ஆரம்பக் கல்வியின் அடைவு மட்டத்தை அதிகரிக்க அதிபரின் போதனா தலைமைத்துவம்

225

எஸ். நஸீரா நஜாத்

(Bsc, SLPS, LLB, Attorney At Law) பிரதி அதிபர்

தி/கிண்/முஸ்லிம் மகளிர் கல்லூரி, கிண்ணியா

உலகில் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களின் புதிய போக்கிற்கு ஏற்ப பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்கள் மாற்றத்திற்கு உட்பட்டு வருகின்றன. முகாமைத்துவம், திட்டமிடல், ஆளனி அபிவிருத்தி, கல்வித்தரம், தர உறுதிப்பாடு, கணிப்பீடு போன்ற எண்ணக் கருக்கள் பாடசாலையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றன.

ஒரு பாடசாலையின் சகல  செயன்முறை களையும் நன்கு திட்டமிட்டு அமுல்படுத்தி உயர் அடைவை பெறக்கூடிய ஒரு கற்கும் சமுதாயத்தை கட்டியெழுப்புகின்ற அர்ப் பணிப்புடன் கூடிய தலைமைத்துவம் பாட  சாலைகளுக்கு அவசியமாகின்றது. பாடசா லைகளில் தலைமைத்துவத்தை ஏற்கின்ற அதிபர்கள் பாடசாலையின் முதல் நிலை முகாமையாளராகக் கருதப்படுகிறார். பாட   சாலைகளில் பல்வேறு வேலைத்திட்டங் களை வெற்றிகரமாக ஆரம்பித்து, தொடர்ச்சி யாக நடைமுறைப்படுத்துவதற்குப் பிரதான காரணி அதிபரின் அர்ப்பணிப்புடன் கூடிய தலைமைத்துவமாகும். நிர்வாக தலைமைத் துவத்தை விட பரந்த நோக்குடன் செயற் படும் கற்பித்தல் தலைமைத்துவம் பாடசாலை கல்வித் தரத்திற்கு அவசியமானதாகும்.

இலங்கையில் ஆரம்பக் கல்வியைப் பொறுத்தவரை ஐந்து வயதைப் பூர்த்தி செய்த பிள்ளைகள் தரம் ஒன்றிற்கு உள்வாங் கப்படுவதன் மூலம் பாடசாலைகளில் இணைக்கப்படுகின்றனர். தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புகளைக் கொண்ட ஆரம்பப் பிரிவானது 3  முதன்மை நிலை களை கொண்டுள்ளது. முதன்மை நிலை 1 தரம் 1, 2 ஆகிய வகுப்புகளையும் முதன்மை நிலை 2 தரம் 3, 4 ஆகிய வகுப்புகளையும் முதன்மை நிலை 3 தரம் 5 ஐ மாத்திரம் உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு நிலைகளி லும் முறையே 48, 50, 52 அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் காணப்படுகின்றன.

முதன்மை நிலை ஒன்று தரம் ஒன்றில் 31 தேர்ச்சிகளும் அதாவது முதலாம், இரண் டாம், மூன்றாம் தவணைகளில் முறையே 3, 18, 10 தேர்ச்சிகள் என்ற அடிப்படையிலும் தரம் 2 இல் 17 தேர்ச்சிகள் முதலாம், இரண் டாம் >மற்றும் மூன்றாம் தவணைகளில் முறையே 11, 5, 1 என்ற அடிப்படையிலும் முதன்மை நிலை 2 தரம் மூன்றில் 33 தேர்ச்சிகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் தவ ணையில் முறையே 12,13 மற்றும் 8 என்ற அடிப்படையிலும் தரம் நான்கில் 17 தேர்ச்சிகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் தவ ணைகளில் முறையே 5, 11, 1 என்ற அடிப் படையிலும் முதன்மை நிலை 3 தரம் 5 இல் 52 தேர்ச்சிகள் முதலாம், இரண்டாம், மூன் றாம் தவணைகளில் முறையே 17, 20, 15 என்ற அடிப்படையிலும் அத்தியாவசிய கற் றல் தேர்ச்சிகள் அடையப்படல் வேண்டும்.

