ஒவ்வொரு கிராமத்திலும் வாசிகசாலை திறக்கத் திட்டம்

53

முசலி வாசகர் வட்டத்தினால் முசலிப் பிரதேசத்திலுள்ள அனைத்து கிராமத்திலும் வாசிகசாலை திறக்கும் முயற்சியின் முதல் வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதலாவது வாசிகசாலை பொற்கேனி கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 10.01.2021 திறந்து வைக்கப்பட்டது

அமைப்பின் பிரதித் தலைவர் P.M.முஜீபுர்றகுமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முசலி வாசகர் வட்டத்தின் தலைவர் சட்டத்தரணி எம். ஹஸ்மி மற்றும் அதன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

வாசிப்பின் முக்கியத்துவம், புத்தகங்களின் சிறப்பு, பெறுமதி மற்றும் இதன் இன்றைய தேவை தொடர்பில் ஆசிரியரும் அதிபருமான M.K.M. லாபிர் அவர்கள் உரையாற்றினார். புதிதாக திறக்கப்பட்ட வாசிகசாலைக்கு முசலி வாசகர் வட்டத்தின் நிருவாக செயலாளரும் முசலி பிரதேச சபை பிரதி தவிசாளருமான முகுசீன் றயீசுதீன் அவர்களினால் ஒரு தொகுதி புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.