அமெரிக்க ஜனாதிபதி மீது விசாரணை, பதவி விலகுமாறும் கோரிக்கை

234

பதவிக்காலம் முடிவடையும் தறுவாயிலுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அமெரிக்க நாடாளுமன்றம் முன்னிலையில் விசாரணை செய்யும் தினம் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்க ஜனாநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் நாடாளுமன்றத்தில் ஜனாபதியை விசாரணை செய்வது தொடர்பாக கலந்துரையாடப்படும் என ஜனநாயக்கட்சியன் உறுப்பினராக வெப் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என குடியரசுக் கட்சி உறுப்பினர் பாத் டோமி தெரிவித்துள்ளார். எமது நாட்டிற்கு மிகச் சிறந்த தெரிவாக இருக்கும் என நான் நம்புவது முடிந்தளவு மிக விரைவாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு விலகிச் செல்வதுதான் என என் பீ ஸி தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்ட நிகழ்வுகளில் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என வத்திக்கான் பாப்பரசர் கோரியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல்களில் பொலிஸ் வீரர் உட்பட ஐவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.