புத்தளம், தப்போவ இராணுவ முகாம் தளபதிக்கு ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளை தலைவரால் புனித அல் குர்ஆன் வழங்கி வைப்பு

117

புத்தளம், தப்போவ இராணுவ முகாமிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதி லெப்டினன்ட் கேணல் ரஞ்சித் அத்தநாயக்கவுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை தலைவரால் புனித அல் குர்ஆனின் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதியொன்று வழங்கி வைக்கப்பட்டது.

புத்தளத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாட வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு புனித அல் குர்ஆனின் சிங்கள மொழி பெயர்ப்பின் பிரதி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.