மேலும் ஒவ்வொரு மாணவரும் குறிப் பிட்ட தேர்ச்சி மட்டத்தை அடைந்துள்ளார் என்பதைக் கணிப்பீட்டின் மூலம் அறிந்து கொள்வது ஒவ்வொரு வகுப்பாசிரியர்களின தும் பொறுப்பாகும். கணிப்பின் போது எதிர் பார்த்த கற்றல் பேறை அடைந்த மாணவர் கள் நிலைநிறுத்தல் செயற்பாட்டிற்கும்  அடையாத மாணவர்கள் பரிகார செயற்பாடு களிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

இங்கு பாண்டித்தியம் மட்டத்தை அடைந் துள்ள மாணவருக்கு சிவப்புநிற சரி அடையா ளத்தையும் பாண்டித்திய மட்டத்தை அன்மித் துள்ளவர்களுக்கு பச்சை நிற புள்ளியையும் பாண்டித்தியம் மட்டத்தை அடையாத மாண வர்களுக்கு நீல நிறப் புள்ளியும் இடப்படும்.

உதாரணமாக முதன்மை நிலை 1  (தரம் 1)-  தேர்ச்சி 11

வினாக்கள் வினவி தகவல்களை அறிந்து கொள்வார் என்ற தேர்ச்சியை எடுத்துக் கொள்வோமாயின்

பாண்டித்திய மட்டத்தை அடைந்துள்ளார்.     (சிவப்பு)

பாண்டித்திய மட்டத்தை அண்மித்துள்ளார்.       (பச்சை)

பாண்டித்திய மட்டத்தை அடையவில்லை.              (நீலம்)

என குறித்துக் காட்டப்பட வேண்டும்.

ஒவ்வொரு தேர்ச்சியும் அனைத்து மாணவர் களுக்கும் கட்டாயம் கணிப்பீடு செய்யப்பட வேண்டும் அன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவனுக்கு மறுநாள் செயல் படுத்த வேண்டும் மேலும் கணிப்பீட்டின் போது மாதிரிக்காக கடைகளில் விற்கப்படு கின்ற புத்தகங்களை மாத்திரம் வாங்கி செயற் படுத்துவதைத் தவிர்த்து அவரவர் வகுப்பு மாணவர்களின் நிலைக்கேற்ப வகுப்பாசிரியர் களால் தயாரிக்கப்படுகின்ற கணிப்பிட்டுக் கருவியே மிகவும் வினைத்திறனாகவும் பிரயோ சனமாகவும் அமையும்.

மேலும் ஒவ்வொரு வகுப்பில் அல்லது நிலைகளிலிருந்து அடுத்த நிலைக்கு அல்லது வகுப்பிற்கு மாணவர்களை இன்னொரு ஆசிரி யரிடம் பொறுப்பளிக்கும்போது ஒவ்வொரு வரும் தனது மாணவர்களினதும் அத்தியாவசிய கற்றல் தேர்ச்சி (ELC) பற்றிய அறிக்கையைப் பூரணப்படுத்தியே கையளிக்க வேண்டும். இதனை அதிபர் உறுதிப்படுத்திக் கொள்ளல்  சிறந்தது.

புதிதாக பொறுப்பு எடுக்கின்ற ஆசிரியர்கள் அதனை ஒவ்வொருவராக நன்கு பரீட்சித்து அறிக்கையில் உள்ளது சரியா என்பதை நன்கு ஆராய்ந்தே பொறுப்பெடுக்க வேண்டும். இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது குறித்த  தேர்ச்சிகளை பூரணமாக அடையாத மாணவர்கள் காணப்படுகின்ற போது அந்த வருட இறுதி விடுமுறை காலத்தில் அல்லது மேலதிக நேரத்தை பயன்படுத்தி முன்னைய ஆசிரியர் தேர்ச்சியடையாத மாணவர்களை தனியாக்கி அத்தேர்ச்சிகளை அடையச் செய்வ தற்குரிய வேலை திட்டங்களை நடைமுறைப் படுத்தி அவற்றை மேற்கொள்வதற்கான நட வடிக்கைகளை மேற்கொண்டு பூரணமாக தேர்ச்சி அடையச் செய்தே மாணவர்களை புதிய ஆசிரியரிடம் கையளிக்க வேண்டும். இது சரியாக நடைமுறைப்படுத்தப்படாமை யினாலேயே ஒவ்வொரு ஆசிரியரும் முன்னைய ஆசிரியர்களைக் குறை கூறுகின்ற வழக்கம் பாடசாலைகளில் நடைபெறுகிறது. இச்செயற்பாடுகள் பாடசாலைகளில் ஒழுங்காக முழுமையாக நடைபெறுகிறதா என கண் காணிப்பது அதிபரின் தலையாய கடமை யாகும்.

