அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கம்?

227

அமெரிக்காவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜோன் பைடன் வெற்றிபெற்றதை அடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் நிறைவுக்கு வருகிறது. எனினும் தேர்தல் பெறுபேறுகளில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக ட்ரம்ப் கூறிவருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் அமெரிக்க காங்கிரஸ் வளாகத்திற்குள் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் அங்கு அட்டகாசங்களை புரிந்ததுடன், ஐவரை கொலை செய்து பெரும் புரளியைக் கிளப்பி விட்டிருந்தனர்.

இந்த அத்துமீறல்ளை புரிந்தவர்கள் உள்நாட்டு தீவிரவாதிகள் என ஜோன் பைடன் தெரிவித்திருந்தார்.  இத்தாக்குதலை ஜனாதிபதி ட்ரம்மே தூண்டினார் என பலரும் குற்றம் சாட்டிவருகின்றனர்.

ஜோன் பைடன் வென்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு காங்கிரஸ் வழங்கும் ஓப்புதலுக்கு தடையேற்படுத்துமாறு ட்ரம்ப் வேண்டியதை தனது துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிறைவேற்றாத காரணத்தினால் மைக் பெனஸ் மீது ட்ரம்ப் கடும் கோபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் மீதான தாக்குதல் பற்றி ஜனாதிபதி ட்ரம்பை விசாரணை செய்வது குறித்தம் அவரை பதவி நீக்கம் செய்வது குறித்தும் நடடிவக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. ட்ரம்பை பதவிநீக்கம் செய்யக்கூடிய அரசியலமைப்பின் 25 ஆவது திருத்தத்தை செயல்படுத்துவதை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரிக்கவில்லை.

ஆயினும் இத்தெரிவுக்கு செல்வது அல்லது காங்கிரஸில் ட்ரம்பை விசாரணை செய்யும் பட்சத்தில் ஜனாதிபதி நாட்டை ஆபத்திற்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்ற வகையில் துணை ஜனாதிபதியின் அணியினரிடத்தில் தயக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் ஆரம்பத்தில் ட்ரம்ப் இற்காக வாதாடிய வழக்கறிஞர்கள் இம்முறை வாதாடப்போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ட்ரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞரும் இதில் உள்ளடங்கிறார்.

காங்கிரஸில் ஜனாதிபதியை விசாரணை செய்வதை தடுக்கும் நோக்கில் ட்ரம்ப் உம் அவரது ஆலோசர் ஜார்ட் குஷ்னரும் நெருக்கமான வட்டாரங்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பத்துள்ளனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலூஸி நாட்டின் ஜனாநாயகத்தில் அத்துமீறியோரை விசாரணை செய்யவேண்டும் எனக் கோரியுள்ளார். நடைபெற்றவை ஜனாதிபதியின் தூண்டுதலினால் இடம்பெற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.