இடைவிலகிய மூன்று இலட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

66

பாடசாலைகளை விட்டு இடைவிலகிய மூன்று இலட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீத்தா அரம்பேபொல தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள தொழில் நுட்பக் கல்லூரிகளைப் பார்வையிடச்சென்ற  அவர், அங்கு நடைபெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் இதுபற்றித் தெரிவித்துள்ளதாவது-
பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள் உட்பட பல்வேறு நிறவனங்களுக்கூடாக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்திற்காக அரசாங்கம் 9900மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.

இயன்றளவு தொழில் பயிற்சிகளை வழங்கி இளைஞர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் படி ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறினார்.