இந்த அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் (ELC) சம்பந்தமான முழு அறிவும் வகுப்பாசிரி யர் மட்டுமன்றி ஒவ்வொரு அதிபரும் அறிந்தி ருப்பது ஆரம்பக் கல்வியின் மேம்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக அமையும். மேலும் இத்தேர்ச்சியை மாணவர்கள் உரிய காலத்தில் அடைவதற்கு ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் களை வழங்குதோடு அவ்வாறு தேர்ச்சியடைய தவறிய மாணவர்களுக்கு பரிகார வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அதிபர் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் அதிபர் உதவி செய்ய வேண்டும்.

ஆரம்பப் பிரிவில் உள்ள மற்றொரு விசேட அம்சம் யாதெனில், செயற்பட்டு மகிழ்வோம்  எனும் வேலைத் திட்டமாகும். இதன் மூலம் ஆரம்ப பிரிவு மாணவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 நிமிடங்கள் உடற் பயிற்சியினை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். இதன் முக்கிய நோக்கம் பிள்ளைகளின் ஆரோக்கி யத்தை மேம்படுத்தி அவர்களின் கற்றல் செயற் பாடுகள் ஊக்குவிப்பதன் ஊடாக ஆரம்பக் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய் வதேயாகும். இதற்கு அதிபரின் ஒத்துழைப்பும் கண்காணிப்பும் மிகவும் அவசியமாகும்.

பாடசாலையின் தலைவர் வினைத்திறன் மிகுந்த ஒரு கல்வியியலாளனாக செயற்படுதல் வேண்டும். அதாவது ஒரு பலம்வாய்ந்த செழு மையான கற்போனாகத் திகழ வேண்டும். பாடசாலையின் தலைவர் இவ்வாறு செயற் படும் போதே பாடசாலையில் மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்நிலையில் வைத்துப் பேணமுடியும்.

கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நிகழும் போது பாடசாலையில் மாணவர்களின் அடைவு மட்டம் உயரும். இங்கு  அடைவு மட்டம் என்பது மாணவர்களின் அறிவில், திறனில், மனப்பாங்கில், விழுமியங்களில் ஏற்படும் உயரிய தேர்ச்சிகளை குறித்து நிற்கின் றது. ஆகவே கற்றலும் கற்பித்தலும் அர்த்தம் உடையதாக நிகழ்கின்றதா? என்பதனை கண்டறியவும் கற்றல் கற்பித்தல் செயன் முறையினை தொடர்ச்சியாக விருத்தியாக்கக் கூடிய செழுமை மிகு கல்வியியலாளராக பாடசாலை அதிபர் மிளிர்தல் வேண்டும்.

ஒரு அதிபர் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலமேனும் ஆரம்பப் பிரிவில் செயற்படவேண்டும் என்பது கல்வித் திணைக் களத்தின் எதிர்பார்ப்பாகும். இதன் மூலம் மேற்பார்வை, மதிப்பீடு மற்றும் கண்காணிப் புச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக மேற் கொள்வதன் மூலம் ஒரு சிறந்த அடைவு மட்ட விருத்தியை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் ஆரம்ப பிரிவுக்குப் பொருத்தமான ஒருவரை பகுதித் தலைவராக நியமிப்பதன் மூலமும் இங்கு மேற்கொள்ளப்படும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேலும் கண் காணிப்பதனூடாக மாணவர் அடைவு மட்டத்தை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

Mike Shomker என்பவர் Results எனும் நூலில் பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதற்காக 3 திறவுகோல்களைக் குறிப்பிடுகின்றார். அவையாவன

