் தப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும்  பொறுப்புக்கூற  வேண்டும்.

  இன, சாதி, மத வேறுபாடுகளை அடிப் படையாகக் கொண்ட குறுங்குழுவாத பிளவு களால் நாட்டில் ஏற்பட்ட இரத்தம் சிந்தும் மோதல்கள் நாட்டின் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பாராளுமன்றத் தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த பிளவுகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ பங்களித்திருக்கின்றன. நாட் டில் அனைத்து நிறுவன அமைப்பையும் மூழ் கடித்துள்ள பரவலான ஊழல் இந்த நிலை மைக்கான அடுத்த வலுவான காரணமாகும், மூன்றாவது காரணமாக அவ்வப்போது தேர்ந் தெடுக்கப்பட்ட நாட்டின் ஜனாதிபதிகளுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் பொது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட் டதைக் கருதலாம்.

  ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த முறைமை யில் காணப்படுகின்ற வீழ்ச்சிக்கான மூல கார ணங்களை சரிசெய்யவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் ஆட்சியைக் கைப்பற்று வதன் மூலம் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும் என நினைக்கின்றார்கள். அவர்களது இந்தப் பிழையான செயலினால் பொதுமக்கள்  தவறாக வழிநடத்தப்படுவதனை அனுமதிக் கக்கூடாது.

  என்ன செய்ய முடியும்?

  இத்தகைய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை யில் பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு  கூட்டு முயற்சியொன்று நாட்டிற்குத் தேவை. ஒரு வலுவான சமூகக் கலந்துரையாடல் மூலம் தான் அத்தகைய நடவடிக்கையை வழிநடாத்த முடியும். அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை தமது சுயநல  அணுகுமுறையுட னேயே பார்க்கின்றனர். ஆயினும்கூட, அதிர் ஷ்டவசமாக, இந்த நெருக்கடியை பரந்ததாக வும், கூர்மையானதாகவும் பார்க்கக்கூடிய உணரக்கூடிய சிலர் நாட்டில் உள்ளனர். குறைந்தபட்சம், அவர்களில் சிலர் ஒன்று கூடி, தங்கள் கருத்தை ஒரே குரலால் வெளிப் படுத்த முடியும் என்றால், நிச்சயமாக, நாட் டின் அரசியல் பாதையின் திசையில் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.

  நாடு முழுமையான பிரச்சினையொன்றி னுள் தள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அதனை விரும்பத்தக்க மாற்றத்திற்கு தள்ளுவது எளிதானதாகும். தென்னாப்பிரிக்காவின் வெள்ளை ஆட்சியாளர்கள் அவர்கள் முழுமை யான பிரச்சினை ஒன்றிற்கு தள்ளப்பட்டதன் காரணமாகவே மிக நீண்ட காலமாக அவர் களால் கடைப்பிடிக்கப்பட்ட கொடூரமான கொடுங்கோண்மை ஆட்சியை கைவிடத் தயா ராக இருந்தனர். இதன் விளைவாக, பங்கேற்பு அரசியல் யாப்பு ஒன்றை ஏற்றுக்கொள்வதற் காக அல்லது தென்னாப்பிரிக்காவிற்கான மக் கள் அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான கதவுகள் திறக்கப்பட்டன. இந்த செயல் முறையின் மூலமே ஒற்றுமையான தேசமொன்றினைக் கட்டியெழுப்ப அவர்களால் முடிந்தது.

  இச் சந்தர்ப்பத்தில் இலங்கைக்கும் அவ் வாறான மாற்றும் திட்டம் ஒன்றே தேவைப் படுகின்றது. இலங்கையும் மக்கள் பங்கேற்பு அரசியல் யாப்பு எனப்படும்  மக்கள் அரசியல் யாப்பு ஒன்றினை ஏற்படுத்துவதை நோக்கி தள்ளப்பட வேண்டும். பங்கேற்பு அல்லது மக்கள் அரசியலமைப்பு மாதிரி என்பது 21 ஆம் நூற்றாண்டின் அரசியலமைப்பு மாதிரி யாக கருதப்படுகிறது. ஆயினும்கூட, ஆச்ச ரியப்படும் விதமாக, ரணில் விக்ரமசிங்க உட்பட நம் நாட்டின் தலைவர்களுக்கு இந்த அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி எதுவும் தெரியாது. அரசியல் தலைவர்கள் மட்டு மல்ல, அரசியல் விஞ்ஞானத்தை கற்பிக்கும் இலங்கையில் உள்ள பெரும்பாலான பேராசி ரியர்களுக்கும் இந்த அரசியலமைப்பு உரு வாக்கம் பற்றி தெரியாது.

  பங்கேற்பு அல்லது மக்கள் அரசியலமை ப்பு மாதிரி ஒன்றின்மூலம் மேற்கொள்ளப் படுவது அரசியல் யாப்பை உருவாக்குவது மாத்திரமன்றி  நாட்டில் ஆராயப்பட வேண்டிய அனைத்து விடயங்களையும் விசாரணை செய்யும் உரிமையுடன் தேவையான சீர்திருத் தங்களைச் செய்வதற்கான உரிமையும் அதி காரமும் இதற்கு உண்டு. இந்த அரசியல மைப்பை உருவாக்கும் இந்த மாதிரிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனத்தின் மூலம்  அதி காரத்தைப் பெறுகின்றது.  அதே நேரத்தில் சர்வதேச சட்டத்தின் கீழ் இது 21 ஆம் நூற்றாண்டின் அரசியலமைப்பு உருவாக்கும் மாதிரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  எமது நாட்டிற்கான புதிய அரசியல மைப்பை உருவாக்குவதில் இலங்கை இந்த மாதிரியைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்வது முக்கியம். அத்தகைய ஒரு திட்டத்தின் மூலம், நாட்டின் வீழ்ச்சி நிலையையும் நிறுவன அமைப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியையும் கடந்து  நவீன தேசமொன்றைக் கட்டியெழுப்ப முடியும். இத்தகைய சீர்திருத்தங்களை மேற் கொண்ட பின்னரே இலங்கை இன்னுமொரு தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.