மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

105

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 31 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் இன்று (13) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கமைய, மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் (12) மாத்திரம் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த தொற்றாளர்களுள் மூன்று நபர்கள் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசிச்சைக்காக சென்ற போது அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான PCR பரிசோதனைகளை மேற்கொண்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 31 நபர்கள் கொரோனா தெற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொதுமக்களை மிக அவதானமாக செயற்படுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிந்துரை விடுத்துள்ளார்.