  1. அர்த்தம் உடைய அணியாகச் செயற்படுதல் (Meaningful Team Work)
  2. தெளிவானதும் அளக்கக் கூடியதுமான இலக்குகள் (Clear and Measurable Goals)
  3. தொடர்ச்சியான செயலாற்றுகை தொடர்பான தரவு சேகரிப்பும் அதன் பகுப்பாய்வும் (Regular collection and analysis of performance data)

இம்மூன்று விடயங்களையும் நோக்கும் போது பாடசாலையின் தலைவர் பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தை முன் னேற்றுவதற்காக ஆசிரியர்களுடன் சேர்ந்து இயங்குதல், ஆசிரியர்களை அணியாக இயக்குதல், தெளிவான இலக்குகளை நிர்ணயித்து அவை அடையப் பெறுவதை உறுதிப்படுத்துதல், பாடசாலை செயற்பாடு கள் தொடர்பாக தொடர்ச்சியான தரவு சேகரிப்பிலும் அதனைப் பகுப்பாய்வு செய்து தகவல்களை பெற்றுக் கொள்வதிலும் அதிபர் அக்கறை உடையவராக இருத்தல் வேண்டும்.

ஆரம்பப் பிரிவில் தரம்-5 என்பது மிக முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண் டிய வகுப்பாகும். இலங்கையில் தரம் 5 புலமைப் பரிசில் பரகட்சை நாடளாவிய ரீதியில் பொதுவாக நடத்தப்படுகின்றன. இப் பரீட்சையின் பெறுபேறானது ஒவ்வொரு பாடசாலையினையும் கல்வி வலயத்திலும் மாகாணத்திலும் ஆரம்பக் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்திக் காட்டுகின்ற ஒரு முக்கிய குறிகாட்டியாகத் திகழ்கின்றது. இதில் மிக முக்கியமாக ஒவ்வொரு பாட     சாலை அதிபரும் முழு மூச்சுடன் கூடிய செயற்பாடுகளை தரம் 3 தொடக்கம் தமது பாடசாலைகளில் முன் கொண்டு செல்ல வேண்டும்.

பாடசாலையின் அதிபர் ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் மற்றும் ஆசிரியர்களுக்கு சரியான வழிகாட்டல்களையும் அவ்வப் போது தேவையான சகல உதவி ஆலோசனை களையும் உரிய நேரத்தில் வழங்குவதோடு தத்தமது பாடத்துறையில் தேர்ச்சி பெற்று விளங்குகின்ற இடைநிலை ஆசிரியர்களின் உதவியையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகை யில் அவர்களை இனங்கண்டு பயன்படுத்தும் திறனையும் கொண்டவராக இருக்க வேண் டும். உதாரணமாக புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் 1 இல் 14 திறன்களை அடிப் படையாகக் கொண்டு வினாத்தாள் அமையப் பெறுவதனால் கணிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு தொடரான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அடைவு மட்டத்தை உயர்த்தலாம். இவ்வாறு ஒவ்வொரு பாடத்திலும் மாணவர் கள் இடர்படுகின்ற பாட பரப்புகளை இனங் கண்டு அதற்கேற்றாற் போல் கற்றல் கற்பித் தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு அதிபரும் தமது ஆசிரியர்களுக்கு வழிகாட்டுகின்ற போது ஆரம்பப்பிரிவு அடைவு மட்டத்தை உயர்த்தலாம்.

கல்விக்கான தலைமைத்துவம் வினைத் திறனாக இருப்பதற்கு பல்வேறு திறன்களை கொண்டிருப்பது அவசியமானது என தலைமைத்துவம் தொடர்பான ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

Begly (1995) என்பவரும்  Leithwood (1987) என்பவரும் மேற்கொண்ட ஆய்வுகளின்படி அதிபர்கள் தமது தலைமைத்துவ செயற்பாடு கள் தொடர்பாக பல்வேறு பரிமாணங்களை கொண்டவர்களாக காணப்படுகின்றனர் எனவும் முகாமையாளர், போதனா தலைவர், நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைத்து கொடுப்பவர், பாடசாலைக்கும் சமூகத்திற் கும் வசதி செய்து கொடுப்பவர், பிரச்சினை களைத் தீர்ப்பவர் போன்ற பரிமாணங்களை கொண்டவர்களாக காணப்படுகின்றார் எனவும் குறிப்பிடுகின்றனர்.

(தொடரும்)